Ad Widget

யாழில் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

யாழ் மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் அவர்களின் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

அரசாங்க அதிபர் இங்கு உரையாற்றுகையில், மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதியின்மூலம் பல்வேறு செயற்றிட்டங்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனடிப்படையில் சுமார் எட்டு இலட்சம் பெறுமதியான மூவாயிரம் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளதுடன், மூவாயிரம் பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகளும் ஆயிரத்து இருநூறு பயனாளிகளுக்கு தலா 55000 ரூபா செலவில் மலசலகூடங்களும் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளது.

மேலும் 100மில்லியன் செலவில் குடிநீர் கிணறுகள் அமைக்கப்படவுள்ளதுடன் நீர் வழங்கல் முறைகள் போன்றவற்றை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் மேலும் 100 மில்லியன் செலவில் வீதிகள் மற்றும் கட்டடங்களும் புனரமைக்கப்படவுள்ளது.

இவற்றிற்கான பயனாளிகளை தெரிவுசெய்யம் நடவடிக்கை பிரதேச செயலாளர்களினூடாக நடைபெறுவதாகவும் விரைவில் இச்செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts