உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு அடுத்த வாரம் முதல் தடை

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கல்விக் கருத்தரங்குகளுக்கு ஜூலை 27ம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 27ம் திகதி வரை இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்துபவர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின்...

வட மாகாண தேர்தல் கால துப்பாக்கிப் பிரயோகம்: பிணை கோரிய மனு ஒத்திவைப்பு

வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரை காலத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்தியதன் மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி விளக்கமறியலில் வைக்கப்பட்டவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான உத்தரவு வரும் 25 ஆம் திகதி வழங்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்....
Ad Widget

யாழ். நீதிமன்றத்தில் உந்துருளி களவு!

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குள்ளிருந்து 9 இலட்சம் பெறுமதியான உந்துருளியொன்று திருடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவது, கடந்த புதன்கிழமை நபரொருவர் நீதிமன்றத்துக்கு உந்துருளியில் சென்று அதனை நீதிமன்ற வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று, திரும்பி வரும்போது அவரது உந்துருளி காணாமல் போயுள்ளது. இதனையடுத்து குறித்த நபரால் காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டது. இந்நிலையில், விசாரணையை...

70 இலட்சம் பெறுமதியான கொள்ளையிடப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்பு

யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளையிடப்பட்ட சுமார் 70 இலட்சம் பெறுமதியான நகைகளை கைப்பற்றியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்துள்ளதாக யாழ்மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ணவின் வழிநடத்தலில் யாழ்...

மகனை பாடசாலைக்கு அனுப்பாத தாய்க்கு விளக்கமறியல்

கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் தனது மகனை கடந்த ஒருவருடமாக பாடசாலைக்கு அனுப்பாத தாயை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் 14 நாள் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மாவட்டச் செயலகம், சிறுவர் நன்நடத்தை அலுவலகம், பிரதேச செயலகம், நீதிமன்றம் என்பன இணைந்து தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் பாடசாலை நாட்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை...

மாணவனுடன் தவறாக நடந்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவனுடன் தவறாக நடந்ததாகவும், தாக்கியதாகவுமான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பபில் மேலும் தெரியவருவதாவது தரம் பத்தில் கல்வி பயிலும்...

கனடாவில் தொடர் கொள்ளைகளுடன் தொடர்புடைய இலங்கை தமிழ் இளைஞர் கைது!

கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்த இலங்கை தமிழர் உட்பட இருவரை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர். ஒன்ராரியோ மாகாணத்தின் பிராம்டன் நகரைச் சேர்ந்த நிரஞ்சன் கலைச்செல்வம்(32), ஷாகிலே ஹென்றி(20) மற்றும் ரஷீட் அஹம்த்(25) ஆகிய மூவர் தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இவர்களில் நிரஞ்சன் கலைச்செல்வம்...

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு: இரகசிய வாக்குமூலங்களை தர மறுப்பு

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், நீதிமன்றத்தில் தனியாக வழங்கிய வாக்குமூலங்களை குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு வழங்க முடியாது என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் கூறினார். வன்புணர்வுக்குட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட, புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 'இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில்...

யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்.செம்மணி வீதியில் வைத்து 4 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கச்சாய் வீதி சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சா பொதியினை குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் செம்மணி வீதி வழியாக யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்துள்ளார்....

கஞ்சா வைத்திருந்தவரின் பிணை நிராகரிப்பு! பிணை மனுவும் தள்ளுபடி!!

கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தபோது இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணையில் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. அத்துடன் பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. மாதகல் பகுதியைச் சேர்ந்த அன்ரனி ரொபின்தாஸ் என்பவர் கடந்த 19.06.2014...

7 வயது சிறுவன் துஷ்பிரயோகம்! பாடசாலை சிற்றூழியர் கைது

கிளிநொச்சி பளை பகுதியில் 7 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய, பாடசாலை சிற்றூழியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மருதங்கேனி பகுதியை சேர்ந்த 28 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

சிறுமியை காதலித்த இளைஞனுக்கு விளக்கமறியல்

நாவற்குழிப் பகுதியில் 14 வயதுச் சிறுமியை பற்றைக்குள் கூட்டிச் சென்று துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், நேற்றுத் திங்கட்கிழமை (11) உத்தரவிட்டார். மேற்படி சிறுமியும் இளைஞனும் காதலித்துள்ளனர். இளைஞன், அழைத்ததையடுத்து, சிறுமி அவரைச் சந்திக்கச் சென்ற வேளை,...

