- Saturday
- November 22nd, 2025
கூகுள் நிறுவனம் இலங்கையில் கூகுள் வீதிப் படங்களை வெளியிட்டுள்ள நிலையில், அதில் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளைப் பார்வையிட முடியாதுள்ளது. கூகுள் வீதிப் படங்கள் எடுப்பதற்காக கடந்த காலங்களில் யாழ்ப்பாண வீதிகளில் கூகுள் நிறுவன கார் ஒன்று வீதிகள் அனைத்திலும் சென்றது. ஆனால், அந்தக் கார் வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் செல்லவில்லை என்பது...
படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதியன்று கையளிக்கப்படவுள்ளது. வவுனியாவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி இதனை அன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வித்தியாவின் பெற்றோர்களிடம் கையளிக்க உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் பொறியிலாளர்...
காச நோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியாகிய இன்று, சர்வதேச காச நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. டியூப்பர்குளோசிஸ் பாக்டீரியா' நுண்கிருமிகளால் காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது. இது பொதுவாக நுரையீரலை பாதிக்கும். ஆனாலும் மூளை, கிட்னி, முதுகெலும்பு ஆகிய உடலின்...
கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த எமது உறவுகளை நினைவுகூறத்தக்க வகையில் பொது நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டுமென நான் நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை கொண்டு ந்திருந்தேன். எனது இந்த கோரிக்கைக்கு அமைவாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க அவர்களும் கடந்த 08ம் திகதி நாடாளுமன்றத்தில்குரலெழுப்பியிருந்தார். அந்த...
2016 ஆம் ஆண்டின் முதல் பூரண சந்திர கிரகணம் இன்று (23) நிகழவுள்ளது.பௌர்ணமி தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது' என ஆர்த்த சீ கிளார்க் நிறுவனத்தின் பேராசிரியர் சந்திர ஜயரத்ன, தெரிவித்தார். இன்று மாலை 3.09 மணியளவில் ஆரம்பிக்கும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கை மக்கள் 6.40 மணியளவில் காணமுடியும் என...
பேஸ்புக் மூலம் பெண்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களிடம் காதல் வலைவீசி நகைகளை அபகரித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியாவில் உள்ள பெண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி தன்னை ஒரு பணக்காரனாக காட்டி அந்த பெண்ணைக் காதலிப்பதாக கூறி...
கிளிநொச்சி பன்னங்கண்டி பாடசாலையின் அதிபர் தனது பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஒன்பது மாணவியுடன் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்து கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை பாடசாலைக்கு சென்ற அதிபர் குறித்த மாணவியின் மூத்த சகோதரியை பாடசாலைக்கு வருமாறு அவர் பொறுப்பாக இருந்து நடத்துகின்ற தொண்டு நிறுவனம் ஒன்றின் மாலை...
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பரவும் தோல் நோய் தொடர்பில், ருஹுனு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுஜீவ அமரசேன விளக்கம் அளித்துள்ளார். இந்த காலப்பகுதியில் குழந்தைகள் உடலில் வியர்கூறு ஏற்பட கூடிய ஒருவகை நோய் பரவி வருகிறது.இதற்கு கிரீம் போன்றவை பயன்படுத்துவதால் பயன் ஏதும் இல்லை.இவை இரண்டு அல்லது...
காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி மற்றும் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மிக விரைவில் சொந்த இடங்களில் இயங்கும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகும் 2 ஆம் தவணை முதல் இந்தப் பாடசாலைகளை சொந்த இடங்களில் இயக்குவதற்கு கல்வித்திணைக்களமும், பாடசாலைகளின் நிர்வாகத்தினரும் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை...
நீர்வேலி மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக திருடர்களின் தொல்லை அதிகாரித்துள்ளது. இந் நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை வெடி கொழுத்தி திருடர்களை துரத்திய சம்பவம் கோப்பாயில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது நேற்றுமுன்தினம் அதிகாலை 1 மணியளவில் கோப்பாய் வடக்கில் திருடர்களின் நடமாட்டத்தால் நாய்கள் குரைத்ததால் விழிப்படைந்த மக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து ஏனையோரையும்...
