- Saturday
- November 22nd, 2025
கொழும்பில் அமைக்கப்படவிருந்த கிரிஷ் சதுக்கத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்காக 45 கோடி ரூபாவை தரகுப் பணமாக நாமல் ராஜபக்ஷ பெற்றுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை நிதி மோசடி தடுப்புப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பு புறக்கோட்டையில் ஹோட்டல்கள், அலுவலகங்கள் மற்றும் வீடுகள் கொண்ட கிரிஷ் சதுக்கம் ஒன்றை அமைக்க இந்திய...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 6.5 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் இருவர் கடற்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த படகை மறித்து சோதனையிட்டபோது, மூன்று பைகளில் பொதி...
யாழ் போதனா வைத்தியசாலை தாதியர்கள் மேற்கொண்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பார்வையாளர் நேரம் முடிந்ததன் பின்னர் நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்க்க சென்ற போது கடமையிலிருந்த ஆண் தாதியர், உங்களது நேரம் முடிந்து விட்டது நீங்கள் சென்றுவிட்டு மாலை வந்து பார்க்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் தாதியது பேச்சை...
பளை பிரதேசத்தில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த தாயும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க முயன்ற தாயும், தவறி விழுந்ததில் இருவரும் உயிரிழந்தனர். இருவரது சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி ஜெயக்குமரன் எழுதிய "ஒரு கூர்வாளின் நிழல் " (போராட்ட குறிப்புக்கள்) மற்றும் "போர்க்காலம்" (கவிதை தொகுப்பு) ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று மாலை 3 மணியளவில் பொன். காந்தன் தலைமையில் இந்த நிகழ்வு...
"நாட்டில் உறுதிசெய்யப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பன காரணமாக கூட்டங்கள் நடாத்துவதற்கும் ஊர்வலங்களை மேற்கொள்வதற்கும் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. அதனை வழிநடாத்தும் தலைவர்கள் வெள்ளை வான்களை அனுப்பி ஆட்களை காணாமல் செய்ததைப் போன்று செய்வது தற்போதைய அரசின் கொள்கையல்ல. எவ்வாறான கோஷங்களை முன்வைத்தாலும் எதிர்வரும் 5 ஆண்டுகள் நிறைவடையும் வரை இந்த அரசை மாற்றுவதற்கு எவராலும்...
"நாம் இந்த நாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். அதனடிப்படையில், தமிழீழம் கேட்பதற்கான உரிமை எமக்குண்டு. அதனடிப்படையிலேயே ஒரு காலத்தில் நாம் தனித் தமிழீழத்தைக் கேட்டோம். இன்று ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வைக் கோருகின்றோம். இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வைக் கேட்டதும் தமிழ் மக்களே. அதிகாரப் பகிர்வை பெரும்பான்மை மக்களும் கேட்கவில்லை முஸ்லிம் மக்களும் கேட்கவில்லை....
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று சனிக்கிழமை மாலை வெளியிட்டப்பட்டது. முற்கொண்டு கிடைத்த தகவலின் படி யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் 15 பேர் 9ஏ சித்தியையும் 30 மாணவர்கள் 8 ஏ சித்தியையும் பெற்றுள்ளனர். 9 ஏ சித்திபெற்ற 15 மாணவர்களில் 8 பேர் தமிழ் மொழி மூலத்திலும் 7...
புனர்வாழ்வு வழங்குமாறு வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் நேற்று வெள்ளிக்கிழமை சிறைச்சாலை ஆணையாளர் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவார் என எதிர்பார்த்ததாகவும், அவ்வாறன சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தினால் தாம் புனர்வாழ்வு என்ற முடிவிற்கு வந்துள்ளதாகவும் தமிழ்...
நாம் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அசமந்தமே சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க முடியாமைக்கு காரணம் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வடக்கு மாகாணத்தில் நீண்ட...
எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து (21) பாணின் விலையை 3 அல்லது 5 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரிமா நிறுவனம் கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை 7 ரூபா 20 சதமாக அதிகரித்ததாலும் பின்னர் நுகர்வோர் வாரத்தை முன்னிட்டு மீண்டும் அது குறைக்கப்பட்டது. நுகர்வோர் வாரத்தை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்டிருந்த கோதுமை மாவின் விலையை...
முன்பள்ளி கல்வி ஆசிரியர்களுக்கான நான்காவது டிப்ளோமா பட்டமளிப்பு விழா இன்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. ஆறுதல்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில், நிறுவன இணைப்பாளர் சுந்தரம் திவகலால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன், கல்வி அமைச்சர் குருகுலராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதன்போது, 515 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ்...
புத்தர் சிலை இருந்த இடத்தில், திடீரென அந்த சிலையை தூக்கிவிட்டு அந்த இடத்தில் நாகத்தின் சிலையை வைத்த சம்பவம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது. இலங்கை மத்திய கலாசார நிதியம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுப் பிரிவு ஆகியன இணைந்து கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரிவின் தொடக்க விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்...
யாழ். போதனா வைத்தியசாலை தாதியொருவரை, யாழ்.பொலிஸார் விசாரணைக்கு என அழைத்து பின் கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். போதனா வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களாலும் நேற்று வெள்ளிக்கிழமை (18) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம், இரண்டாவது நாளாக இன்று சனிக்கிழமை (19) தொடர்ந்து இடம்பெறுகிறது. அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தினரும் வைத்தியசாலையின் அனைத்து ஊழியர் சங்கத்தினரும்...
இலங்கைக்கு நேர் மேலே சூரியன் உள்ளதால் வெப்பமான காலநிலை ஏப்ரல் வரைத் தொடரும் எனவும் நாட்டில் வெப்பநிலை பகலில் 3 பாகை செல்ஸியஸினாலும் ஆகவும் இரவில் 2 பாகை செல்ஸியஸினாலும் அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் வெப்பநிலை 26.5 பாகை செல்ஸியஸ்ஸுக்கும் 28 பாகை செல்ஸியஸ்ஸுக்கும் இடையில் வேறுபடுவது வழமை. அதிக வெப்பம் உணரப்படுவதற்கு...
'2016ஆம் ஆண்டின் முதல் பூரண சந்திர கிரகணம் 23ஆம் திகதி நிகழவுள்ளது. பௌர்ணமி தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது' என ஆர்த்த சீ கிளார்க் நிறுவனத்தின் பேராசிரியர் சந்திர ஜயரத்ன, நேற்று தெரிவித்தார். இந்த சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.09 மணிமுதல் 7.24 மணிவரை நிகழும் என தெரிவிக்கப்படுகின்றது....
வரட்சி காலநிலை இன்னும் சில மாதங்கள் தொடர்ந்தால் மின்சார நெருக்கடி ஏற்படும் என்றும் அதன் காரணமாக, நிலக்கரி மற்றும் அனல் மின் உற்பத்திகளை அதிகரிக்கும் தேவை ஏற்படும் என இலங்கை மின்சாரசபை, தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க ஆகியோர் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி உண்மைகளை கண்டறியும் பணிகளை மேற்கொள்வோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்ச்சியாக பல கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில், அரசாங்கம் இந்த...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு ஒரு சில மாதங்களில் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது குறித்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பத்து சந்தேக நபர்களும் நீதிமன்றில்...
சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முயற்சித்த ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் வேறு ஒருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உரும்பிராய் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
