காணாமல் போனார் காரியாலயம் : கருத்தறியும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

காணாமல் போனோர் தொடர்பான காரியாலயம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் கருத்தறியும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய குழு இன்று காலை 9.30 முதல் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் இந்த கருத்தறியும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மூன்று கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த நடவடிக்கையில் முதல் கட்டமாக, காணாமல்போனவர்களின்...

தமிழ், சிங்கள மாணவர்களிடையே மோதல் ; யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் மூடப்பட்டது

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றதால் யாழ்.பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. யாழ்.பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட விஞ்ஞானபீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றவேளையிலேயே இம் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமைபோன்று குறித்த நிகழ்வில் தமிழ்கலாசார முறைப்படி மேளதாள வாத்தியங்களோடு மாணவர்களின் வரவேற்கு நிகழ்வு...
Ad Widget

படைமுகாங்களை பலப்படுத்தப்படுத்தும் முயற்சியில் இராணுவம்

வலிகாமம் வடக்கு அதி உயர்பாதுகாப்பு வலய எல்லைகளிலுள்ள படைமுகாங்களை பலப்படுத்தப்படுத்தும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். தற்காலிகமாக போடப்பட்டிருந்த பாதுகாப்பு வலய எல்லை வேலிகளையும் நிரந்தரமாக அமைக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை, கட்டுவன், குரும்பசிட்டிப் பகுதிகளில் உள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைகளே இராணுவத்தினரால் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. வலிகாமம் வடக்கு இராணுவ...

யாழ்பாணத்தில் பொலிஸாருக்கு எதிராக அதிக முறைப்பாடுகள்

யாழ்ப்பாண மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராகவே அதிகளவான முறைப்பாடுகள் பதியப்படுவதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரீ.கனகராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து காணிப் பிணக்குகள் தொடர்பான முறைப்பாடுகளே அதிகம் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் கல்வித் திணைக்களத்திற்கும் கல்வி உயர் அதிகாரிகளுக்கும் எதிரான அதிகளவிலான முறைப்பாடுகள் யாழ்.மாவட்டத்திலிருந்து வருவதாக...

வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது இலங்கை அரசே!

போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தின் கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது, இலங்ப்கை அரசைப் பொறுத்த விடயம் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள் உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்கள் சந்திப்பில், போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதி்பதிகளை உள்ளடக்கும் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப்...

மாணவனது மரணத்தில் சந்தேகம் ; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ்ப்பாணம் அராலி பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சடலமாக மீட்க்கப்பட்ட மாணவனது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து மாணவனது உறவினர்களால் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. 
கடந்த மே மாதம் 24 ஆம் திகதி அராலி கிழக்கு வாலையம்மன் கோவிலடியை சேர்ந்த 16 வயதுடைய ஜெயகாந்தன் டிஷாந்தன் எனும்...

பொருளாதார மத்திய நிலையம்: வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானிக்கும்

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த முடிவினை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பாதா அல்லது தாண்டிகுளத்தில்...

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை இல்லாது செய்ய முயற்சிக்கிறார்கள்

பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைய வேண்டும் என்பது தொடர்பில் நடாத்திய வாக்கெடுப்பானது, மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதாக இருக்க முடியாது என வடமாகாண சபையின் எதிர்கட்சியின் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். யாழ் யூரோவில் மண்டபத்தில் நடைபெற்ற வடமாகாண மக்கள் செயற்றிட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். வவுனியா பொருளாதார...

சரணடைந்தோர் விவரத்துக்குப் பதிலாக புனர்வாழ்வு பெற்றோர் விபரங்களை வழங்கிய கட்டளைத் தளபதி

வட்டுவாகலில் சரணடைந்தோர் விவரத்துக்குப் பதிலாக புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டவர்களின் விவரங்களைக் கொண்டு வந்த முல்லைத்தீவு 58ஆம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தனவை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் கோபமடைந்து ஏசினார். இறுதி யுத்தத்தில் காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் (சின்னத்துரை சசிதரன்) உள்ளிட்ட 05 பேரின் உறவினர்கள் தாக்கல்...

இராணுவ கட்டளைத் தளபதி மன்றில் ஆஜர் : சரணடைந்த போராளிகள் விபரம் வெளியாகலாம்!!

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் உள்ளிட்ட முன்னாள் போராளிகள், இராணுவத்தினரிடம் சரணடைந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக இராணுவ...

அரசுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்கா தயக்கம்! நிஷா பிஸ்வால்

"இலங்கையில் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் அரசின் பொறுப்புக்கூறல் பொறிமுறை அமைக்கப்படும்போதுதான் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். அதனை தற்போது கூறி நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது.'' இவ்வாறு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய...

போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை தப்பிக்க முடியாது! ஐ.நா.

இலங்கையில் போரின் இறுதித் தருணங்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்து இலங்கை அரசு உறுதியாக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ - மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நியூயோர்க்கில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கேள்வியொன்றிற்கு...

