பத்திரிகை அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையொன்றின் அலுவலகம் முன்பாக, வேலையில்லாத பட்டதாரிகள் போராட்டமொன்றை வியாழக்கிழமை (11) முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பத்திரிகையில் கடந்த 9ஆம் திகதி நாளிதழில், ‘வேலையில்லாத பட்டதாரிகளுக்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் அரசியல் பாடம் நடத்தினார்’ என்றவாறு செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

அந்த செய்தி தொடர்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘வேலையில்லா பட்டதாரிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைக்காக எங்கும் செல்வோம்? இது அரசியல் அல்ல’, ‘உனது தலையங்கத்தால் எமது தலைவிதியை மாற்றாதே’, ‘நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல, வேலை தேடும் பட்டதாரிகள்’, ‘அதிகாரம் உள்ளவர்களிடம் வேலை தேடி செல்வது தவறா?’, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த செய்தி தொடர்பில் குறித்த பத்திரிகை மன்னிப்பு கோராவிட்டால், தொடர்ந்து வரும் நாட்களிலும் தங்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஆர்பாட்டக்காரர்கள் கூறினர்.

Related Posts