- Tuesday
- September 15th, 2026
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதுச் சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞனை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட மேலதிக நீதவான் ரீ.கருணாகரன், செவ்வாய்க்கிழமை (14) உத்தரவிட்டார். சிறுமியின் உறவுக்காரரான மேற்படி இளைஞடன் சிறுமிக்கு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, இருவரும் பாலியல் ரீதியிலான உறவு வைத்துள்ளனர். இதனால் குறித்த...
மீசாலை - புத்தூர் சந்திப் பகுதியைச் சேர்ந்த பஞ்சாட்சரமூர்த்தி பரணிதரன் (வயது 17) என்ற மாணவன் மீது, கொடிகாமம், இராமாவில் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர், தன்னுடைய வீட்டின் கூரையின் மீதேறி ஒளிந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுளார் என்று கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக்க என் பண்டார தெரிவித்தார். குறித்த மாணவன்...
யாழ்ப்பாணம் இணுவில் சிங்கத்தின் கலட்டி பகுதியில் இருந்த வீட்டுக்குள் திங்கட்கிழமை (13) இரவு நுழைந்து திருட முற்பட்ட திருடனை அவனது அலைபேசி காட்டிக் கொடுத்துள்ளது. அதனையடுத்து, குறித்த சந்தேகநபரை இன்று செவ்வாய்க்கிழமை (14) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேகநபர் வீட்டின் ஜன்னல் வழியாக தனது அலைபேசியின் இருந்த விளக்கின்...
கரப்பான்பூச்சியை கண்டு பயந்த கொங்கொங் நாட்டுப் பெண்ணுக்கு உதவுவது போல் பாலியல் சில்மிஷம் செய்ய முற்பட்ட ஒருவர் யாழப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சுண்டுக்குழி பகுதியில் வங்கி முகாமையாளர் ஒருவர் வீட்டின் அறைகளை வாடகைக்கு கொடுத்து வந்துள்ளார். இதன்படி வாடகைக்கு வந்திருந்த...
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் வாகன விபத்தில் பாடசாலை மாணவன் மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவருக்கு யாழ் நீதவான் பிணை வழங்க மறுத்ததையடுத்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மீளாய்வு மனுவை வெள்ளிக்கிழமை பரிசீலனை செய்தபோதே நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் கடந்த பெப்ரவரி மாதம் 3 ஆம்...
யாழ். நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் 20ம் திகதி புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த முற்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தின் மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டனர். இதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் 130க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு...
புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டிய இரு பெண்களையும் எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு இட்டுள்ளார். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்று புதன்கிழமை முற்படுத்திய வேளையிலையே அவர்கள் இருவரையும் எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார். கடந்த...
2003 ஆம் ஆண்டு கல்முனை மாளிகைக்காட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின்முதலாவது எதிரிக்கு யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன், பிரதம நீதியரசரின் விசேட நியமனத்தின் கீழ் கல்முனை மேல்நீதிமன்றில் இந்தக் கொலை வழக்கின் தீர்ப்பினை நேற்று வழங்கியமை விசேட அம்சமாகும். குறிக்கப்பட்ட வழக்கில் இறந்துபோன...
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சபாபதிபிள்ளை சந்தி பகுதியில், மதுபானம் அருந்திக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் ஐவரை சனிக்கிழமை (04) மாலை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த தெரிவித்தார். யாழ். நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் கும்பலொன்று, பொலிஸாரை கண்டதும் தப்பியோட...
காதலிக்க மறுத்த பெண் ஒருவரை கொலை செய்யும் நோக்குடன் பெற்றோல், மிளகாய்தூள் மற்றும் கையுறையுடன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனை, எதிர்வரும் 16ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் மாவட்ட பதில் நீதவான் என்.தம்பிமுத்து உத்தரவிட்டார். அச்சுவேலி - பத்தமேனி பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன், இடைக்காடு பகுதியைச் சேர்ந்த...
வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு தொலைபேசிமூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்து 12 இலட்சம் கப்பம்கோரிய நபர் நேற்று (வெள்ளிக்கிழமை) வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி வட மாகாண சுகாதார அமைச்சரின் தொலைபேசிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து 12 இலட்சம் கப்பம் கோரியதாக வவுனியா காவல்துறையில் முறைப்பாடொன்றை சத்தியலிங்கம் பதிவுசெய்திருந்தார். இதனையடுத்து வவுனியா காவல்துறையினரால் இரண்டு...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கடந்த வழக்கு தவணையின் போது நீதிமன்றினால் கோரப்பட்ட அறிக்கைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அடுத்த தவணையில் அறிக்கைகளை சமர்ப்பிப்பதாக குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார், நீதவானிடம் நேற்று புதன்கிழமை (01) தெரிவித்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேக நபர்களுக்கும் எதிரான வழக்கு, ஊர்காவற்துறை...
யாழில் 36 வயதான சட்டத்தரணியின் மனைவியுடன் ஏற்பட்ட காதல் போதையில் 26 வயதான இளைஞன் ஒருவன் சிறைக்குச் சென்றதுடன் தனது 40 இலட்சம் ரூபாவையும் இழந்துள்ளார். இரத்மலானைப் பகுதியில் வசிக்கும் சட்டத்தரணி ஒருவருடைய 36 வயதான மனைவியுடன் புடவைக்கடையில் வேலை செய்யும் யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவன் அந்தரங்கத் தொடர்பைப் பேணி...
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடம் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை அறுத்தெடுத்த ஏழாலை பகுதியைச் சேர்ந்த நபருக்கு, 1 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, மல்லாகம் மாவட்ட நீதிமன்ற முன்னாள் நீதிவானும் தற்போதைய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், தீர்ப்பளித்தார். அத்துடன், முதலாவது திருட்டு குற்றச்சாட்டுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். இரண்டாவது...
கணவனின் அம்மாவுடைய (மாமி) ஏ.டி.எம் அட்டையை திருடி, 1 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் இருந்து எடுத்த மருமகளை நாளை வெள்ளிக்கிழமை (27) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார், புதன்கிழமை (25) உத்தரவிட்டார். பருத்தித்துறை, தும்பளையிலுள்ள கணவனின் தாயார் வீட்டுக்குச் கடந்த 18 ஆம் திகதி...
உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்துவந்த வயோதிபப் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபகுதியைச் சேர்ந்த, 32 வயதான, ஒரு பிள்ளையின் தந்தையே சந்தேகத்தின்பேரில் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். சுப்பிரமணியம் அசுபதி (வயது 64) என்ற வயோதிப் பெண், கடந்த...
யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள் என பொலிசாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை வாழ்த்திய இரு மாணவர்களை ஜூன் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு இட்டுள்ளார். யாழில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரு சந்தேக...
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாஜூடின் மரணித்த காலப் பகுதியில் கொழும்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இவர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டு மே 17ம் திகதி இடம்பெற்ற தாஜூடினின்...
கந்தரோடைப் பகுதியில் வாள்களுடன் 17 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஒருவன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக ஒன்றுகூடிய குழு மோதல் ஒன்றுக்கு தாயாராகவிருந்த போது, இவர்களைப் பொலிஸார் கைதுசெய்தனர். இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் கூறினர்.
வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மாணவனை, தொண்டைமானாறு கடற்கரையில் வைத்து இரவு நேரத்தில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், வல்வெட்டி மொடேர்ன் கல்வி நிலைய உரிமையாளர் தவக்குமார், லண்டனில் இருந்து வந்தவரான சுரேஸ்குமார் மற்றும் மூவர், வல்வெட்டித்துறைப் பொலிசாரால் நேற்றுமுன்தினம் அதிகாலை கைது செய்யப்பட்டனர். இவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