கொத்துக்குண்டு பாவனை சட்டவிரோதமானதல்ல! கண்டனங்கள் மத்தியில்மீண்டும் பரணகம

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம கொத்துக்குண்டு பாவனையை நியாயப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், தனது கருத்தை நியாயப்படுத்தி மீண்டுமொரு அறிக்கையை அவர் நேற்று வெளியிட்டுள்ளார். 2010 ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் இலங்கை படையினர் கொத்துக்குண்டுகளை பாவித்திருந்தால் அது தவறானதல்ல என்பதே அவரது வாதமாகும்....

கல்லுடைக்கும் தொழிற்சாலையால் மக்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம், ஈவினை கிழக்கிலுள்ள கல்லுடைக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தூசுப் படலம் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன், வீதியில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறுகளும் ஏற்படுகின்றன. மேற்படி இடத்தில் இயங்கி வரும் கல்லுடைக்கும் தொழிற்சாலைக்குத் தேவையான கற்கள், அருகாமையிலுள்ள காணியில் குவிக்கப்பட்டு, பாரிய அரிதட்டுக்கள் மூலம் அரிக்கப்பட்டு, அதன் பின்னர் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. நேரக்கட்டுப்பாடின்றி அரிதட்டில்...

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடுகள் இடித்தழிப்பு

வலிகாமம் வடக்கில், தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள வீடுகளை, இராணுவத்தினர் தொடர்ச்சியாக இடித்தழித்து வருகின்றனர். கட்டுவன் மற்றும் குரும்பசிட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளே இராணுவத்தினரால் இடித்தழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விரு கிராமங்களினதும் பகுதியளவு பிரதேசங்கள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விடுவிக்கப்படாத காணிகளில் உள்ள வீடுகளே இவ்வாறு இடித்தழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அழிக்கப்படும்...

தொடரும் முன்னால் போராளிகளின் மரணம்

சமீபத்திய காலமாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னால் போராளிகளின் மரணங்கள் மீதமிருக்கும் போராளிகளின் மனதிலும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது இந்த வரிசையில் முன்னால் போராளியும் பொட்டம்மானின் சாரதியாக இருந்த சசிகுமார்(ராகுலன்) என்பவரும் காலமாகியுள்ளார் தொடரும் இந்த மரணங்களில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் என்ன? என்பது விடையில்லா புதிராக உள்ளது போராளிகள் புனர்வாழ்வளிக்கப்படும்போது இராணுவத்தினரால் திட்டமிட்டு ஏதேனும் விஷமருந்துக்கள்...

இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம், முதலமைச்சரை ஏற்றுக்கொள்ள தயார் : சம்பந்தன்

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஒரு பக்­கு­வமான படித்த முஸ்லிம் நபரை எமது முத­ல­மைச்­ச­ராக ஏற்­றுக்­கொள்­வ­தற்கு நாம் தயா­ரா­க­வி­ருக்­கின்றோம் என தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான ஆர்.சம்­பந்தன் தெரி­வித்தார். தமிழ் பேசும் மக்­களின் பெரும்­பான்மை பாது­காக்­கப்­ப­ட­ வேண்டும் என்­ப­தா­லேயே வடக்கு கிழக்கு இணைந்­தி­ருக்க வேண்­டு­மென திட­மாக வலி­யு­றுத்தி வரு­கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனை முஸ்லிம்...

அரசியல் செல்வாக்குகள் காரணமாக தொண்டர் ஆசிரியர் தொகை அதிகரிப்பு!! பட்டதாரிகள் அதிர்ச்சி

பட்டதாரிகளிற்கு நிமயனம் வழங்கப்போவதாக மத்திய, மாகாண அரசுகள் அறிவித்தல் விடுத்துள்ளமையானது மகிழ்ச்சியளிக்கின்ற விடையமாக இருக்கின்றபோதிலும் தொண்டராசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்போவதாக அரசு அறிவித்துள்ள பின்னணியில் அரசியல் செல்வாக்குகள் காரணமாக தொண்டர் ஆசிரியர்கள் தொகை திடீரென பன்மடங்கு அதிகரித்துள்ளமையானது தகுதிவாய்ந்த பட்டதாரிகளின் நியமனங்களி்ல் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் இச் செயற்பாடானது கல்விமட்ட அடைவுகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் எனவும்...

மாணவனின் பிணை மனு நிராகரிப்பு! சிறையிலிருந்து பரீட்சை எழுதுமாறு அறிவுரை!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவன் செந்தூரனின் பிணை மனுவை நீதிபதி ம.இளஞ்செழியன் நிராகரித்தார். அத்துடன் அவரை சிறையில் இருந்தவாறு ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுமாறும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். குறித்த மாணவன் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருப்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்றுக்கு...

இராணுவம் வெளியேறினால் விகாரைகளுடன் செல்ல வேண்டும்

வடமாகாணத்தில் 2018ஆம் ஆண்டில் இராணுவம் இருக்காது என்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். அது நடக்குமானால் இராணுவம் போகும் போது, விகாரைகளையும் கொண்டு செல்ல வேண்டும்' என, வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'முல்லைத்தீவு மாவட்டமானது, பாரம்பரிய தமிழ் மாவட்டமாகும். போர் காலத்துக்கு முன்பு...
Loading posts...

All posts loaded

No more posts