- Tuesday
- September 15th, 2026
மல்லாகம் நீதிமன்றத்துக்கு முன்பாக வைத்து இளைஞர் ஒருவரை வாளால் வெட்டிய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஐந்து பேருக்கு தலா 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், மல்லாகம் நீதிமன்றத்தில் வைத்து வியாழக்கிழமை (28) வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு 2 இலட்சத்து 50...
யாழ் சுகாதார திணைக்கள பொதுச்சுகாதார அதிகாரிகளினால், சட்டவிரோதமான முறையில் பழுதடைந்த மீன்களை மக்களுக்கு விற்பனை செய்த 15 மீன் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று யாழ் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குவில் பொது சந்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றது. யாழ் சுகாதார திணைக்கள பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து...
யாழில் 27 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர். யாழ் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சந்தேகத்தின் பேரில் சுமார் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்த காரணத்தினால், வீதிகளில் அநாவசியமாக நிற்பவர்கள், திருட்டு மற்றும் பெண்களுடனான சேட்டைகளில் ஈடுபடுபவர்கள் என...
ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் விட்டதாகக் கூறப்படும் ஒருவர், நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். இணையத்தளத்தின் ஊடாக அந்நபர், இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விட்டுள்ளார். மலேசியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பிய போதே, இரகசிய பொலிஸாரினால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மிருசுவில் பகுதியிலுள்ள களப்புக்கு இரைதேடி வந்த வெளிநாட்டு கொக்குகள் 10ஐயும் வேட்டையாடி, அதன் இறைச்சிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நபரை, நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வரணி குடமியன் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். களப்புக்கு வரும் வெளிநாட்டு கொக்குகளை பொறி வைத்துப்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாக ஏழு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து வாள் மற்றும் உள்ளூர் குண்டுகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். அரியாலைப் பகுதியில் வைத்து இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அண்மைக் காலமாக யாழ் குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்களும் ஆயுதமுனையில் வீட்டாரை அச்சுறுத்தி பணம் நகை என்பவற்றை...
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கலையரசன் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் பகுதியில் தனது வீட்டிலிருந்த சமயம் ராம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலையில் வைத்து கலையரசன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் நெருக்கமானவர்கள் என்றும் திருகோணமலையில் பாதுகாப்புப் படைத்தரப்பினர் மீதும் காவல்துறையினர் மீதும்...
அராலி தெற்கில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை வீட்டிற்கு வெளியில் அழைக்கப்பட்டு இன்று காலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் வெட்டப்பட்டு கையிலும் முதுகிலும் துடையிலும் பலத்த காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார். இதுகுறித்த தெரியவருவதாவது இன்று காலை சில இனந்தெரியாத நபர்கள் இளம் குடும்பஸ்தரின் வீட்டிற்கு வந்து வீட்டாரை விசாரித்துவிட்டு அவரை வெளியில்...
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 83 கைதிகளுக்கு அதனை ஆயுள் தண்டனையாக மாற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். நீதி அமைச்சால் நியமிக்கப்பட்ட விசேட குழுவால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 450 இற்கும் அதிகமான கைதிகள் தொடர்பில்...
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம், மற்றும் வெற்றிலைக்கேணி கடற்பரப்பினுள், நிபந்தனைகளை மீறி கரையில் இருந்து 7 கிலோமீற்றர் தொலைவில் கடலட்டை பிடியில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்கள் 39 பேரை சனிக்கிழமை (23) இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை (24) எம்மிடம் ஒப்படைத்துள்ளனர்' என கடற்றொழில் நீரியல்வளதுறை திணைக்கள யாழ். மாவட்ட உதவிபணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்தார்....
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் பாடல்களை கேட்டு ரசித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று சிவில் உடையில் சென்ற பொலிஸாரினாலேயே 25 வதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞன் நேற்று மாலை யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதியின்...
இணுவில் முதலிகோயில் பகுதியில் கடந்த 19ஆம் திகதி இரவு அபாயகரமான ஆயுதங்களுடன் கைதான பாடசாலை மாணவர்கள் ஒன்பது பேரையும், எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் ரி.கருணாகரன், நேற்று புதன்கிழமை (20) உத்தரவிட்டார். குழு மோதல் ஒன்றுக்கு மேற்படி மாணவர்கள் இணுவில் பகுதிக்கு வந்திருப்பதாக...
யாழில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.அண்மையில் யாழ். ஆணைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றில் மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். கிளிநொச்சியில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பொலிஸாரினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதனையடுத்து, பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர்களை சனிக்கிழமை, நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார் பொலிஸ்...
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிய சந்தேகநபரான குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை, 15 நிமிடங்களில் நேற்று திங்கட்கிழமை (11) மாலை பொலிஸார் கைது செய்தனர். புதுவருட கொள்வனவை முடித்துவிட்டு நண்பிக்காக மேற்படி பெண் காத்திருந்த வேளை, பெண்ணின் பின்பக்கமாகச் சென்ற சந்தேகநபரான பெண்,...
முச்சக்கர வண்டியொன்றில் கூடிய சத்தத்துடன் பாடலை ஒலிக்கச் செய்துகொண்டு சென்ற சாரதிக்கு மூவாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்ட சம்பவம் பதுளையில் பதிவாகியுள்ளது. பதுளை, தெய்யனாவலையைச் சேர்ந்த ஏ.ஐ.ஆர் ஆனந்த என்பவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிபதி எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில்...
பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, பெண்ணொருவரை திருமணம் புரிவதாகக் கூறி ஏமாற்றி, அவரிடமிருந்து 4 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளையும், பணத்தையும் அபகரித்த பொறியியலாளர் ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன், 2012 ஆம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமாகிய குறித்த...
காங்கேசன்துறை கடற்பகுதியில் தென் பகுதியைச் சேர்ந்த 11 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கு இடமான முறையில் மூன்று படகுகளில் பயணித்து கொண்டிருந்த போதே, குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு சிறுபடகுகளும், 40 அடி நிளமான பெரிய படகும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களை மாவட்ட பிரதி நீரியல்வளத்துறை பணிப்பாளர் ரமேஸ் கண்ணாவிடம் கடற்படையினர்...
ஈபிடிபி உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்ற ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமான கைத்துப்பாக்கிக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியமை சட்டரீதியானதா என்பது குறித்து ஆலோசனை பெற்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அரச சட்டத்தரணிக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணித்துள்ளார். அரசாங்கத்தின் அனுமதிப் பத்திரம் இல்லாமல், சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார் என்பதற்காக ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்...
சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் ஐவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பிரதான சந்தேகநபரின் அலைபேசியிலிருந்து உள்வந்த மற்றும் வெளிச்சென்ற அழைப்புகளின் ஊடாக மிகநெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வவுனியா, கிளிநொச்சி,...
மட்டக்களப்பில் 13 வயது சிறுமியையும் 19 வயது யுவதியையும் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என இரு முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் வக்கிர சம்பவம் மட்டக்களப்பு கிரான் தெற்கு வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியையும் யுவதியையும் கடத்திச சென்ற முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் மறுநாள்...
Loading posts...
All posts loaded
No more posts
