Ad Widget

கோத்தபாயவின் கொலைகளை அம்பலப்படுதவுள்ள புலனாய்வு அதிகாரி!

இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை வழங்க, கடற்படையின் சிரேஷ்ட புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை, பாடசாலை மாணவர்களை கடத்தி சென்று கொலை செய்தமை மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல குற்றங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு ஆயுத்தமாக இருப்பதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குற்றப் புலனாய்வு பிரிவு முன்னிலையில் செயற்கைகோள் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் உதவியுடன் சாட்சியமளிப்பதற்கு இவர் ஆயத்தமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரவிராஜ் கொலை மற்றும் திருகோணமலை பாடசாலை மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சாட்சி வழங்குவதற்கு குறித்த அதிகாரி முன்வந்துள்ளமையால், சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரிகளிடமிருந்து உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறக்கமைய குறித்த அதிகாரி தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் கடற்படை உயர் அதிகாரி ஒருவரிடம் வினவிய போது, அந்த அதிகாரி தற்போது வரையில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இடம்பெற்ற ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவராகும்.

அவர் நாட்டை விட்டு தப்பி செல்வதற்காக வீசா பெற்றுக் கொண்ட முறையில் சந்தேகம் உள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Related Posts