வடக்கு மாகாணசபையின் தீர்வுத் திட்டம் தாமதம்!

வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வுத் திட்டம், நாளை வியாழக்கிழமை நடைபெறும் மாகாண சபை அமர்வில் சமர்பிக்கப்படாது என்று தெரியவருகின்றது. அரசியல் தீர்வுத் திட்டம் இன்னமும் முழுமைப்படுத்தப்படாமையால் எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறும் விசேட அமர்விலேயே சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அரசினால் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் வடக்கு...

பாண் விலையை அதிகரித்தமைக்கான உண்மைக் காரணம் தெரியுமா?

அரிசிக்கான நுகர்வை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாகவே அண்மையில் பாணுக்கான விலை அதிகரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றினை அடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
Ad Widget

இலங்கையர்கள் குறித்த தகவல்களை பெறுவதற்காக தொலைபேசி இலக்கம்

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இலங்கையர்கள் எவரும் இல்லை என்று பெல்ஜியத்திற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். அந்த நாட்டில் இருக்கும் இலங்கையர்கள் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு 003223445585 அல்லது 0032471872745 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும் என்றும் இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் நிகழ்ந்த...

யாரைக் கொன்றாவது போரை முடி என்றார் மஹிந்த! – சரத் பொன்சேகா செவ்வி

யாரை கொலை செய்தாவது போரை முடி என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். என்னையும் மீறி கனிஷ்ட நிலை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் கட்டளையிட்டார். இதனால் தான் போர் குற்றப் பிரச்சினைகளும் வெள்ளைக் கொடி விவகாரமும் ஏற்பட்டது. என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு நாளிதழுக்கு வழங்கிய விசசேட செவ்வியில் அவர்...

அமைச்சர் விஜயகலாவின் புதல்விகளின் நடன அரங்கேற்றத்தில் மைத்திரி, ரணில், சம்பந்தன் பங்கேற்பு!

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் புதல்விகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. பரதநாட்டிய மாணவிகளான பவதரணி மகேஸ்வரன், பவித்ரா மகேஸ்வரன் ஆகியோரது பரதநாட்டிய அரங்கேற்றமே நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்,...

காணாமல் போனோருக்கான ஆணைக்குழு அடுத்த வாரம் வடக்கில்

வடக்கில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை இம் மாத இறுதியில் நிறைவு செய்ய முடியும் என, காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் வடக்கின் சில பகுதிகளில், முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கான அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி...

சொட்டு நீரும் எங்கள் சொத்தே!

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ் மாவட்ட பிராந்திய அலுலகத்தின் ஏற்பாட்டில் சுத்தமான குடிநீருக்கான மக்களின் நலன் என்னும் கருப்பொருளில் உலக நீர் தின நிகழ்வின் மாபெரும் நடைபவனி நேற்று இடம்பெற்றது. யாழ் பண்ணையில் அமைந்துள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அலுலகத்தில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை இந்த நடை பவனி...

பாணின் விலை அதிகரிப்பு

450 கிராம் பாணின் விலையை நான்கு ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தெல்லிப்பளையில் 700 குடும்பங்கள் மீளக்குடியமர விண்ணப்பம்

கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இராணுவ உயர் பாதுகாப்பு வலய பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட 701.5 ஏக்கர் நிலப்பரப்பில் 486.5 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 700 குடும்பங்கள் மீளக்குடியமர விரும்பம் தெரிவித்து, தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் விடுவிக்கப்பட்ட...

சங்கானை வைத்தியசாலையில் வைத்தியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்

'வலிகாமம் மேற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள சங்கானை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மக்களுக்கான சேவையை அர்ப்பணிப்புடன் ஆற்றிவருகின்றனர்' என வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியதிகாரி தெரிவித்தார். சங்கானை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் தனியாக கிளினிக் நடத்துவதால் பெரும்பாலான நேரங்களில் வைத்தியர் வைத்தியசாலையில் இருப்பதில்லையென பொதுமக்கள் முறைப்பாடுகள் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அந்தச் செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்...

கர்ப்பிணிப் பெண்களுக்கு போசனைப் பொதிக்கு பதிலாக வவுச்சர்

கர்ப்பிணிப் பெண்களுக்காக மாதாந்தம் வழங்கப்படும் போசனைப் பொதிக்குப் பதிலாக வவுச்சர் ஒன்றைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை, எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேற்படி போசனைப் பொதியைப் பெற்றுக்கொள்ளும் போது, தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கர்ப்பிணிப்...

