- Saturday
- August 2nd, 2025

பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் இடம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 21 பேரின் ஆதரவுடன் ஓமந்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2,000 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கவுள்ள இந்த பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மாவட்டத்தில் அமைக்குமாறு மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வவுனியாவில் எந்த இடத்தில் அமைப்பது என்பது தொடர்பில்...

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று முன்னிலையான போதே கைது செய்யப்பட்டுள்ளார்.சுமார் 70 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளை அமைத்து விசாரணை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற வித்தியாவின் கூட்டு வன்புனர்வு நாட்டை பெரும் அதிர்ச்சிக்கும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகளை முடித்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

இலங்கையில் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களான பெண்களிடம் கையூட்டு மற்றும் பாலியல் கையூட்டு கோரப்பட்டுள்ளதாக பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பைச் சேர்ந்த ஸ்ரீன் ஸரூர் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறும் விடயத்தில் காணமால் போயுள்ளவர்கள் பற்றி நம்பகமான விசாரணை நடத்துவதற்காக, அரசாங்கத்தினால் புதிதாக அமைக்கப்படவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம் குறித்து பொது...

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய முன்னாள் போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர். இதுவரையிலும் ஏறத்தாள 100 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர். இவர்களில் விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு...

கல்குடா காவல்துறைப் பிரிவில் தமிழர் ஒருவர் சிங்கள இனத்தவர்களால் தலையில் பலமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதையடுத்து கல்குடா பகுதியில் பதற்ற நிலை நிலவுவதாகத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை நடைபெற்றுள்ளது. கல்குடா பிரதான வீதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தங்கராசா வயது (51) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த...

"இலங்கையின் உள்நாட்டு நிர்வாகத்திலோ அல்லது நீதித்துறையின் செயற்பாடுகளிலோ வெளிநாட்டு நீதிபதிகளோ அல்லது சர்வதேச நீதித்துறை சார்ந்தவர்களோ தலையிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை." இவ்வாறு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பாணந்துறை நகரசபை விளையாட்டரங்கில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற ஸ்ரீ ராமான்ய மகா நிக்காயாவின் முக்கிய சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு...

இணைந்த வடக்குக் கிழக்கில் சமஸ்டி முறையிலான அரசியலமைப்பு மாற்றத்தினையே வட மாகாண மக்கள் கோரி நிற்கின்றனர், என அம் மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா ஆகியோரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சார்பில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தற் குழுவின் முன்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தனக்கு இனம்புரியாத கவலையை ஏற்படுத்தியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்குப் பயணம்மேற்கொண்ட சுகாதார அமைச்சர் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைக்காகச் செயற்பட்ட பல்வேறு...

யாழ்ப்பாணத்தில் படையினர் வசமுள்ள காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையிலும் எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதிக்கு முன்னர் மீள்குடியமர்வை முழுமையாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ்.மாவட்ட அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் உறுதியாக தெரிவித்தன. எந்தெந்தெக் காணிகள் விடுவிக்கப்படும் என்று தெரியாத நிலையில் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மீள்குடியமர்வை எப்படிச்செல்வது எனத் தெரியாது...

மிரட்டல்கள் அச்சுறுத்தல்களுக்கு தாம் அடிபணியப் போவதில்லை புளொட் அமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். "பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைய வேண்டும். அதுவே பொருத்தமான இடமாகவும் விளங்குகின்றது. எமது மக்களின் விருப்பமாகவும் அது இருப்பதுடன் அதனாலேயே மக்களுக்கு பல்வேறு நன்மைகளும் ஏற்படும். இதனை விடுத்து சிலர் எங்கள் மக்கள் மீது...

வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஒமந்தையில் அமைக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளது. வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து தமிழ் மக்கள் பேரவையின் சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழுவின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் வடமாகாணத்திற்கான பொருளாதார...

புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் போராளிகள் 103 பேர் புற்றுநோயினால் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தேசிய ஆராய்ச்சிப் பேரவை சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நடந்து முடிந்துள்ள 32ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன் வெளியிட்ட வாய்மொழி மூல அறிக்கையில் யாழ்.மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றுக்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு மீள் குடியேற்றப் பிரதேசத்தில்...

போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை இழைத்தோரின் கருணை மனு நிராகரிக்கப்படும் என, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். சட்ட விளைவுகள் தெரியாமல் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்களைப் புரிவோரின் கருணை மனுக்கள் கவனத்தில் எடுக்கப்பட மாட்டாது, பிணை கோரி செய்யப்படும் அத்தகைய மனுக்கள் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்படும்...

தாம் நிம்மதியாக கல்வி கற்க உதவுமாறு வவுனியா விவசாய கல்லூரி பழைய மாணவர்களும், புதிய மாணவர்களும் இணைந்து கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, பல மாணவர்கள் பல்வேறு இலட்சியங்களுடனும், எதிர்பார்ப்புகளுடனுமே கல்வி கற்கின்றனர். எமது குடும்பங்கள் கூட பல்வேறு கஸ்ட நிலைகளுக்கு மத்தியிலேயே எம்மை படிக்க வைத்துள்ளார்கள். இன்று தென்னிலங்கையில் உள்ள...

பாலியல் வதை, போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை குற்றம் சாட்டப்படுகின்ற தனியார் நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும். அந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். இத்தகைய வழக்கு விசாரணைகள் முடியும் வரையில் சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுவதற்கு...

இரத்தினபுரி, நிவித்திகலை சிதுறுபிட்டியவில், 50 வயதுடைய நபரினால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது மாணவியான எஸ்.சரோஜினியைக் கண்டறிய, துரித நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், இரத்தினபுரி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இ/நிவி/தேலை தமிழ் ஆரம்ப பாடசாலையில், தரம்...

போரின்போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் அரசு ஆரம்பித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கைத்தொழில் அமைச்சு, மாகாண அமைச்சு ஆகியவற்றின் இணைத்தலைமையில் செயலணியொன்று அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. "வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களில் 21 ஆயிரத்து 663 குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன. அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும்...

உள்நாட்டில் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசித்து வரும் மக்களை மீண்டும் அவர்களது இடத்தில் குடியமர்த்துவதற்காக விசேட செயலணியொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவ்வகையில் வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன் அவர்கள் தமது இடங்களில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். அதேவேளை மீள்குடியேற்றம் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும்...

All posts loaded
No more posts