- Friday
- July 31st, 2026
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டினாலும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கும் ஊடகங்களுக்கும் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டுத் தலைவர்கள் பொதுவாக விசேட உரைகளை ஆற்றும் போது அவற்றை...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக மாணவர்களை உள்ளடக்கிய சுயேட்சைக் குழவொன்று யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. சுந்தரலிங்கம் சிவதர்ஷன், ஜெயரத்தினம் யதீசன், மங்களேஸ்வரன் கஜன், சுந்தரலிங்கம் சுதர்சன், இராசகுமார் கிரிஷாந், பந்துசேனா அருண்ராஜ், பரம்சோதிநாதர் பிரேந்திரா, சிவலிங்கம் லவகீசன், தங்கவேல் கிரிவேந்தன்...
இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரத்தில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்பட்ட இடத்தில் நடக்கும் அகழ்வுப்பணிகளில் தொடர்ந்து மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. இன்று வியாழக்கிழமை மேலும் 6 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து இதுவரை இங்கே கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. திருகோணமலை நகரிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில்...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்தார். இதனடிப்படையில் மஹிந்த குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும், நாளைய தினம் அதற்கான வேட்புமனு கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர்...
எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட தமிழரசுக்கட்சி அனுமதிக்கவில்லை என்று வடமாகாண சபை அனந்தி சசிதரன் கூறுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்று தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் -...
கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவிகள் மூவரை காணவில்லை என திங்கட்கிழமை (06) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியில் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் சாதாரண தர மாணவிகள் மூவரும் திங்கட்கிழமை (06) மாலை வீட்டிலிருந்து வெளியில் சென்று பின்னர் வீடு திரும்பவில்லை என்று அவர்களுடைய பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். சற்றுமுன்னர் மெதமுலனவில் உள்ள அவரது வீட்டுக்கு முன்னாள் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அறிவித்தார். தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் விடுக்கும் அழைப்பை புறக்கணிக்க மாட்டேன் என்றும் அதற்கான உரிமை தனக்கு இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுத் தேர்தலில்...
நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்று சனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவித்தல் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார்.பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வேட்புமனுத்தாக்கல் அடுத்தமாதம்...
தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றது போல தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நடைபெறுகின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
காணமற்போனவர்கள் பற்றிய தகவல்களை கண்டறிய சர்வதேச விசாரணையே தேவை. காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. அதில் எமக்கு நம்பிக்கையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். யாழிலுள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் 12 ஆவது சந்தேக நபர் ஒருவர் நேற்று மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகினர். அவர்களில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர்...
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. இந் நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களினால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளாகவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளார்கள். இலங்கையின் வடக்கில் 2009ம் ஆண்டு நந்திக்கடலில் வைத்து விடுதலைப்புலிகள்...
ஒரு நாட்டில் அரசாங்கங்கள் மாறுகின்ற போது அந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பொது தேசிய கொள்கைகள் மாற வேண்டியதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பயனுள்ள சரியான திட்டங்கள் ஒரு சில அமைச்சுகளில் செயற்படுத்தப்பட்டாலும் அமைச்சர்கள் மாறுகின்றபோது அக் கொள்கைகளை எடுத்தெறிவது நாட்டின் எதிர்கால பயணத்திற்கு தடையாக அமையுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். தலைசிறந்த தேசிய கொள்கைகளுக்கான இயக்கத்தினால்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர்கள் சிலர் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எதிர்கொண்ட சம்பவங்கள் தொடர்பில் அவர்களது உறவினர்கள் விளக்கம் அளிக்கவுள்ளனர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை தலைவர் நடேசன் மற்றும் மூத்த தளபதி புலித்தேவன் ஆகியோரின் உறவினர்கள் இவ்வாறு விளக்கம் அளிக்கவுள்ளனர். இறுதிக் கட்ட யுத்தத்தில் சரணடைந்து...
தெற்கில் வைத்து எனக்கு 26 மில்லியன் தரப்பட்டதான செய்தி எனது 50 வருட அரசியல் வாழ்க்கையைக் களங்கத்துக்குள்ளாகியிருக்கிறது. நாங்கள் எந்த அரசிடமிருந்தோ, அரசு ஆட்களிடமிருந்தோ ஒரு சதத்தைக் கூடப் பெற்றிருக்கவில்லை என்பதை அறுதியிட்டுக் கூறுவேன். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா. வடக்கு மாகாண...
இலங்கையின் பல பகுதிகளில் பரவிவரும் புதுவகையான வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த சில வாரங்களில் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர் மரணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இன்புளுயென்சா ´ஏ´யில் எச்1 என்1 எனப்படும் வைரஸ் காய்ச்சல் என இது அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்தக் காய்ச்சல் பரவியிருப்பதாக வவுனியா...
வீதியில் பெற்றோல் குண்டுகள், கோடரிப்பிடிகள், பொல்லுகள் போன்ற ஆயுதங்களுடன் திரிந்தவர்களுடன் பல்கலைக்கழக மாணவனுக்கு என்ன வேலை? இவ்வாறு கேள்வி எழுப்பிய நீதிபதி இளஞ்செழியன் கேள்வி அவருக்குப் பிணை வழங்கவும் மறுப்புத் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி பெற்றோல் குண்டுகள், கோடரி பிடிகள், பொல்லுகள் சகிதம் கைதான 10...
சமூகவிரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் பிணை கோரி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்றும், சிலவேளை, அறவே பிணை கிடைக்காது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். சமூகவிரோதக் குற்றச்செயலுடன் சம்பந்தப்பட்ட வழக்கொன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான...
மாகாண மக்களினுடைய தேவைகளையும் அபிலாசைகளையும் மனதிற்கு எடுத்து மத்திய அரசாங்கம் கொள்கைகளை வகுக்க வேண்டுமேயொழிய தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்தினுடைய கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையானது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும்...
வடமாகாண - யாழ் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல்:- யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் திடீரென அதிகரிப்பதற்குக் காரணமென்ன என கேள்வியெழுப்பியுள்ள வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும் ஒரு மாத காலத்தில் சட்டத்தின் துணைகொண்டு ஒழிக்கப்பட வேண்டும் என வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ்...
Loading posts...
All posts loaded
No more posts
