- Sunday
- November 23rd, 2025
மயிலை வேட்டையாடிய நபர் தற்பொழுது இனங்காணப்பட்டுள்ளார் இவர் தங்கொட்டுவ பிரதேசத்தில் பிரபல வர்த்தகர் ஒருவரின் உறவினர் என அறியவந்துள்ளது. குறித்த நபர் சட்டவிரோதமான துப்பாகியை உபயோகித்து மயிலை வேட்டையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஆனையிறவு பிரதேசத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மயிலை வேட்டையாடியதனை படம்...
ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான தரக்குறைவான மருந்துகள் கடந்த ஐந்து வருடங்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தொடர்பான ஆய்வுக்குழுவான “கோப்“ தெரிவித்துள்ளது. அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் தற்போது கோப் குழுவின் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்திணைக்களத்தை வந்தடையும் மருந்துகளின் தரம் மற்றும் அவற்றின் காலாவதி திகதி...
பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் இந்திய அறிவுரையின் பிரகாரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது தொடர்பான சாத்தியவள கண்காணிப்புப் பணிகளுக்கு அண்மையில் இந்தியாவின் சார்பில் சென்னை விமான நிலைய தலைமை அதிகாரி தியான் சாஸ்திரி தலைமையிலான குழுவினர் வருகை தந்திருந்தனர். இக்குழுவினர் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பிரகாரம் பலாலி...
வடமராட்சி மணற்காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் காலத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்க நகைகள் மற்றும் பணத்தை, சட்டவிரோதமாக தோண்டியவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் அறிக்கையை, ஒரு மாதகாலத்துக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருக்கு பருத்தித்துறை நீதவான் திங்கட்கிழமை (28) உத்தரவிட்டார். கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி மணற்காட்டுப் பகுதிக்குச்...
“வடமாகாணத்தில் கொண்டாடப்படவுள்ள வெசாக் தினத்தில், தமிழில் பிரித் ஓதவுள்ளோம்” என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். வெசாக் கொண்டாட்டம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், “வெசாக் தினத்தில் நாகவிகாரை, துரையப்பா விளையாட்டு மைதானம், கிளிநொச்சி, பூநகரி...
நயினாதீவு நாகதீப விகாரைக்கு முன்பாக அமைக்கப்படவிருந்த 75 அடி புத்தர் சிலையின் நிர்மாணிப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மேற்படி புத்தர் சிலை அமைப்பதற்கு யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அந்த புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்கு கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர், ஆலோசனை...
கடந்த பொதுத்தேர்தலின் போது, தனக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளைப் படம்பிடித்து, தன்னுடைய பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார் என்ற குற்றச்சாட்டில், வழக்கொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவே, இவ்வாறு வழக்குத்தாக்கல் செய்துள்ளார். வன்னி தேர்தல் மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலின் போது போட்டியிட்ட சிவபாலன் கஜேந்திரகுமாருக்கு வாக்களிக்கப்பட்ட யாழ்.மாவட்ட தபால் வாக்குச்சீட்டே, அவருடைய பேஸ்புக்கில் பதிவேற்றம்...
இலங்கை ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத விதத்தில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இது பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்து. அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 150.15 ரூபாவாக இன்று பதிவாகியிருக்கிறது. டொலருக்கு எதிராக 148 ரூபாவை தாண்டியது இதுவே முதல் தடவையாகும். இலங்கை ரூபாவின் இந்த வீழ்ச்சி பொருளாதாரத்தில் பெரும்...
ட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்ட மாணவி வித்தியாவின் மரணத்தின் பின்னர் புங்குதீவில் இருந்து வெளியேறியவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு பொலிஸாருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். வித்தியா படுகொலை வழக்கு நேற்று நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இதன்போது குற்றப்புலனாய்வு பிரிவினர் இவ் வழக்கு தொடர்பான...
