- Tuesday
- August 4th, 2026
யாழ்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 3 மாணவர்களை யாழ் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை யாழ் நீதிமன்ற நிதிபதி இழஞ்செழியன் பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் யாழ் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலை, முகாமைத்துவம் மற்றும் வர்த்தகப் பிரிவுகளை சேர்ந்த 3 மாணவர்களே...
சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை. அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு நாட்டை பாதுகாப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு முன்னர் இலங்கை...
சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் வீடொன்றுக்குள் நேற்று இரவு 11 மணியளவில் புகுந்த இனந்தெரியாத மூவர் இளம் குடும்பஸ்தர் ஒருவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சரமாரியாக வெட்டியதில் குடும்பஸ்தர் உயிரிழந்தார். அவரது மனைவி வெட்டுக் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களின் இரட்டைக் குழந்தைகள் இவர்களுக்கு அருகில் இருந்தபோதும் இந்தச் சம்பவத்தில் அவர்களுக்குக்...
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளை இன்று மருத்துவப் பரிசோதனைக்காக கலந்துகொள்ளுமாறு வடக்கு மாகாணசபையிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கட்டட அலுவலகத்துக்கு வருகை தந்த முன்னாள் போராளிகள் நீண்டநேரமாகக் காத்திருந்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அண்மையில் வடக்கு மாகாணசபையில் புனர்வாழ்பின் விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என தீர்மானம்...
வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு பிக்குகள் உட்பட சிங்கள மக்களுக்கு சகல உரிமைகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் சுவாமிநாதன், நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையோ, புத்தர் சிலைகளையோ அகற்ற முடியாது என்று குறிப்பிட்டதுடன், அவ்வாறு செய்ய தான் தயாரில்லை...
வடக்கு மாகாணத்தில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பினார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து சிங்கள மக்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் ஏராளமான புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களின் காணிகளையும், இந்து ஆலயங்களின் காணிகளையும் ஆடாத்தாகப் பிடித்து பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுவருவது...
வடமாகாணசபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணை செய்வதற்கான தீர்மானத்தை வடமாகாணசபை நிறைவேற்றியுள்ளதானது எனக்கு மிகவும் அதிர்ச்சியை தருகின்றது. இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழரசு கட்சி, மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி...
வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 640 ஏக்கர் காணி அடுத்த வாரம் மக்கள் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்படுகிறது. வலி. வடக்கில் 1500 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அண்மையில் அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் இதையடுத்து கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியார்ச்சி பலாலி வந்து மாவட்டச் செயலர் மற்றும் படைத்தரப்புகளுடன் கலந்துரையாடினர்....
தடுப்பு முகாம்களில் புனா்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் பாலியல் வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என இனி யாராவது சொன்னால் அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்குச் செல்வேன் என மூத்த முன்னாள் பெண் போராளியும், எழுத்தாளருமான தமிழ்க்கவி தெரிவித்துள்ளார். புதன் கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணிக் குழுவிடம் தனது கருத்துக்களை முன்வைத்த போதே...
அரசியல்வாதிகள் தங்களது சுய லாபங்களை நோக்குடன் கொண்டு தமிழ் மக்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதை தவிர தமிழ் மக்களின் பிரச்சனையை யாரும் கவனிப்பதில்லை. என இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (17.08.2016) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு...
'67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை' என வடமாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, கணக்காய்வு திணைக்கள அறிக்கையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே வடமாகாண எதிர்க் கட்சி தலைவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடமாகாணத்தின் ஐந்து அமைச்சின்...
இனந்தெரியாத குழுவினர் வாளால் வெட்டியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் - சங்குவேலியில் நேற்றுப் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிவகுமார் பிரணவன் (வயது 35) என்பவரே உயிரிழந்தவராவார். நேற்றிரவு வீட்டின் முன்னால் நின்றிருந்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட குழு வாளால்...
இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி - பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்ட தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று புதன்கிழமை தொடக்கம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியுடன் இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியதாகவும், இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் நடவடிக்கை...
கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பிரதேசத்து மக்கள் இன்று (புதன்கிழமை) ஐந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தைத் தொடர்கின்றனர். குறித்த பிரதேசத்தின் 4 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிக்கமுடியுமெனவும், ஏனைய 16 ஏக்கர் காணிக்கு இன்று அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. எனவே மக்களை அவர்களது போராட்டத்தைக்...
முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதா என்பதை அறிய அமெரிக்காவின் விமானப்படை மருத்துவர்கள் ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்னும் யோசனைக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் ஒப்புதல் வழங்கியுள்ளார். வடமாகாண சபையின் 58வது அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இங்கு பேசிய மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்...
நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் இன்று (16) கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. கடும் காற்றுடன் கூடிய வானிலை தொடர்பில் கடலில் சஞ்சரிக்கும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் கடும் அவதானத்துடன் இருக்குமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தரைப்பிரதேசத்தில் திடீரென கடும் காற்று வீசக்கூடும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து...
வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் இன்னமும் தம்வசம் வைத்துள்ள காணிகளில் விடுவிக்கப்படக்கூடிய அனைத்தும் அடுத்து வரும் ஒரு வருட காலப்பகுதிக்குள் மக்களிடம் கையளிக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு ஜீன் மாதத்திற்கு முன்னர் அவற்றை விடுவிப்பதற்கான கால அட்டவணை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிவில் அதிகாரிகளிடம் நேற்றுத் தெரிவித்தார். இதன்...
தமிழர் தாயக பூமியில் பௌத்த விகாரைகள் அமைப்பதும், பலவந்தமான சிங்களக் குடியேற்றங்களும் தமிழ் மக்களின் கலாசார உரிமைகளைப் படுகொலை செய்வதற்கு சமனாகும் என்று ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷாப்பிடம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வே மிகச்சிறந்தது என்று எடுத்துக்காட்டியுள்ள கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன், உரிய தீர்வை...
2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது சரணடையும் விடுதலைப் புலிகள் சிறீலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கமாட்டார்கள் என இந்தியாவின் றோ அமைப்பு நம்பிக்கை அளித்ததாக நீனா கோபால் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஊடகவியலாளரான நீனா கோபால் எழுதிய ‘ராஜீவ்காந்தி கொலை’ என்ற நூலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகள் 2009ஆம் ஆண்டு மே மாதம்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட மாத்தையா எனப்படும் கோபாலசுவாமி மகேந்திரராஜா இந்திய றோ உளவுப் பிரிவின் உளவாளி என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 1989ம் ஆண்டு முதல் மாத்தையா றோ உளவாளியாக கடமையாற்றியிருந்தார் என, இந்தியாவில் வெளியாகியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் நீனா கோபல் குறித்த நூலை எழுதியுள்ளார்....
Loading posts...
All posts loaded
No more posts
