- Tuesday
- September 15th, 2026
யாழ். ஓட்டுமடப் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த பாடசாலை மாணவன், ஒருவன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கைதான மாணவன், யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்விகற்பவர் என பொலிஸார் கூறினர். இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் ஓட்டு மடப் பகுதிக்கு சிவில்...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 6.5 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் இருவர் கடற்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த படகை மறித்து சோதனையிட்டபோது, மூன்று பைகளில் பொதி...
சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முயற்சித்த ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் வேறு ஒருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உரும்பிராய் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...
தட்டார் தெரு சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி விளக்க மறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார். கடந்த 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் யாழ். நகருக்கு அண்மையாக தட்டார் தெரு சந்தியில் மோட்டார்...
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளது.மிக விரைவில் சாட்சியின் சாட்சியம் மன்றில் பதிவு செய்யப்படும் என்று குற்ற்ப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். வித்தியாவின் கொலை வழக்கு இன்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது மன்றில் தோன்றிய குற்றபுலனாய்வு பிரிவினர்...
யாழ்.மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக் கொண்ட மர்ம ஆசாமி, மேற்படி தனியார் வங்கியுடன் எவ்விதமான தொடர்பும் இல்லாதவர் என குறித்த தனியார் வங்கி கூறியுள்ளது. மேற்படிச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாவட்டத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்று...
மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்தியதுடன், மனைவியின் தலைமுடியையும் வெட்டி வீசிய கணவனொருவரை, 3 மாதங்களில் பின்னர், அச்சுவேலி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார், புதன்கிழமை (16) இரவு கைது செய்தனர். வல்வெட்டித்துறை பகுதியினை சேர்ந்த மேற்படி சந்தேகநபர், உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருப்பினும், இருவருக்கும் இடையில் சிலகாலமாக...
முகநூல் ஊடாக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் போலிப்பிராசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும், இவ்வாறான 50 முகநூல் கணக்குகளின் தகவல்களை விரைவில் வெளியிடப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்...
யாழ்ப்பாணம் செங்குந்தா மைதான கிரிக்கட் வீரர் கிறிஸ்தோபர் பிரேமன் கொலை வழக்கில் 3 எதிரிகளுக்கு தலா 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தபட்ட ஏழு எதிரிகளில் முதலாம், இரண்டாம், ஏழாம் எதிரிகளான அருளானந்தம் சோபஸ், இராஜகுலேந்திரன் நிசாந்தன், உமாகாந்தன் கிரிகேசன் ஆகிய மூவருக்குமே இவ்வாறு...
தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியிலுள்ள மரக்காலையில் பணிபுரியும் சிறுவனை வாளால் வெட்டி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. தாக்குதல் மேற்கொண்ட கும்பல் கைவிட்டுச் சென்ற...
கரணவாய், மூத்தவிநாயகர் கோவிலடியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய வயோதிபர் தற்கொலைக்கு செய்து கொள்ள முயற்சி செய்தமையினால், அந்த வழக்கு தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (14) வழங்கப்படவிருந்த தீர்ப்பு, எதிர்வரும் 16ஆம் திகதி வழங்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். வயோதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அவரது சட்டத்தரணியூடாக...
சிறுமி சேயா சௌதமி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சமன் ஜயலத்திற்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்று பின் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர் ஒருவரை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கைதுசெய்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே இவர் கைதாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவரை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வன்னேரிக்குளம் மற்றும் கண்ணகிபுரம் ஆகிய கிராமங்களில் கிளிநொச்சி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (14) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர். சந்தேகநபர்களிடமிருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மேற்படி இரு கிராமங்களிலும் மணல் கடத்தல் இடம்பெறுகின்றது என பொலிஸாருக்கு நீண்டகாலமாக...
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து 62 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் திவுலப்பிட்டிய, படல்கம, ஹுனுமுல்ல பிரசேங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரும் நேற்று மினுவாங்கொடை நீதவான்...
வவுனியா பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் விளக்கமறில் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி சந்தேகநபரை 14 நாட்கள் மீண்டும் விளக்கமறியல் வைக்குமாறு வவுனியா மாவட்ட மேலதிக நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் 16ஆம் திகதி வவுனியா பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட நிலையில்,...
யாழ்ப்பாணம் பஸ்ரியன் சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை (11) காலை, வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபரை மோட்டார் சைக்கிளால் மோதிய குற்றச்சாட்டில், இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குருசுவீதி, சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த பீற்றர் (வயது 53) என்ற வயோதிபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா...
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பின் வடமேற்குப் பகுதியில் வைத்து இவர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார். தமிழகம் - புதுக்கோட்டையைச் சேர்ந்த இந்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்குப் பயன்படுத்திய ரோலர் படகொன்றையும் கடற்படையினர்...
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் 30,000 ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட நபருக்கு இரண்டு இலட்சம் ரூபா நஸ்டயீட்டை செலுத்த வேண்டும் எனவும் இதன்போது...
சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு சென்று நாடு கடத்தப்பட்ட நபரொருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள 31 வயதான குறித்த நபர், வல்வெட்டித்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Loading posts...
All posts loaded
No more posts