சாவகச்சேரி நகர் பகுதியில் அழகுசாதனப் பொருள் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் இளைஞரொருவர் இருவேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் 2 மாணவிகளை காதலித்ததன் விளைவாக அவர்கள் இருவரும் தற்கொலைக்கு முயற்சித்து ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவத்தை அறிந்த குறித்த இளைஞன் உடனடியாகவே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்...
பலாலி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யாமல் இருக்கும் ஓடுபாதையை தரமுயர்த்தும் செயற்பாடுகளுக்கு இந்தியா – இலங்கை தரப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பலாலி விமானநிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கு வலிகாமம் வடக்கு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதையடுத்தே விரிவாக்கல் திட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து, இந்திய விமான தொழிநுட்பப் பிரிவைச்சேர்ந்த ஐந்துபேர் அடங்கிய குழுவொன்று...
தற்போது நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டாம் எனவும் இக்காலநிலையானது இன்னு சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் காலநிலை மத்திய ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பகல் பொழுதுகளில் நீங்கள் கட்டாயம் விளையாட வேண்டும் என எண்ணினால் அதற்கு வெப்பதிலிருந்து பாதுகாப்புத் தேவை என மருத்துவ அதிகாரி லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இந்த வெப்பமானது குழந்தைகளின் இதயம்...
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்ற ரீதியில், அவர்களுக்குக் கரம்கொடுத்து அவர்கள் வாழ்வில் முன்னேற்றம்காண வழிவகை செய்யவேண்டும் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், ‘ஒரு காலத்தில் பெண்கள் கல்வி கற்கத் தடை, ஏனைய ஆடவர்கள்...
நேற்று காலை வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஸிகா வைரஸ் பரிசோதனை செய்யும் திட்டத்தினை சுகாதார அமைச்சர் வைத்தியர் பாலித மஹிபால அவர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ஆரம்பித்துவைத்தார். குறிப்பாக தென் அமெரிக்காவில் ஸிகா வைரஸ் பரவிவருவதுடன் அங்கு பெரும் நெருக்கடிநிலை நிலவி வருகின்றது. இதனையடுத்து அங்கிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் ஸிகா வைரஸ் தொற்றுக்கு...
யாழ். ஓட்டுமடப் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த பாடசாலை மாணவன், ஒருவன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கைதான மாணவன், யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்விகற்பவர் என பொலிஸார் கூறினர். இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் ஓட்டு மடப் பகுதிக்கு சிவில்...
கூகுள் வரைப்படத்தில் (Google Maps) இப்போது இலங்கை பாதை படம்(Street view) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. உலகம் முழுவதும் வசிக்கும் உள்ள மக்கள் அனைவரும் இப்போது தங்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியில் இருந்து 360-டிகிரியில் அழகான படங்களில் இலங்கையை பார்வையிட முடியும். கிடைக்கும் பாதை படத்தை(Street view) மக்கள் ஆராய்ந்து தங்கள் செல்ல...
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்ட 18வயதுடைய இளம்பெண் ஒருவர் மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று சித்தங்கேணி பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, தனியார் வகுப்பு முடிந்து வீடு திரும்புவற்காக சித்தங்கேணி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த வேளை மோட்டார் சைக்கிளில் முகம் புலப்படாதவாறு தலைக்கவசத்தை முழுமையாக அணிந்து...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர்களின் 32ஆவது மாநாட்டில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. இந்த மாநாடு, ஹிக்கடுவையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதேவேளை, இன்று 23ஆம் திகதி புதன்கிழமையன்று இடம்பெறும், வாராந்த அமைச்சரவை மாநாட்டுக்கு வருகைதந்து, மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளைப் பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைக்குமாறு அம்மாநாட்டில் பங்கேற்றிருந்த...
இலங்கையில் இடம்பெற்ற போரின் போதான சம்பவங்கள் குறித்து நம்பத்தகுந்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐ.நாவின் வழிகாட்டுதல்களுக்கு அமைய நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது இன்றியமையாத விடயம் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ - மூனின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
