எனக்கு திருமணமாகவில்லை. நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன்..நீதிபதியிடம் கெஞ்சிய கைதி!!!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் மைத்துனனைக் குத்திக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ள மேல் நீதிமன்றம், எதிரியின் சார்பில் முன்வைக்கப்பட்ட கருணை மனுவின் அடிப்படையில் அதனை ஆயுட்காலச் சிறைத் தண்டனையாக மாற்றும்படி ஜனாதிபதிக்குப் பரிந்துரைத்திருக்கின்றது. இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெற்றுள்ளது....

இலஞ்சம் பெற்ற பொலிஸாரை கொழும்பு நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு உத்தரவு

யாழ். நீதிவான் நீதிமன்றில் வைத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் 500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற சந்தேகத்தில் கைதான பொலிஸ் உத்தியோகத்தரை இன்று புதன்கிழமை (06) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முற்படுத்துமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு திங்கட்கிழமை (04) உத்தரவிட்டார். போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் தண்டப்பணம் செலுத்திவிட்டு...
Ad Widget

9வயது மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு

பாடசாலையிலிருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்தப்பட்டமை குறித்து, 34வயதுடைய திருமணமான நபர் ஒருவர் 04.04.2016 அன்று இரவு எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தெமோதரை தமிழ் வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்று வந்த 9வயது நிரம்பிய மாணவியே இவ்வாறு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டவராவார். அம்மாணவி, ஆபத்தான நிலையில்...

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் சிக்கினர்

அச்சுவேலி பகுதியில் உள்ள 3 வீடுகளில் 110 பவுண் நகைகள், சனிக்கிழமை (02) இரவு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான சந்தேகநபரான வான் சாரதி அன்றைய தினம் இரவே கைது செய்யப்பட்டதாகவும், மேலும் இரண்டு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (03) கைது...

வீடு புகுந்து தாக்கிய இருவர் கைது

கொழும்புத்துறையிலுள்ள வீடொன்றுக்குள் கடந்த 2ஆம் திகதி புகுந்து வீட்டிலிருந்தவர்களை தாக்கியதுடன் பொருட்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை திங்கட்கிழமை (04) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குருநகர் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும்...

அச்சுவேலியில் தொடர் கொள்ளை! உதவியவர் கைது!!!

அச்சுவேலி, அதனை அண்மித்த நவக்கிரியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை தொடர் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 100 பவுணுக்கும் அதிகமான நகைகளும் 25 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன என முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கொள்ளையர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றவர் எனக் கருதப்படும் வாகனச் சாரதி ஒருவரை கோப்பாய்...

கைது செய்யப்பட்ட எட்டு இந்தியர்களில் அறுவரின் சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது

அண்மையில் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் எட்டு பேரில் அறுவருக்கு ஒரு பக்க சிறுநீரகம் மாத்திரமே இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களுடைய ஒருபக்க சிறுநீரகம் அகற்றப்பட்டிருப்பது கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார். கடந்த மார்ச் 04ம் திகதி...

சாவகச்சேரியில் சிறுமியை பலாத்காரம் புரிந்ததாக தமிழ் இராணுச் சிப்பாய் கைது!

சாவகச்சேரி மறவன்புலவில் தற்கொலை அங்கி,கிளைமோர் மீட்பு சந்தேக நபர் கைது-அதே இடத்தில் 16 சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக தமிழ் இராணுச் சிப்பாய் ஒருவரும் ஒரே நாளில் கைதாகியுள்ளமை பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மீட்க்கப்பட்ட வெடிபெருட்க்கள் யாவும் சிங்கள மொழிப் பத்திரிகையினால் சுற்றப்பட நிலையில் காணப்படுவதனால் பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. கைதாகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாம்.

யாழில் பொலிஸாரின் விசேட மோட்டார் சைக்கிள் குழு

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பணிப்புரைக்கமைய யாழ்.மாவட்டத்தில் நடைபெறுகின்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த 10 பேர் கொண்ட விசேட மோட்டார் சைக்கிள் பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டு செயற்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்கவின் கண்காணிப்பின் கீழ் இந்த பொலிஸ் குழு செயற்படுகின்றது. தினமும் காலை 7 மணியில்...

கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை!

தனது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்த திருநெல்வேலி பனிக்கர் வீதியைச் சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது 28) என்பவருக்கு, மரணதண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று தீரப்பளித்தார். 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், 5 முறை கத்திக்குத்துக்கு இலக்காகிய கந்தசாமி ஜெயன் என்பவர்...

