- Friday
- July 31st, 2026
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி தற்பொழுது வரையில் ஏன் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார். வடக்கில் பெறப்பட்ட நகைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது பாரியார் அணிந்து கொள்வதற்கு வழங்கினாரா? எனவும் அவர் வினா தொடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை...
'சுமார் 1 ½ இலட்சம் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள வடமாகாணத்தில் எவ்வாறு போதைப்பொருள் பாவனை என்ற புற்றுநோய் வேகமாக பரவியது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்' என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தால் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கி நேற்று செவ்வாய்க்கிழமை (03) நடத்தப்பட்ட ஊழியர்கள் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு...
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது சட்ட வரைவிலக்கணத்துக்கமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றியமையை, இனப் பாதுகாப்பு எனக் கூறுவது, அவர்களை மேலும் அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையானது இனப்பாதுகாப்பு...
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்மை பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இல்லையேல் உயிர் துறப்போம் என தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர். தமது விடுதலை தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் தீர்க்கமான பதிலை ஜனாதிபதி எமக்கு வழங்கவேண்டும். இல்லையெனில் மீண்டும் நாம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு சாவைத் தழுவுவோம். இதுதான் எமக்கு இறுதியாக...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது. இந்தப் பேச்சின்போது கைதிகள் விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில்...
"உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்காக மக்களுக்கும் அவர்களது தலைவர்களுக்கும் உதவக்கூடிய பொருத்தமான நேரம் எனக்கு அமையும்போது இலங்கைக்கு வருவேன்." - இவ்வாறு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல், இன்று திங்கட்கிழமை வெளிவந்துள்ள தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். "இலங்கைக்கு வருகைதர முன்பாக என்னைப் பற்றியும் எமது செயற்பாடுகள் பற்றியும் முன்னைய மஹிந்த அரசினால்...
"நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரியான நிலைப்பாட்டை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவேண்டும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோரும், உறவினர்களும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதன் பிரதியை...
மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் பௌத்த நாடு என்ற பெயரில் சிறுபான்மை இன மக்களான தமிழ், முஸ்லிம்களை இலக்குவைத்து திட்டமிட்ட இனஅழிப்பும், அடக்குமுறையும் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு கொழும்பில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில்...
புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட தனியாருக்கு சொந்தமான காணியை பிரிகேடியர் வனசிங்க தலைமையிலான 682 ஆவது காலால் படைப்பிரிவு கையகப்படுத்தியுள்ளதாக காணியை இழந்த மக்கள் தெரிவித்துள்ளனர். வடக்கில் புதுக்குடியிருப்பு - புதுமாத்தளன் வீதியையும், கிழக்கில் வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள வீதியையும், தெற்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள வீதிகளையும் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காணியில் ஏழே முக்கால்...
இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளை பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற புத்தக வெளியிட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழர்கள் தமது உரிமைகளைப் போராடியே பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கும்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலக்கீழ் மாளிகை தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அமைக்கப்பட்ட பதுங்கு குழி என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான நிலக்கீழ் மாளிகை ஒன்று அலரி மாளிகையினுள் உள்ளதாக அபயராமையில் வைத்து அவர் குறிப்பிட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ச கூறும் வகையில் மேலும் ஒரு நிலக்கீழ் பதுங்கு குழி...
தமிழ் அரசியல் கைதிகளுக்கான பொதுமன்னிப்பு நிராகரிக்கப்பட்டமைக்கு சட்டமா அதிபர் திணைக்கள உயரதிகாரி ஒருவரே காரணம் என்று மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் மனதாயிருக்கின்ற போதிலும், அவ்வாறு விடுதலை செய்தால் தென்னிலங்கையில் கிளர்ச்சி ஏற்படும் என்ற அச்சத்தை குறித்த உயரதிகாரி முன்வைத்து...
தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது என்று எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 'தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்ததால் தான் அக்கைதிகள், தாம் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தினார்கள், விடுதலைக்கு மாறாக, பிணையில் விடுதலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று தெரிவித்துள்ள...
தமது விடுதலை தொடர்பில் அரசால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்று தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். தாம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டபோது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு வழங்கப்போவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தம்மை பொதுமன்னிப்பில் விடுவிக்குமாறு கோரி மீண்டும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப் போகின்றனர் என தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர். இலங்கையில்...
இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலைகள் உட்பட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐந்து பேரடங்கிய ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளைக்கொண்ட குழுவொன்று விசாரைணகளை நடத்தி வருகின்றது என்றும், இந்த விசாரணைகளை ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் கண்காணித்து வருகின்றார் என்றும் காணாமல்போகச் செய்யப்பட்டோர் தொடர்பிலும் போர்க்குற்றங்கள் சம்பந்தமாகவும் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்....
இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், நீதி ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராயும் விசேட மாநாடு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்ற நிலையில் பிரதமர் தலைமையி லான இன்றைய மாநாடு தீர்க்கமான முடிவொன்றை மேற்கொள்ளும் களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது....
தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்படமாட்டாரென சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலை சீர் திருத்த அமைச்சர் திலக் மாரப்பன்ன தெரிவித்தார். அதற்கு மாறாக அவர்களது பிரச்சினைக்கு தீர்வு மட்டுமே வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் கொலைசெய்ய வேண்டிய அவசியம் களத்தில் இருந்த இராணுவத்தினருக்கு இருக்கவில்லை என்றும், உயர்மட்டத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையின்படியே அவ்வாறு நடைபெற்றது என்றும் கூறப்படுகின்றது. கட்டளையிட்டவர்களை விசாரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் அவசியம். இதற்கான பரிந்துரையையும் பரணகம குழு முன்வைத்துள்ளது." - இவ்வாறு வெளிவிவகார அமைச்சர்...
"ஐ.நா. தீர்மானம் வரவேற்கத்தக்கது. இதை ஏற்று அரசு பொறுப்புக்கூறவேண்டும். இதை நாமும் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். போரால் பாதிக்கப்பட்ட மக்களைப் புறக்கணித்துவிடமுடியாது. அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அவர்கள் கௌரவமாக வாழவேண்டும். இழப்பீடு வழங்கப்படவேண்டும். உண்மை கண்டறிப்படவேண்டும். இவற்றை செய்தால்தான் நல்லிணக்கத்துக்கான வழி திறக்கப்படும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்...
Loading posts...
All posts loaded
No more posts
