செருப்புடன் சென்றவர்களுக்கு பிணை!

நல்லூர் வீதியில் காலணியுடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சரோஜினிதேவி இளங்கோவன், இன்று செவ்வாய்க்கிழமை (23) அனுமதித்துள்ளார். நல்லூர் ஆலய சூழலில் காலணியுடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை யாழ்ப்பாண பொலிஸார், திங்கட்கிழமை (22) இரவு...

வித்தியா கொலை வழக்கு : இன்றும் தீர்வில்லை

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் எவ்வித தீர்மானங்களும் இன்றி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த கொலைச் சந்தேகநபர்கள் 12 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.ரியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிவரை...
Ad Widget

நல்லூர் ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாடியவர்கள் கைது

நல்லூர் ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் இரு இளைஞர்களைக் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்துத் தெரியவருவதாவது, நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழா, கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அதனையொட்டி ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாட வேண்டாம் என ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்துக்கு வருகை தருவோரிடம் கோரிக்கை...

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை எதிர்வரும் 29ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சந்தேகநபரான பெண் நேற்றய...

பெண்ணொருவர் தீ வைத்து கொலை!! கள்ள காதலன் கைது!!

சாவகச்சேரி – நாவக்குழி பிரதேசத்தில் பெண்ணொருவர் தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் கைதடி – நாவக்குழி பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.அந்த பெண்ணின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி இவ்வாறு தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அவரது கள்ள காதலரை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து 101 கிலோ கிரோம் கேரள கஞ்சா கடத்தியவர்கள் கைது

இந்நியாவிலிருந்து படகு மூலமாக கேரள கஞ்சாவினை கடத்திய மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் நேற்று (19) இரவு கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர்களை பருத்தித்துறை மணல்காடு பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 101 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பருத்தித்துறை மற்றும்...

கொலைச் சந்தேகநபரின் பிணை இரத்து

சகோதரியையும், மைத்துனரையும் கொலை செய்ததுடன் மருமகனைக் காயப்படுத்தி கொலைசெய்ய முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் சாட்சியமளிப்பதற்காக கனடாவில் இருந்து வந்தவர் பாதுகாப்பு கோரியதையடுத்து, கொல்லப்பட்டவர்களின் மகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதிஇளஞ்செழியன் பிணையில் சென்றிருந்த எதிரியை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். நீர்வேலி மேற்கில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்க்கண்டு...

இனந்தெரியாத குழுவின் வாள்வெட்டில் குடும்பஸ்தர் பலி! யாழில் மீண்டும் அச்சநிலை!!

இனந்தெரியாத குழுவினர் வாளால் வெட்டியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் - சங்குவேலியில் நேற்றுப் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிவகுமார் பிரணவன் (வயது 35) என்பவரே உயிரிழந்தவராவார். நேற்றிரவு வீட்டின் முன்னால் நின்றிருந்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட குழு வாளால்...

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா பயணித்த 17 பேர் கைது

குடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறி அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த 17 இலங்கையர்களை, மட்டக்களப்பு வடக்குக் கடற்பிராந்தியத்தில் வைத்து, நேற்றுத் திங்கட்கிழமை (15) கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்திலிருந்து புறப்பட்ட குறித்த நபர்கள், நீண்ட நாட்களாகப் படகில் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில் மீது கல் வீசியவர்கள் விளக்கமறியலில்

கொழும்பு - கோட்டையில் இருந்து கல்கிசை வரை பயணித்த ரயிலுக்கு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கல் மற்றும் போத்தல்களால் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள் கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்தத் தாக்குதலால்...

நாமல் மீண்டும் கைது

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இன்று நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார். இந்தநிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதோடு, இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை...

பாலியல் துஷ்பிரயோக வழக்கின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மட்டும் போதுமானது

பாலியல் துஷ்பிரயோக வழக்கின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மட்டும் போதுமானது என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று (10) மாற்றுவலுவுள்ள பெண்ணை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் – மேலும் அவர்...

யாழ்ப்பாணம் சீரழிய அனுமதியேன்! நீதிபதி இளஞ்செழியன்

தற்போது அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை மீண்டும் சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என, 141 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 141 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரை பிணையில்...

சிசுவைக் கைவிட்ட தாய் கைது

வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் பிறந்து 10 நாட்களேயான ஆண் சிசுவை பெட்டிக்குள் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படும் தாயை நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டியைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சிசு தனக்குப் பிறக்கவில்லையென்று கணவர் சண்டையிட்டமையால், சிசுவை வீதியில் விட்டுச் சென்றதாக அத்தாய் கூறியுள்ளார். சைக்கிளொன்றில்...

மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

திருகோணமலை-வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட ரொட்டவெவ பிரதேசத்திலுள்ள பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியரொருவரை நேற்று (10) பிற்பகல் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, டி.சபீர்கான் (வயது 33) என்பவரே...

தயா மாஸ்டர் விளக்கமறியலில்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது, சாதாரண மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தமை தொடர்பில், கொழும்பு நீதவான் முன்னிலையில் தயா மாஸ்டரால் வழங்கப்பட்ட வாய்மொழி அறிக்கையை அடிப்படையாகக்...

மாற்றுத் திறனாளி சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நால்வருக்கு 15 வருடங்கள் கடூழிய சிறை

மாற்றுத் திறனாளி சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்திய நான்கு பேருக்கு யாழ் மேல் நீதிமன்றம் 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்து மாற்றுத் திறனாளி சிறுமியொருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, இவர்கள் நால்வர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணைகள் யாவும் முடிவடைந்து நேற்று...

வித்தியாவின் படுகொலைச் சந்தேக நபர்களின் விளக்கமறியல் 3 மாதங்களுக்கு நீடிப்பு

கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் 9 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் தகதி வரை யாழ். மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது. வித்தியாவின் கூட்டு வன்புணர்வு படுகொலைச் சந்தேக நபர்கள் 9 பேர் மீதான வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் இன்று புதன்கிழமை...

பஸ்ஸில் கைவரிசை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது

ஓடும் பஸ்ஸில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்ததை சேர்ந்த மூவர் வெள்ளிக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அளவெட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம் மற்றும் கைபேசி என்பன திருடப்பட்டுள்ளன. எதேச்சியாக குறித்த பெண் தனது கைப்பையினை பார்த்த...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவருக்கு மரண தண்டனை

கொலைச் சம்பவமொன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு, நுவரெலிய மேல் நீதிமன்றம், இன்று வௌ்ளிக்கிழமை (05) மரண தண்டனை விதித்தது. 2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் குற்றவாளிகளுக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, வென்ஷர் தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவரைக் கொலை செய்தார்கள் உள்ளிட்ட...
Loading posts...

All posts loaded

No more posts