சட்டவிரோத கருகலைப்பு: தனியார் சிகிசை நிலையத்திற்கு சீல்

கிளிநொச்சி தா்மபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாா் சிகிச்சை நிலையம் நேற்று கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அதிகாரிகளினால சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிகிச்சை நிலையத்தில் சிறுமி ஒருவருக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டது எனும் குற்றச்சாட்டிற்கு அமையவே சீல் வைக்கப்பட்டதாக தா்மபுரம் பொலீஸ் தெரிவித்துள்ளனா். கடந்த சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சோ்ந்த 14...

மாணவனின் பிணை மனு நிராகரிப்பு! சிறையிலிருந்து பரீட்சை எழுதுமாறு அறிவுரை!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவன் செந்தூரனின் பிணை மனுவை நீதிபதி ம.இளஞ்செழியன் நிராகரித்தார். அத்துடன் அவரை சிறையில் இருந்தவாறு ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுமாறும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். குறித்த மாணவன் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருப்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்றுக்கு...

நாமல் ராஜபக்ஷ கைது

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று முன்னிலையான போதே கைது செய்யப்பட்டுள்ளார்.சுமார் 70 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வித்தியா கொலை விசாரிக்க முதன்முதலில் 3 மேல்நீதிமன்ற நீதிபதிகள்!

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளை அமைத்து விசாரணை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற வித்தியாவின் கூட்டு வன்புனர்வு நாட்டை பெரும் அதிர்ச்சிக்கும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகளை முடித்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

பெண்ணுடன் பாலியல் சேட்டைவிட்ட இருவர் கைது

புத்தூர் வாதரவத்தை வீதியில் தனிமையில் சென்ற பெண்ணுடன் பாலியல் சேட்டை புரிந்த இருவரை அச்சுவேலி பொலிசார் கைது செய்துள்ளனர். ஆவரங்கால் கிழக்கு, புத்தூர் கிழக்கை சேர்ந்த 35, 39 வயதான ஆசாமிகள் என்பதும், கைது செய்யப்படும் போது அவர்கள் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது. மதுபோதையில்...

வடக்கு இளைஞர் யுவதிகள் கட்டுநாயாக்க விமான நிலையத்தில் கைது

போலி விசா அனுமதிப்பத்திரத்தைக் கொண்டு, கனடாவுக்கு பயணிக்க முயற்சித்த இலங்கையர்கள் நால்வரை, குற்றப்புலனாய்புப் பிரிவினர், இன்று வெள்ளிக்கிழமை (08), கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இவர்கள், யாழ்ப்பாணத்தின் முள்ளிபுரம் மற்றும் இளவாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 33 வயதுக்கிடைப்பட்ட இளைஞர் யுவதிகளே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் சகோதர...

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கிளிநொச்சி இளைஞன் கைது

போலியான விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்வதற்கு முயன்ற வடக்கைச் சேர்ந்த இளைஞனை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 36 வயதான சந்தேகநபர், கிளிநொச்சி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்று அறியமுடிகின்றது. சந்தேகநபர், ஓமான் விமான சேவைக்கு உரிய விமானத்தில், மஸ்கட் ஊடாக இத்தாலிக்கு செல்லும் நோக்கிலேயே விமான...

வித்தியாவின் தாயை அச்சுறுத்தியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவத்தின் பின்னர் அவரது தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியலை ஊர்காவற்றுறை நீதிமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மேலும் நீடித்துள்ளது. மாணவி வித்தியா கொலை வழக்குச் சந்தேக நபர்களான சுவிஸ்குமாரின் தாயார் மகாலிங்கம் தவராணி, உசாந்தனின் தாயார் சிவதேவன் செல்வராணி ஆகியோரது விளக்கமறியலே...
Loading posts...

All posts loaded

No more posts