- Saturday
- August 1st, 2026
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. ராஜபக்ச ஆட்சியை வெளிப்படையாக கண்டிக்கும் வகையிலேயே, மக்கள் உங்களைத் தோற்கடித்தனர் என்று நினைக்கிறீர்களா என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “வடக்கு மாகாணத்தில்...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,...
சிறைகளில் நீண்டகாலமாக நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறுவது தவறானது. குறைந்தளவானவர்களே சிறைகளில் உள்ளனர். அவர்களிலும் குற்றம் இனங்காணப்படாதவர்கள் சொற்ப அளவிலேயே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஒருங்கிணைந்த நல்லிணக்கத்துக்கான வழிமுறைகளுக்கான இணையத்தளம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (12) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது, அதில்...
முதலமைச்சர் சபையை முற்றாக புறக்கணித்துவிட்டார் என்பதை அவரது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன என வட மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் குற்றம் சாட்டினார். வவுனியா, கோவில்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர். கடந்த மாகாணசபை அமர்வின்போது விவசாய...
மினிபஸ் சாரதியின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 6 வயதுச் சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு யாழ். நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஊர்வலமும் கையெழுத்துப் போராட்டமும் இடம்பெற்றன. இதன்போது போராட்டக்காரர்கள் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த பஸ்களை மறித்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அத்துடன் போக்குவரத்துக்கு...
விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக, இனிமேல் விபத்துச் சாவு என்று வழக்குத் தாக்கல் செய்யப்படாமல், கொலைக் குற்றம் என்றே வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும். இவ்வாறு யோசனை முன்வைத்துள்ளார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன். அத்துடன், வீதிப் போக்குவரத்தின் போது, பஸ் நடத்துநர்கள் மிதி பலகையில் நின்று, வீதியில் செல்லும்...
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல் ஒன்று, மார்ச் மாதத்தில் பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பூமியை கடந்து செல்லுமா அல்லது தாக்குமா என்பதை கணிக்க முடியாமல், விஞ்ஞானிகள் அச்சத்தில் உள்ளனர். ஒரு கிலோ மீட்டர் அகலமுள்ள அந்த விண்கல், நிலாவை விட 21 மடங்கு பெரிய அளவில் பூமியை கடந்து செல்லும் என்று...
யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக தற்கொலை செய்துள்ளார். யோதிலிங்கம் துசன் என்ற 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நல்லூர் வடக்கு விநாயகர் வீதியைச் சேர்ந்த குறித்த முன்னாள் போராளி குடும்ப பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு போதுமான தொழில் வாய்ப்பின்றி இருந்ததாக...
யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் “ரொமான்ஸ் பண்ணாதீர்கள்” என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மாணவ ஜோடிகள் விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருத்தல் மற்றும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு...
காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வு யாழ்.குடாநாட்டில் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27, 28, 29 ஆம் திகதிகளிலும், மார்ச் முதலாம் திகதியும் சாட்சி விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ குணதாச தெரிவித்துள்ளார். கோப்பாய், வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, சாவகச்சேரி, காரைநகர்...
சரத் பொன்சேகாவின் படைகள் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அவரை இலங்கை அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளமையானது, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு நேர்மறையானது என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. சரத் பொன்சேகாவின் இந்த நியமனமானது பரந்தளவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் சிரேஷ்ட இராணுவத் தலைவர்களை அரசாங்கம் பாதுகாக்கலாம்...
நயினாதீவுக்கு சென்ற சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாகவும், அவர்களிடம் சிங்கள மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பாடடங்கள் குறித்தும் இராணுவச் சிப்பாய் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதில் குறித்த இராணுவச் சிப்பாய் பின்வருமாறு சிங்கள மக்களுக்கு உபதேசம் பண்ணுகிறார். “30 ரூபாய் கொடுத்தால் போட்ல (boat) கொண்டு போய் நாகதீபவில்...
எமது மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இராணுவம் கையகப்படுத்தி, அதனை அனுபவித்து வருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி முழங்காவில் பிரதேசம் ஒரு சிறந்த...
யாழ்ப்பாணம் மீசாலை இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவரைக் கொலை செய்ததுடன், மற்றுமொரு இராணுவ சிப்பாயைச் சுட்டுக்கொல்ல முயற்சித்தமைக்காக இராணுவ புலனாய்வு பிரிவைச் இராணுவ கோப்ரல் ஒருவருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 17 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளார். அத்துடன் 20 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டப் பணம் செலுத்தத் தவறினால்...
வட மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (10) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா, மடு ஆகிய கல்வி வலயங்களில் சுமார் 10 வருடங்களாக கடமையாற்றுகின்ற தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரவை பத்திரம்...
காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளேயாவர். ஆகவே அவர்கள் அப்போதைய போர்க்களத்திலேயே இறந்து விட்டனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் எவரும் காணாமல் போகவில்லை. வடக்கில் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தெரியும். விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தில்...
இலங்கையின் நீதித்துறை கடந்த சில காலமாகவே அதிக அளவில் அரசியல் மயமாக்கப்பட்டு, சமநிலையை இழந்து, நம்ப முடியாத நிலையை எட்டியதால்தான், இலங்கையில் நடந்து முடிந்த போரில் இருதரப்புகளாலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற உருவக்கப்பட வேண்டிய பொறிமுறைகளில் சர்வதேச வல்லுநர்கள் பங்கு பெறுவதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் பிரேரித்ததாக ஐ.நா. மனித...
செங்கோலை தூக்கிச்சென்று சபை நடவடிக்கைகளைக் குழப்பியடிப்பதற்கு மஹிந்த அணியினர் வகுத்த திட்டத்தை முறியடித்து சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொண்டது நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசு. இதனால் சபைக்கு நடுவில் கூட்டாக களமிறங்கி சபா பீடத்தை சூழ்ந்துகொண்டு கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டு ஊளையிட்ட மஹிந்த அணிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. பொது எதிரணி என்ற அந்தஸ்துடன் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச்...
கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் தர்மபுரம் நெத்தலியாற்றுப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 35 ஏக்கர் காணியை இராணுவம் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். பரந்தன்...
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசைன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றதாக கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
Loading posts...
All posts loaded
No more posts