சிறுமியை தாயாக்கிய முதியவருக்கு 10வருட சிறை

பாடசாலை மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி அவரை ஒரு பெண் குழந்தைக்கு தாயாக்கிய வயோதிபர் ஒருவருக்கு 10 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குழந்தைக்கும் 20 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் இன்று புதன்கிழமை (30) தீர்ப்பளித்தார்.

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி; முன்னாள் விடுதலைப்புலி போராளி கைது?

சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் உட்பட ஆயுதங்கள் செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றப்பட்டு உள்ளன.குறித்த வீட்டில் இருந்த நபர் தப்பி சென்று இருந்த நிலையில் கிளிநொச்சி வன்னேரி பகுதியில் வைத்து இன்று மதியம் கிளிநொச்சி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த வீட்டினுள் போதைப்...

ஆனையிறவில் மயிலை வேட்டையாடியவர் இனங்காணப்பட்டார்

மயிலை வேட்டையாடிய நபர் தற்பொழுது இனங்காணப்பட்டுள்ளார் இவர் தங்கொட்டுவ பிரதேசத்தில் பிரபல வர்த்தகர் ஒருவரின் உறவினர் என அறியவந்துள்ளது. குறித்த நபர் சட்டவிரோதமான துப்பாகியை உபயோகித்து மயிலை வேட்டையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஆனையிறவு பிரதேசத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மயிலை வேட்டையாடியதனை படம்...

புலிகளின் நகை தோண்டிய விவகாரம் அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு

வடமராட்சி மணற்காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் காலத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்க நகைகள் மற்றும் பணத்தை, சட்டவிரோதமாக தோண்டியவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் அறிக்கையை, ஒரு மாதகாலத்துக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருக்கு பருத்தித்துறை நீதவான் திங்கட்கிழமை (28) உத்தரவிட்டார். கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி மணற்காட்டுப் பகுதிக்குச்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது தாக்குதல்

பருத்தித்துறை, வியாபாரி மூலைப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் படுகாயங்களுக்குள்ளான மூவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். ராஜ் (வயது47), ராஜ் சரோஜினிதேவி (வயது 42), மற்றும் ராஜ் ரஞ்ஜித் (வயது 17) ஆகியோர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த நபர்களின்...

8 கலோ கஞ்சாவுடன் வந்தவர் பொலிஸாரைக் கண்டதும் தப்பியோட்டம்

கேரளா கஞ்சா 8 கிலோ பொதியை விற்பனைக்கு கொண்டு வந்தவர் பொலிஸாரை கண்டதும் கஞ்சா பொதியை தூக்கி வீசிவிட்டு தப்பியோடியுள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். கோப்பாய் இராச வீதி பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த நபரை கைதுசெய்வதற்காக...

வித்தியா கொலை சந்தேக நபரை பொலிசார் துன்புறுத்துவதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது மகனை அரச தரப்பு சாட்சியமாக மாறுமாறு குற்றப்புலனாய்வு பொலிஸார் துன்புறுத்துவதாக 11ஆவது சந்தேகநபரின் தாயார், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். இந்தத் தகவலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலக பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் உறுதிப்படுத்தினார். புங்குடுதீவு மாணவி...

மாணவியை கடத்தியவர்களுக்கு பிணை!

தனியார் கல்வி நிலையத்துக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை செவ்வாய்க்கிழமை (22) கடத்த முற்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் தலா 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல, மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் புதன்கிழமை (23) அனுமதியளித்தார். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார். குறித்த...

பேஸ்புக் மூலம் பெண்களுடன் தொடர்புகளைப் பேணி நகைகளை அபகரித்தவர் கைது!

பேஸ்புக் மூலம் பெண்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களிடம் காதல் வலைவீசி நகைகளை அபகரித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியாவில் உள்ள பெண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி தன்னை ஒரு பணக்காரனாக காட்டி அந்த பெண்ணைக் காதலிப்பதாக கூறி...

பாலியல் குற்றச்சாட்டில் அதிபர் கைது!!

கிளிநொச்சி பன்னங்கண்டி பாடசாலையின் அதிபர் தனது பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஒன்பது மாணவியுடன் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்து கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை பாடசாலைக்கு சென்ற அதிபர் குறித்த மாணவியின் மூத்த சகோதரியை பாடசாலைக்கு வருமாறு அவர் பொறுப்பாக இருந்து நடத்துகின்ற தொண்டு நிறுவனம் ஒன்றின் மாலை...
Loading posts...

All posts loaded

No more posts