சம்பூரில் இந்திய உதவியுடன் அமைக்கப்படும் அனல் மின் நிலையத்திற்கு அப்பகுதி மக்களின் எதிர்ப்பு தொடர்ந்தும் வலுத்து வருகின்றது. அனல் மின் நிலையத்தின் தாக்கம் பற்றி நேரில் அறிந்து கொள்வதற்காக ஏற்கனவே அனல் மின் நிலையம் அமைந்துள்ள புத்தளம் மாவட்டம் நுரைச்சோலைக்கு மூதூர் கிழக்கு பிரதேச சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று திங்கட்கிழமை அங்கு சென்று திரும்பியுள்ளது....
"இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் - இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் - வெள்ளை வான்களில் கடத்தப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே? அவர்களை உடன் மீட்டுத்தாருங்கள்." இவ்வாறு மன்னாரில் காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் கதறி அழுதனர் காணாமல்போனோரின் உறவுகள். காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று...
"தமிழர்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது என்றால் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். இதன் மூலமாகவே தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்து - தமிழர்களின் மனங்களை அரசால் வெல்ல முடியும்." இவ்வாறு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கையில் சமாதான சகவாழ்வுக்கான அணுகுமுறைகள்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (28) முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான புலு ரிட்ச் (Blue Ridge) கப்பலை பார்வையிட்டார். கப்பலுக்கு வருகை தந்த ஜனாதிபதி, அமெரிக்க கடற்படையினரால் இராணுவ மரியாதைகளுடன் கௌரவமாக வரவேற்கப்பட்டார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையே நட்புறவை வளர்க்கும் நோக்கில் புலு ரிட்ச் கப்பல் ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில், 5ஆம் மற்றும் 6ஆம் சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் விசேட அனுமதியைப் பெற்றுச் சந்திக்க முடியும் என்றும் சாதாரணமாகச் சந்திக்க முடியாது எனவும் ஊர்காவற்றுறை நீதவான் ஏம்.எம்.எம்.றியால் தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று திங்கட்கிழமை (28) நீதிவான் றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கதைக்க...
கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். தென் இலங்கை ஊடகவியலாளர்களுடன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவுடன் ஞாயிற்றுக்கிழமை(27) மாலை நடைபெற்ற சந்திப்பின் போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து கருத்து...
யாழில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான காலநிலையை தொடர்ந்து இன்று மழை பெய்து வருகின்றது. இன்று முற்பகல் யாழ் நகர் பகுதி மற்றும் வலிகாமம் மேற்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. வட பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகளவான வெப்பநிலை காணப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருந்தனர்....
வரட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக, எதிர்வரும் தினத்தில் ஏற்படக் கூடிய மின்சார பற்றாக்குறையை நிவர்த்திச் செய்யும் வகையில், நடைமுறையில் உள்ள நேரத்தை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.>புத்தாக்க சக்திவலு அதிகார சபையின் தலைவர் கீர்த்தி விக்ரமரத்ன இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிக வெப்பம் காரணமாக மின்சார நுகர்வு...
அழகிய மீன் தொட்டி ஒன் றில் சுடு நீரை ஊற்றுவது போலவே சம்பூர் அனல் மின் நிலையம் இலங்கையில் அமையப்போகின்றது. முழு உலகமே அனல் மின் நிலையத்திட்டத்தை கைவிடுகையில் இலங்கை மாத்திரம் அதனை ஆதரிப்பதையிட்டு சர்வதேசம் வியப்படைந்துள்ளது. எவ்வாறாயினும் உத்தேச அனல் மின் நிலையத் திட்டம் இந்தியாவிற்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுத்து இலங்கை மக்களுக்கும் இயற்கைக்கும்...
ஸ்ரீலங்காவில் ஊடக பணியின்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது. 44 ஊடகவியலாளர்கள் ஊடக பணியின் போது படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நினைவாக குறித்த நினைவுத்தூபிஅமைக்கப்பட்டுள்ளது. குறித்த தூபியை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகத்துறை அமைச்சர் கஜயந்த கருணாதிலக்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கில்...
நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்ப நிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலைகளை நண்பகல் 12.00 மணியுடன் மூடி விடும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கோரிக்கை விடுத்திருப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;...
Loading posts...
All posts loaded
No more posts
