- Tuesday
- September 15th, 2026
யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி லட்சக்கணக்கில் கொள்ளையில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 22 வயது மதிக்கத்தக்க, சொந்த முகவரியற்ற குறித்த இளம் பெண் பல்வேறு இளைஞர்களை தொடர்பு கொண்டு காதல் வலையில் வீழ்த்தி எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட பணம், நகைகளை கொள்ளையிட்டு தலைமறைவானார். இதன்காரணமாக குறித்த பெண்ணினால் பாதிக்கப்பட்டவர்கள்...
வவுனியா ஆராச்சிபுரம் பகுதியில் 14 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகப் படுத்திய ஒருவரை காவற்துறை கைது செய்துள்ளது. குறித்த நபர் , சிறுமியை கைப்பேசி அழைப்பின் மூலம் அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளதாக அறியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மட்டக்களப்பு பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டது. சந்தேக நபர்மன்னார் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கொண்ட கும்பலின் விளக்கமறியலை எதிர்வரும் யூன் மாதம் 3ஆம் திகதி வரை நீடித்து யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் வெள்ளிக்கிழமை (20) உத்தரவிட்டார். கடந்த 8ஆம் திகதி யாழ். குற்றத்தடுப்பு பிரிவினரால் யாழ். நகர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 5 பேர் கொண்ட...
இளவாலையில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 48 வயதுடைய நபரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளதுடன் 10 கிலோகிராம் கேரள கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 7 கஞ்சா பொதிகளை கைப்பற்றியதுடன் அந்நபரையும் கைதுசெய்துள்ளனர்.
பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேரை யாழ். சிறுகுற்றத் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். யாழ். நாவாந்துறை ஐந்து சந்தியில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் யாழ். ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்தவர்கள். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரைனட் 01 மற்றும் கத்தி, மோட்டார் சைக்கிள் 2 உட்பட பல பொருட்கள் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன....
மாதகல் பகுதியில் 11 கிலோ 900 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (17) கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். 35, 38 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மாதகல் பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைது...
11 வயதுடைய சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் (வயது 64 வயது) ஒருவர், வவுனியா பொலிஸாரால் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா, கலாபோபஸ்வேவ, நந்திமிஸ்ரகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த 64 வயது முதியவர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை...
ளத்சிங்கள ஹல்வத்துரே பத்திரகாளியம்மன் கோவில் பொறுப்பாளரான ஏ.ஏ. சோமதாஸவை (80) படுகொலைசெய்தனர் என்ற குற்றச்சாட்டில், அந்தக் கோவிலின் பூசாரியும் மட்டக்குளியைச் சேர்ந்த பழைய இரும்புகளைச் சேகரிக்கும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலையைச்செய்வதற்கு சுபநேரம் பார்க்கப்பட்டதாகவும் அந்நேரத்திலேயே சாக்கொன்றினால் அவருடைய முகத்தை மூடிய சந்தேகநபர்கள், கழுத்தைத் திருகி அவரைப் படுகொலைசெய்துள்ளனர். படுகொலைசெய்யப்பட்டவர் ஒன்பது பிள்ளைகளின் தந்தையாவார். இந்தப்...
கிளிநொச்சி - தர்மபுரம் - புளியம்பொக்குன பகுதியில் பிறந்து ஒரேநாளான சிசுவொன்றை நீரோடையில் வீசிச் சென்ற பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதிக இரத்தப் போக்கு காரணமாக மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையே இவர் கைதாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, பிறந்த போது குழந்தை இறந்திருந்தமையால் அதனை நீரோடையில் வீசியதாக, குறித்த பெண், பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்....
அம்பாறை - கல்முனை - சாய்ந்தமருதுவில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டுள்ளார். இவர் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கோப்பாயிலிலுள்ள வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் வீட்டிலிருந்த நிலையில் குறித்த பெண் கடத்திச் செல்லப்பட்டதாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பெண் கடத்தப்பட்ட போது கடத்தப்பட்ட பெண்ணின் இளைய சகோதரியால்...
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழிருடன் சேஷ்டை விட்ட மூவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஊர்காவற்றுறையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- வழமைபோன்று வீதியால் கடமைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஊழியருடன் மதுபோதையில் வந்த மூவர் சேஷ்டை விட்டுள்ளனர். உடனடியாகவே வைத்தியசாலைப் பணிப்பாளரூடாக பொலிஸாருக்கு...
ரயிலில் பிரவேசச் சீட்டின்றி (டிக்கட்) பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது 1500 ரூபாவாக இருந்த அதிகபட்ச அபராதத் தொகை 3000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நேற்று அரசாங்க...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இணங்காணப்பட்ட சந்தேக நபர்கள் 09 பேர்களுக்கான பிணை யாழ். மேல் நீதிமன்றத்தினால் இன்று மறுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாணைகள் எதிர்வரும் 10.08.2016 இடம்பெறும் என்றும் அன்றைய தினம் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்தார். குறித்த வழக்கின்...
குடும்பத்தகராற்றின் போது கணவனை காட்டுக்கத்தியால் வெட்டி படுகாயமடையச் செய்த மனைவியை, தலா 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, நேற்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டார். உருத்திரபுரம், எள்ளுக்காடுப் பகுதியில் கணவன், மனைவி இருவருக்கு இடையில் திங்கட்கிழமை (09) தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது...
சட்டத்துக்கு முரணான வகையில் வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை கம்மாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ்.மேல் நீதிமன்றம், அவற்றை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. அத்துடன் ஆபத்தான கத்திகளைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளைகள் இடம்பெறுவதையடுத்தே இந்த உத்தரவை யாழ். மேல்...
யாழ்.குடாவை வாள் வெட்டுச்சம்பவங்களால் அச்சுறுத்தி வந்த பிரதான ஒருங்கிணைந்த குற்றக் குழுவாக கருதப்படும் 'ரொக் டீம்' எனும் பெயர்கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். பகுதியில் கடந்த ஒரு மாத காலத்துக்குள் பதிவான பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்த யாழ். பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழுவே இவர்களை...
யாழ்ப்பாணத்தில் அண்மையில் சுற்றுலாப் பயணிகளின் பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மானிப்பாய், கல்வியங்காடு, கோப்பாய், மற்றும் உரும்பிராய் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 9 பாரிய குற்றச் செயல்களுடன் குறித்த...
படகு ஒன்றின் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இலங்கையர்கள் 12 பேர், இன்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமான ஒன்றின் மூலம் அழைத்து வரப்பட்ட குறித்த நபர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஜாயல பகுதியைச் சேர்ந்த...
உடுவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (01) இரவு வாள்வெட்டினை மேற்கொள்வதற்குத் தயாராக இருந்த 5 இளைஞர்களை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைதான நபர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் தடிகள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் கூறினர். இரவு நேர ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் சட்டவிரோதக் கூட்டம் கூடி நின்ற இளைஞர்களைக் கைதுசெய்து விசாரணை...
வர்த்தக வங்கிகளிலுள்ள ஏ.ரி.எம் இயந்திரங்களில் தேவையற்ற இலத்திரனியல் பாகங்களை வடிவமைத்து,பொருத்தி உரிமையாளர்களின் தகவல்களை திருடிய சீன பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பணம் மீளப்பெறும் அட்டையை உரிமையாளர்கள், இயந்திரத்தில் செலுத்தும்போது, சந்தேகநபர்களால் பொருத்தப்பட்ட பாகத்தினூடாக தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு கணக்கு உரிமையாளர்கள் விவரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த வங்கி நிர்வாகம், பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 26ஆம்...
Loading posts...
All posts loaded
No more posts