சரத் பொன்சேகாவைப் புகழ்ந்த வடக்கு முதல்வர்!

சரத் பொன்சேகா தனது சுயநலனுக்காகவே அனைத்துலக விசாரணைக்கு ஆதரவளித்துள்ளார். இவர் முன்னைய அரசாங்கத்தில் இராணுவ நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்குப் பழிதீர்க்கும் முகமாகவே அனைத்துலக விசாரணைக்கான ஆதரவை வழங்கியுள்ளார். இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் Manekshaw எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார். இதனை மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. பீல்ட் மார்சல் சரத்...

பயணியின் முன்மாதிரியான செயற்பாடு : போட்டி போட்டு ஓடிய சாரதிகளின் அனுமதிப்பத்திரம் பறிப்பு!!

இன்று காலை கல்முனை நோக்கி புறப்பட்ட அரச பேருந்தும், தனியார் பேருந்தும் நிறைவான பயணிகள் இருந்தும் A9 சாலையில் ஒன்றை ஒன்று போட்டி போட்டு வேகமாக ஓடி கொண்டிருந்ததால் , பயணி ஒருவர் கொடிகாம்ம் பொலிஸ்க்கு தெலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததை அடுத்து கொடிகாம சந்தியில் வைத்து பொஸிஸ் இனால் இரு சாரதிகளுக்கும் எச்சரிக்கப்பட்டு ,...

புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு பூர்த்தியடையும்

தமிழ் மக்கள் பேரவை தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தீர்வுத்திட்ட வரைபை முழுமையாக்குமெனவும், அதன் பின்னர் அரசாங்கத்திற்கு கையளிக்கும் எனவும் பேரவையின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த விடயம்...

சந்திரிகாவின் மகளைக் கொல்ல மஹிந்த தீட்டிய திட்டம்!

தனது மகள் யசோதராவை கொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டம் தீட்டியிருந்தார் என்று குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. ஹூனுப்பிட்டியவில் நேற்று நடந்த சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கான தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியத போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 'கடந்த 9 ஆண்டுகளாக தான் அரசியலிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும், கட்சியிலிருந்த...

வீடமைப்பு உதவி – விண்ணப்பங்களைக் கோருகிறது புனர்வாழ்வு அமைச்சு!

யுத்தத்தால் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் 65,000 வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்றுக் கொள்ள புனர்வாழ்வு மீள் குடியேற்ற அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது. காணி உறுதிப்பத்திரம், அரசாங்க காணி அனுமதிப்பத்திரம் இல்லாமல் பத்து வருடங்களுக்கு மேல் ஒரு காணியில் வசிப்பவர்களும் இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும் என...

புத்தாண்டுக் காலத்தில் வரப்போகும் புதுப் பிரச்சினை!

கடந்த சில வாரங்களாக மின்சாரத் தடைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு எதிர்வரும் சிங்கள- தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மற்றொரு புதுப்பிரச்சினை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் வற்றிப் போயுள்ளன. இதன் காரணமாக நகரப்...

கொழும்புத்துறை காணிக்குள் மிதிவெடிகள்!

கொழும்புத்துறை- வசந்தபுரம் பகுதியில் தனியார் காணியொன்றில் இருந்து இரண்டு மீதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது. கைக்குண்டு மீட்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து காணியை துப்பரவு செய்யும் போது மீதிவெடியொன்று வெடித்ததுடன் அதில் ஒருவர் காயமடைந்திருந்தார். இந்த நிலையிலேயே குறித்த பகுதியில் விசேட அதிரடி படையினர் மற்றும் குண்டு...

கிளிநொச்சி கோரமோட்டை ஆற்றில் சுழியில் அகப்பட்டு இளைஞன் பலி!

கிளிநொச்சி - கோரமோட்டை ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சுழியில் அகப்பட்டு மரணமானார். இவர் நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் சுழியில் அகப்பட்டதாகவும், மாலை 5.18 மணியளவில், இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மலையாளபுரத்தை சேர்ந்த இருபது வயதான ஸ்டான்லி என்ற இளைஞரே மரணமானதாக தெரியவருகிறது. இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி...

மாணவி தற்கொலை

சாவகச்சேரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாததால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சாவகச்சேரி மறவன்புலோவில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி மறவன்புலோ கிழக்குப் பிரதேசத்தில் வசித்து வரும் ரவீந்திரன் நிலோஜினி என்ற 16 வயது மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1...
Loading posts...

All posts loaded

No more posts