- Sunday
- November 23rd, 2025
சாவகச்சேரி டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர் சுவிஸில் வசித்து வருகின்றார். இவர் 2012ஆம் ஆண்டு தனது சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்தார். அப்போது அவரின் வீட்டிற்கு முன்னால் வேப்பமரம் ஒன்று நின்றுள்ளது. அவர் மீண்டும் சுவிஸிற்குச் செல்லும்போது வீட்டில் தனது உறவினர் முறையான ஒரு குடும்பத்தினை வாடகைக்கு குடியமர்த்திவிட்டுச் சென்றுள்ளார். சில தினங்களுக்கு முன்பு...
ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டாகும். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த சூழ்நிலையும் இன்று வடக்கில் இல்லை என்று யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்தார். பலாலி பாதுகாப்பு தளத்தில் நேற்று ஊடகவியலாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இடையில் விசேட கலந்துரையாடல்...
வடக்கு கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்க தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய தொழில் அதிபரின் சர்வதேச நிறுவன அதிகாரிகள் இந்த வாரம் இலங்கை வரவுள்ளனர். இந்திய தொழில் அதிபர் லக்ஸ்மி மிட்டலின் ஏஷ்லொர் மிட்டல் நிறுவனமே 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும் அந்த நிறுவனத்தின் வீடுகள் நீண்ட...
நாடளாவிய ரீதியில் இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக சுகாதாரத்துரைப் பிரதியமைச்சர் பைசால் காசிம் தெரிவித்துள்ளார். இதனை முன்னிட்டு சுகாதார உயர் அதிகாரிகளும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் டெங்கு நுளம்பு வளரும் பிரதேசத்தினை இனங்காண வரும் போது அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது மக்களிடம்...
யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'பொலிஸ் நெத' புகைப்படகண்காட்சியில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கைவிரல் அடையாளத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர். பொலிஸ் யாழ்ப்பாண பிரிவு மற்றும் குற்றப்பதிவு திணைக்கள புகைப்படக்கூடம் என்பன இணைந்து இக் கண்காட்சியை 26, 27, 28ஆம் திகதிகளில் யாழ். பொதுநூலகத்தில் நடத்துகின்றன. இக் கண்காட்சியில் 156க்கும்...
மின்சாரக் கட்டணத்தை, முதல் மாதக் கட்டணத்தை விடவும் அடுத்த மாதம் 10 சதவீதம் குறைவாகப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, விசேட தள்ளுபடியை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவுகின்ற வரட்சியான காலநிலை, இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்குச் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன என்று தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபை, மின்சாரத்தைச் சேமிக்கும் வகையிலேயே...
நாட்டில் தற்போது நிலவுகின்ற அதிக வெப்பநிலை காரணமாக கர்ப்பிணிகள், சுத்தமான தண்ணீரை அடிக்கடி பருகவேண்டும் என்று மகப்பேற்றியல் மற்றும் குழந்தை நல வைத்திய நிபுணர் ருவன் சில்வா தெரிவித்துள்ளார். கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் வெப்பநிலை சாதாரணமாக 37.5 செல்சியஸ் பாகையாகும். அந்த வெப்பநிலை, 38 செல்சியஸ் பாகையாகவோ அல்லது அதற்கு மேல் கூடினாலோ, கர்ப்பப் பையில்...
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியன்று யுத்த ரீதியில் எல்.ரீ.ரீ.ஈ, தோற்கடிக்கப்பட்டாலும், எமது பாதுகாப்புப் படைகளிடம் யுத்த ரீதியில் தோல்வி கண்டபோதும், யுத்தக் களத்திலிருந்த பயங்கரவாதிகளின் உயிர்கள் மடிந்த போதும் ஈழத்துக்கான கனவை காணும் புலிகளின் கொள்கை இன்னும் தோல்வியடைவில்லை.எல்.ரீ.ரீ.ஈ-இன் தனி ஈழத்துக்கான கருத்து என்பது, துப்பாக்கிகள், எறிகணைகள் மூலம் தோல்வியடையச் செய்ய முடியாத...
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. இது தொடர்பில் கொழும்பில் ஆனந்தசங்கரி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா, ஈரோஸ் கட்சியின்...
யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தை மீள ஆரம்பிக்க வேண்டும், யாழ். பல்கலைகழகம் வெளிவாரி ஊடக பட்டப்படிப்பினை மேற்கொள்ள ஆவண செய்ய வேண்டும், போன்ற ஆறு அம்ச கோரிக்கையை முன்வைத்து ஊடக அமைச்சரிடம் யாழ். பல்கலைகழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் பழைய மாணவர்கள் மகஜர் ஒன்றினை கையளித்து உள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள்...
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில் 500 மெகாவோட்ஸ் அலகுகளை கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதன் காரணமாக, சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்படும் என்ற விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சம்பூரில் மின்சார நிலையம் ஒன்றை அமைப்பதற்கு இந்தியா தயாராகி வருகின்ற நிலையில் அதன் காரணமாக சுற்றாடல் பிரச்சினை...
வடக்கில் கடந்த காலத்தில் ஊடகப் பணியின் போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்கப் பணிப்புரை விடுக்க வேண்டும் என்று நேற்று வடபகுதிக்கு வந்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவிடம் வடக்கு ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில் தென்பகுதி ஊடகவியலாளர்கள் சுமார் நூறு பேர் வட...
இறுதிக்கட்டபோரின் பின் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லமும் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த துயிலுமில்ல வளாகத்தில் தினமும் இராணுவத்தினர் காலையில் இராணுவ அணிவகுப்பு செய்கின்றனர். மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் இவற்றை தினமும் பார்த்து மனவேதனை அடைவதை அவதானிக்க முடிகின்றது. உலவியல் ரீதியாக அவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இராணுவத்தினரின் இச்செயற்பாடு மக்களிடமிருந்து அவர்களை...
ஒரு காலத்தில் கல்வியில் முன்னணியில் இருந்த யாழ் மாவட்டம், தற்போது எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது? என்பதே தற்போதைய சூழ்நிலையில் அனைவரதும் கேள்வியாக உள்ளது. அண்மையில் யாழ் நகரில் அமைந்துள்ள ஒரு பிரபல ஆண்கள் பாடசாலையின் மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் உச்சக் கட்டத்தை அடைந்து நீதிமன்ற வாசலையும் தட்டியுள்ளமை தான் பெற்றோர்களின் அண்மைய அதிர்ச்சிக்கு காரணம்....
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் இலங்கையின் ஆறு பிரதேசங்களில் ஊடுருவியுள்ளனர் என புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைத் தடைசெய்வதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அந்த இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களைக் கைதுசெய்வதில் முட்டுக்கட்டைகள் உள்ளன என்று புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்னர்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராம மக்கள் 3 நாட்களாக முன்னெடுத்து வந்த உண்ணாவிரத போராட்டம் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்கள் தங்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனக்கோரி வியாழக்கிழமை (24) முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நேற்று சனிக்கிழமை (26) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற இந்த உண்ணாவிரதத்தை நிறைவு செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி...
யாழ்ப்பாண பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினரால் வெளிவாரிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வணிக முதற்தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக இரண்டாம் தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக மூன்றாம் தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக நான்காம் தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக முதற்தேர்வு 2013 பழைய பாடத்திட்டம் மீள்பரீட்சை, வணிக மாணி...
பருத்தித்துறை, வியாபாரி மூலைப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் படுகாயங்களுக்குள்ளான மூவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். ராஜ் (வயது47), ராஜ் சரோஜினிதேவி (வயது 42), மற்றும் ராஜ் ரஞ்ஜித் (வயது 17) ஆகியோர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த நபர்களின்...
மூளைக்காய்சலினால் பாதிக்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த மாணவன், நேற்று வெள்ளிக்கிழமை (25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இடைக்காடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் தர்சிகன் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி இரவு தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக அவர் அச்சுவேலி பிரதேச...
வடக்கு மக்களின் மனநிலையில் நல்லாட்சியினை காணமுடியவில்லை அதற்காக நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட பொதுமக்களுக்கான யாழ் விடுமுறை விடுதி திறப்பு நிகழ்வு நேற்று யாழ் குறிகட்டுவான் வீதி அல்லைப்பிட்டி பகுதியில் யாழ் மாவட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
