Ad Widget

அரசியல் – முரண்பாடுகளுக்காக பாடசாலை தண்ணீர்த்தாங்கியில் விசக்கலப்பு

யாழ்.ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய தண்ணீர் தாங்கியில் விஷமிகள் விஷத்தினை கலந்ததால் அதனை பருகிய 27 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷம் கலந்த நீரினை பருகிய மாணவர்கள் உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்ட மாணவர்களில் 26 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தொடர்ந்து தெல்லிப்பளை...

தண்ணீர் பருகிய 26 மாணவர்களுக்கு மயக்கம்

யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலையை சேர்ந்த 26 மாணவர்கள் இன்று வியாழக்கிழமை (19) காலையில் மயங்கி வீழ்ந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை நீர்த்தாங்கியிலிருந்த நீரைப் பருகிய 26 மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Widget

இனப் பிரச்சினைக்கு நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே தீர்வு!

"இனப்பிரச்சினைத் தீர்வு போன்ற சிக்கலான விடயங்கள் தற்பொழுது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டா. நாடாளுமன்றத் தேர்தலின் பின்பு அமைக்கப்படும் தேசிய அரசே 13ஆவது அரசமைப்புத் திருத்தம், இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் பிரதான பிரச்சினைகள் குறித்து பரிசீலனை செய்யும். இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பத்திரிகை ஆசிரியர்கள், ஊடக...

 யாழ். உயர்பாதுகாப்பு வலய காணிகளை ஜனாதிபதி கையளிப்பார்

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படும் 450 ஏக்கர் காணிகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்க ஆகியோர் எதிர்வரும் திங்கட்கிழமை (23) கையளிக்கவுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, அக்காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஜனாதிபதியும் பிரதமரும் கையளிப்பார்கள் என்று மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸ் தெரிவித்தார்....

வலி.வடக்கில் 400 ஏக்கரில் எதிர்வரும் 23 ஆம் திகதி மீள்குடியேற்றம்! ஆரம்பிக்க ஜனாதிபதியும் பிரதமரும் வருகை

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலய பகுதியில் 1000 ஏக்கரை விடுவிப்பது என்ற அறிவிப்பின் படி முதற்கட்டமாக 400 ஏக்கரை விடுவித்து, அதில் மக்களை மீளக்குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் கலந்துகொள்வர். -...

கூட்டமைப்பை பிளக்க ரணில் முயற்சி : முதலமைச்சர் குற்றச்சாட்டு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த முயற்சிக்கின்றார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாக வடக்கு மாகாணசபையில் நேற்றுக் குற்றஞ்சுமத்தினார். வடக்கு முதலமைச்சருடன் பேசமாட்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்தான் பேசுவேன் என்று அவர் கூறுவது எம்முள் பிரிவினையை ஏற்படுத்தப் பயன்படுத்தும் உபாயமாகவே நான் கருதுகின்றேன் என்று முதலமைச்சர் தெரிவித்தார்....

இரகசிய முகாம் தொடர்பான சாட்சியங்கள் உள்ளன! – சுரேஷ்

இரகசிய முகாம் தொடர்பான சாட்சியங்கள் உண்டு சாட்சியங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டல் அவற்றை முற்படுத்த தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடத்தப்பட்டவர்கள், காணாமல்போனவர்களை தடுத்துவைக்கும் இரகசிய முகாம்கள் தொடர்பில் பாராளுமன்றில் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு உரிய விசாரணைகள் நடத்தப்படாமல் அவ்வாறான இரகசிய முகாம்களே...

19ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி: வர்த்தமானியும் வெளியானது

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் அமைப்புக்கு திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதுடன் விசேட வர்த்தமானியும் வெளியானது. இந்த திருத்தங்கள் அடங்கிய திருத்தச்சட்டமூலம் விசேட சட்டமூலமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் ஞாயிறன்று அவசரமாகக் கூடியிருந்த விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. இலங்கையில் மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரான டி எம் சுவாமிநாதன் இதனை உறுதிப்படுத்தினார். முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: இலங்கையயில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட...

25 வருடங்களின் பின்னர் சொந்த மண்ணை பார்வையிட்டனர் வளலாய் மக்கள்!

உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்திருந்த வலி கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் கிராமத்தை 25 வருடங்களுக்கு பின்னர் பர்வையிட்டனர் அந்த கிராம மக்கள். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் புனர்வாழ்வு மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஹரீம் பீரிஸ் தலைமையில நடைபெற்ற கூட்டத்தில எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஏற்ப இந்தப் பகுதி முதற்கட்டமாக விடப்பட்டுள்ளது....

கோட்டாபய விரைவில் கைதாவார்?

காலி துறைமுகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை விவகாரம் தொடர்பில் தேசிய நிறைவேற்று அதிகார சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கமையவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதில் பெரும் மோசடிகள் இடம்பெற்றன எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. 'அவன்ற் கார்டே' நிறுவனத்தின் இந்த ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு முடியும்வரை, கோட்டாபய...

வலி.வடக்கு மீள்குடியேற்றம் ; இன்று இறுதி தீர்வு

வலி. வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்ட வலி.வடக்கு பிரதேசத்தில் ஆரம்பக் கட்டமாக மக்களுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி விடுதலை செய்வது தொடர்பில் அண்மையில் ஆராயப்பட்டதுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசே குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. குறித்த குழுவின் நடவடிக்கைகளின்...

புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை வரவேண்டாம் – சுரேஸ்

கடந்த இரு மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 10 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புபிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அனேகமானவர்கள் யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள், புதிய அரசாங்கம் அவர்களை நாடு திரும்புமாறு விடுத்த அழைப்பை ஏற்று நாடு திரும்பியவர்கள் அவர்கள் நம்பிக்கையுடன் நாடு திரும்பியபோதிலும், விமான நிலையத்தில் அவர்கள் நடத்தப்பட்டவிதம்,...

மீண்டும் மக்கள் காணிகள் சுவீகரிப்பு

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த காலங்களில் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொது மக்களுக்குச் சொந்தமான 11 யஹக்ரேயர் காணி சுவீகரிக்கப் பட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளு மாறு, யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். மருதங்கேணி...

இலங்கைக்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம்; எச்சரிக்கிறார் ஐ.நா ஆணையாளர்

பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆலோசித்தே உள்ளக விசாரணைப் பொறிமுறை ஆரம்பிக்கப்பட வேண்டும். மாறாக கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட தோல்வியில் முடிந்த விசாரணைப் பொறிமுறையினை அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என ஐ.நா மனித மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹீசைன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் சபையின் 28ஆவது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. அதில்...

அனந்தி நாளை முதல் தொடர் உண்ணாவிரதம்

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நாளை வெள்ளிக்கிழமை தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 09.00 மணிக்கு இவ்வாறு போராட்டத்தினை அவர் ஆரம்பிக்கவுள்ளார். வட பகுதியில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள், இராணுவத்தில் சரணடைந்த காணாமல் போனவர்கள் உட்பட மீள்குடியேற்றம் போன்ற...

காணாமல் போனவர்கள் இரகசிய முகாம்களில் – வடக்கு முதலமைச்சர்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் பலர் இலங்கையின் பல இடங்களில் உள்ள இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக வடக்கு முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். காணாமல் போனவர்களின் உறவுகள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்தியிருந்ததுடன் அரச அதிபர் ,...

முல்லைத்தீவு கோட்டாபய முகாம் குறித்து விளக்கமளிக்கக் கோரிக்கை

தெஹிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் அவர்கள் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர். கடற்படையினரால் கடத்தப்பட்ட ஜந்து.மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் கடத்தப்பட்டு காணாமல்போன மாணவர்களின் பெற்றோர்களை மனுதாரர்களாக பெயர் குறிப்பிட்டு சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி...

‘அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது’ கதறியழுத உறவுகள்

பாதுகாப்பு படைகளால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு காணாமற்போனவர்களின் உறவுகள் தமக்கு நீதிகோரி யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (04) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை காணாமற்போனோர் பாதுகாவலர் சங்கம் ஏற்பாடு செய்தது. கடந்த 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று அறியாத...

தாயைப் பார்க்க இலங்கை வந்த பகீரதி தடுப்புக்காவலில்

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதி என்ற தாய் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார். 2005-ம் ஆண்டில் பிரான்ஸ் சென்றிருந்த பகீரதி, தனது 8 வயது மகளுடன் இலங்கை வந்து கிளிநொச்சியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாத விடுமுறையை கழித்துவிட்டு, பிரான்ஸ் திரும்பும் வழியிலேயே நேற்று முன்தினம் திங்கட்கிழமை...
Loading posts...

All posts loaded

No more posts