- Tuesday
- September 15th, 2026
கிளிநொச்சி பளைப் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய விடுதியொன்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக நேற்று மாலை சீல் வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பளைப்பகுதியில் இயங்கி வரும் குறித்த விடுதியில் வைத்து பதினைந்து வயதுச்சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்...
இளவாலை, பனிப்புலம் பகுதியில் 2 கிராம் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த பூசாரி ஒருவரை புதன்கிழமை (03) இரவு கைது செய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். இரவு ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த குற்றத்தடுப்பு பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற பூசாரியை விசாரித்த போது, அவர் பயத்தில் முன்னுக்கு பின் முரணானத் தகவல்களை கூறியுள்ளார். இதனையடுத்து, அவரைச் சோதனை...
சுன்னாகம் பகுதியில், பெண்ணொருவரைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரை, அப்பெண்ணின் சகோதரன், முகத்திலேயே குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த, உடுவில் பகுதியைச் சேர்ந்த கே. அதிஷ்டராஜா (வயது 45) என்ற குடும்பஸ்தர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், கடந்த திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. மேற்படி குடும்பஸ்தர், நீண்டகாலமாக தனது தங்கைக்குத் தொந்தரவு...
யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமற்போன ஒருவரை, மீட்டுத்தருவதாக கூறி காணாமற்போனவரின் உறவினர்களிடமிருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிய நபரை யாழ்.பொலிஸார் திங்கட்கிழமை (01) கைது செய்துள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் நீர்வேலியைச் சேர்ந்த வைகுந்தன் என்ற இளைஞன், தனது வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் இடம்பெற்று ஜந்து வருடங்களின் பின்னர், கடத்தபட்டவரின்...
துன்னாலை ஆட்டுப்பட்டித் தெருப்பகுதியில் பொலிஸ் என பொறிக்கப்பட்ட ரீசேட் அணிந்து கொண்டு மக்களை அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை காலை அப்பகுதியில் சுன்னாகம் பொலிஸ் எனப் பொறிக்கப்பட்ட ரீசேட்டினை அணிந்து கொண்டு 33...
இராணுவ சிப்பாய் ஒருவரை மூன்று நாட்களாக கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவர், மாதம்பை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவர் மாதம்பை – சேத்சிரிகம பகுதியைச் சேர்ந்த விஹாரையில் பணிபுரியும் 25 வயதான பிக்கு எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்டவர் வவுனியா – கனகராயன்குளம் இராணுவ முகாமில் பணியாற்றும் 25 வயதான...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை, உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீ கஜன் தலைமையிலான பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். கடந்த சில தினங்களிற்கு முன்னர் குருநகர் பகுதியில் இடம்பெற்ற பல கொள்ளைகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து, பொலிஸாரினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குருநகர் பகுதியில்...
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல இளைஞர், யுவதிகளிடமிருந்து பணம் பெற்று மோசடி செய்த நான்கு பேரை, பத்தமேனி பகுதியில் வைத்து சனிக்கிழமை (30) கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, சந்தேக நபர்கள் பயன்படுத்திய ஹயஸ்வாகனமும் ஒரு தொகுதி கடவுச்சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் உட்பட வவுனியா...
நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படுகின்ற சூழ்நிலையில் போதைப் பொருள் வழக்குகளில் பிணை வழங்குவது பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அமைதியைக் கெடுத்துவிடும் என கூறி, போதைப் பொருள் வழக்கு ஒன்றின் பிணை மனு மீதான விசாரணையின்போது, நீதிபதி இளஞ்செழியன் பிணை வழங்க மறுத்து வழக்கை ஒத்திவைத்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை 2 ஆம் திகதி...
கோயில்களில் மிருகங்கள் பலியிடப்படுவதை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்துவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் மிகவிரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கோயில்களில் வேள்விகளின்போது ஆடுகள், கோழிகள் பலியிடப்படுவதற்கு தற்போது நீதிமன்றங்களினால் இடைக்காலத் தடை உத்தரவுகளின் அடிப்படையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவுகளை மீளப் பெறச்...
உடுவில் மேற்குப் பகுதியில் கடந்த 24ஆம் திகதி இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களை, நேற்றுத் திங்கட்கிழமை (25) கைதுசெய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உடுவில் மேற்குப் பகுதியில் ஒன்றுகூடிய இளைஞர்கள் சிலர், அப்பகுதியினைச் சேர்ந்த இளைஞன் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தகராற்றில் ஈடுபட்டு இளைஞன்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் ஒத்தி வைத்தார். இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (26) மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார். புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை...
கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை, தொடர்ந்து விளக்கமறியலிலேயே வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், நேற்று திங்கட்கிழமை (25) உத்தரவிட்டார். இந்த வழக்கில் இரண்டு பெண்கள் தொடர்புபட்டிருந்த நிலையில், மாணவி கொலை...
நண்பரை, அடித்துக் கொலை செய்த சுன்னாகம் பொலிஸார், அந்தக் கொலையை தற்கொலையாக மாற்றி, மரணச் சான்றிதழ் வழங்கினர்' என, சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக சந்தேகநபர்கள், மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (25), பரபரப்புச் சாட்சியம் வழங்கியுள்ளனர். 'உனக்கு தனி நாடு தேவையா?' எனக்கூறி நண்பரை அடித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்த சந்தேகநபர்கள், நண்பனைக் கொலை செய்ததாகக்...
பெண்ணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், அப்பெண்ணுக்கு பலவந்தமாக முத்தம்கொடுத்த குற்றச்சாட்டில் கைதான தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனை, மல்லாகம் மாவட்ட பதில் நீதவான் என்.தம்பிமுத்து, 50 ஆயிரம் ரூபாய் சரீரரப்பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டார். இதேவேளை, சனிக்கிழமை தோறும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கையொப்பம் இடுமாறும் அவ்விளைஞனுக்கு நீதவான் உத்தரவிட்டார். தெல்லிப்பழை மணல்குளம்...
உடுவில் பிரதேசத்தில் 6 கிலோ கிராம் போதைப்பொருளுடன், அளவெட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தர், சனிக்கிழமை (23) இரவு மதுவரி திணைக்கள அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவலின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், பருத்தித்துறை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் சந்தேகநபரை நீதிமன்றில்...
போக்குவரத்து விதிமுறையை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய பெண் ஒருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் வெள்ளிக்கிழமை (22) தீர்ப்பளித்தார். சாரதியனுமதிபத்திரம், வருமானவரிபத்திரம், காப்புறுதிபத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியமை, மோட்டார் சைக்கிளை பதிவு செய்யாமை, ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்தை...
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சிலர் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் முட்டம் பகுதியிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிக்க முயன்றபோது, குற்றப்பிரிவு பொலிஸார் 14 இலங்கை அகதிகளை கைது செய்துள்ளனர். இதன்போது பிடிக்கப்பட்ட குறித்த படகு, சின்னமுட்டம் துறைமுகத்தில்...
சிறைச்சாலையை நிரப்பும் செயற்பாட்டில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களோ என கேள்வி எழுப்பி கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், ஆசிரியரோ மாணவரோ எவரும் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள் மாணவர்கள் மீது குற்றச் செயல்கள் புரிவதாக தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இது உடனடியாக நிறுத்தப்பட...
யாழ்பாணத்தில் வீடொன்றில் புகுந்து தங்கக் கட்டிகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 20 வயதான இளைஞன் மற்றும் யுவதி ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (20) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் இருவரும் வவுனியா, சிதம்பரப்புரம் பகுதியை சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்....
Loading posts...
All posts loaded
No more posts
