கூட்டமைப்பின் கோரிக்கை நிராகரிப்பு; மஹிந்தவிடம் மோடி கூறினாராம்!

இலங்கை அரசுடன் தாங்கள் பேச்சு நடத்துவதானால் இந்தியா விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்திருக்கிறார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கிறார். (more…)

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது தான் முக்கியமே தவிர அரசியல் எமக்கு தேவையற்ற விடயம்!

நீண்டகாலமாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையுடன் சந்தித்து பேசுவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கவில்லை. பல காலமாக அவருடன் கதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். (more…)
Ad Widget

ஜனாதிபதியின் நிகழ்வுகளில் கலந்துகொள்ள கூட்டமைப்பிற்கு அழைப்பில்லை

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருடைய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கான அழைப்பு இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்கவில்லை என அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)

‘இந்தியாவுக்கு படகு ஏறிய எனது கணவனை காணவில்லை’

இந்தியா செல்வதற்காக மன்னார் ஊடாக படகு எறிய எனது கணவன் தொடர்பில் இதுவரையில் தகவல் இல்லை' என காணாமற்போன செல்லத்துரை கருணாகரனின் மனைவி கஜேந்தினி சாட்சியமளித்தார். (more…)

எம் கனவுகளை நனவாக்க நாம் எம் மக்களையும் பிற இனத்தவரையும் பலி கொண்டோம் என்கிறார் முதல்வர்

போர்க் காலங்களில் எங்கள் கனவுகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வந்தது. கனவுகளை நனவாக்க நாங்கள் எம் மக்களையும் பிற இன மக்களையும் பலிகொடுக்கப் பின் நிற்கவில்லை. (more…)

இராணுவத்தினருக்கு எதிராக அதிக முறைப்பாடு

'எனது மகனை வானில், பச்சை சீருடையுடன் வந்திருந்தவர்கள் மன்னாரில் வைத்து கடத்தி சென்றனர்' என பூநகரி நல்லூர் பகுதியை சேர்ந்த கந்தையா வேலாயுதம்பிள்ளை சாட்சியமளித்தார். (more…)

யாழ். கட்டைக்காட்டில் காணி அபகரிப்பு முயற்சி! பொதுமக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டுப் பகுதியில் இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் நோக்கில் அளவீட்டுப்பணிக்காகச் சென்றிருந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்பால் அந்த நடவடிக்கையைக் கைவிட்டுத் திரும்பிச்சென்றனர். (more…)

பிள்ளைகள் உயிர் வாழ்கிறார்களென இன்னும் நம்புகிறீர்களா என சாட்சியங்களிடம் கேள்வி

உங்கள் பிள்ளைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள் என்று நீங்கள் இன்னமும் நம்புகின்றீர்களா? என்று காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர், தங்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்ய வந்திருந்த சாட்சியங்களிடம் கேள்வி எழுப்பினர். (more…)

அரசுக்கு பொதுபல சேனா எச்சரிக்கை!

இலங்கையில் பௌத்தம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை மாற்றவும் தயங்கமாட்டோம் என பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

மஹிந்த குழம்பியுள்ளார் – சம்பந்தன்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழம்பிப் போயிருக்கிறார் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)

“எனது 13வயது மகனைக் கூட கடத்திச் சென்றுவிட்டனர்” தாய் சாட்சியம்

எனது மகன் தலைமுடி வெட்ட சலூனுக்கு போனபோது இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டார் என மகனைக் காணாத தாயொருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். (more…)

நீதிபதியின் இடத்தில் குற்றவாளி – சம்பந்தன்

"இலங்கையில் உள்ள பாரம்பரியத்தின் அடிப்படையில் குற்றவாளியாகவும் நீதிவானாகவும் ஒருவரே காணப்படுகின்றார். அதனால் தமிழ் மக்களே பாதிப்படைந்தவர்களாக இருக்கின்றார்கள். (more…)

யாழ்.பல்கலையில் திலீபனின் நினைவு நாள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் பிரத்தியேகமான இடம் ஒன்றில் நேற்று தியாக தீபம் திலீபனின் நினைவுநாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது (more…)

இலங்கைக்கு இறக்குமதியாகும் அரிசியில் ஆர்ஸனிக் விஷம்?

இலங்கைக்கு பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் ஆர்ஸனிக் விஷம் அதிகளவில் கலந்திருப்பதாக முன்னாள் பேராசிரியர் உபாலி சமரஜீவ தெரிவித்துள்ளார். (more…)

இலங்கை ஒத்துழைப்புத் தராதமை பற்றி ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் கவலை தெரிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் இலங்கை தொடர்பாக நடத்தும் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காதமை குறித்து கவுன்ஸிலின் சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. (more…)

கைவிடப்பட்டது முதலமைச்சர் நிதியம்

முதலமைச்சர் நிதியத்தை சமகாலத்தில் அமைந்திருக்கும் வடிவத்திலிருந்து கைவிடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)

மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் பிரகடனம்

வடக்கு மாகாணத்துக்கான மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இதற்கான பிரேரணையை வடக்கு மாகாண சபையின் 16ஆவது அமர்வு இன்று புதன் கிழமை நடைபெற்றபோது விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, (more…)

ஆயுதம் தாங்கிய விமானங்கள் குறித்து ஐ.நா. மனித அமர்வில் இலங்கை அதிருப்தி

தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான உத்தியாக, சர்வதேச நாடுகள், விமானிகள் இல்லாத தன்னியக்க விமானம் மற்றும் ஆயுதம் ஏந்திய விமானங்களின் பாவனையை அதிகரித்து வருகின்றமை (more…)

இலங்கை நிலை குறித்து மனித உரிமை ஆணையர் கவலை

இலங்கையில் சிவில் அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள், சர்வதேச நீதிவிசாரணையை வலியுறுத்துவோர் உள்ளிட்ட பிரிவினர் (more…)

அரசும் கூட்டமைப்பும் தாங்களாகவே அச்சநிலையை உருவாக்கியுள்ளன!

இலங்கை அரசின் யோசனைகள் எனக்கு மகிழ்ச்சியளிக்காவிட்டால் ஆலோசனைக் குழுவிலிருந்து நான் விலகிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சர்வதேச ஆலோசகர்களில் ஒருவரான இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌஷல். (more…)
Loading posts...

All posts loaded

No more posts