சாவகச்சேரி வெடிபொருள் மீட்பு : இராணுவச்சிப்பாயிடமும் விசாரணை

சாவகச்சேரியில் தற்கொலை குண்டு தாக்குதல் அங்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவச்சிப்பாய் ஒருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை குண்டு தாக்குதல் அங்கி உள்ளிட்ட வெடி பொருட்கள் அடங்கிய வீட்டை சந்தேகநபரான ரமேஷ் எனப்படும் எட்வேட் ஜுலியனுக்கு பெற்றுக்கொடுத்தவர் இராணுவத்தில் பணியாற்றும் ஒருவரேின் சகோதரரே என ஆங்கில நாளிதழ் ஒன்ற செய்தி வெளியிட்டுள்ளது.

சாவகச்சேரி வீட்டில் கண்டு பிடிக்கப்பட்ட ஆயுதங்கள் விடுதலை புலிகளால் கைவிடப்பட்டவை அல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட அந்த பகுதியில் பலமுறை தேடுதல்கள் நடத்தப்பட்டிருந்தன்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிவதர்சன் என்பவரின் உதவியுடன் ரமேஷ் இந்த வீட்டில் குடியேறியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிவதர்சன் என்பவர் கனரக வாகன சாரதி எனவும் அவரே குறித்த வீட்டை ரமேஷ் என்பவரக்கு பெற்றுக்கொடுத்ததாகவும் தெரிய வருகின்றது.

சிவதர்சன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனம் ஒன்றில் சாரதிகளாக பணியாற்றியுள்ளனர்.

இதேவேளை ரமேஷ் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து சிவதர்சன் காணமல்போயுள்ளார்.சிவதர்சனின் சகோதரா் போர் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த அரசாங்கத்தினால் இராணுவத்தில் தமிழர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டபோது இணைந்து கொண்டுள்ளார்.

தற்பொது வடக்கு மாகாண இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றும் அந்த இராணுவ சிப்பாயும் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Posts