- Tuesday
- September 15th, 2026
சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்திக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, யாழ் மேல் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்துள்ளார். அத்துடன், அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அவர் தள்ளுபடி செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்குப் பணிந்து முதலில் அதனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு...
பம்பலப்பிட்டி பகுதியில் கோடீஸ்வர இளம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை கொழும்பு குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் 25 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்த வர்த்தகரை கடத்திச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கொழும்பு குற்றப் பிரிவினரால்...
யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான தனியார் பேருந்தின் சாரதியை எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார். கடந்த திங்கட் கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் கரவெட்டி கிழவி தோட்டம் பகுதியைச் சேர்ந்த தங்கராசா செந்துருவன் (வயது-37) என்ற...
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான மோதல் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய 04 சிங்கள மாணவர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் நீதி மன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ். நீதவான் தீதிமன்றத்தில் சிங்கள மாணவர்கள் நான்கு பேர் முன்னிலையாகிய போதே, எதிர்வரும் 22ஆம் திகதி மீளவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் சதீஸ்கரன் கோப்பாய் பொலிஸாருக்கு பணித்துள்ளார். யாழ்....
யாழ்.குடாநாட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்னம்பலம் தனஞ்செயன் என்ற எதிரியின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன். அந்தப் பிணை மனுவையும் தள்ளுபடி செய்து 31ஆம் திகதி புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்தப் பிணை மனு தொடர்பான விசாரணைகள் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம்...
கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வசித்துவந்த செல்வந்த வர்த்தகரான மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொலையை மேற்கொண்ட சந்தேகநபரையும் அதன்பின்னர் வர்த்தகரின் சடலத்தை வாடகை வாகனம் மூலம் கொழும்பில் இருந்து மாவனெல்ல, ஹெம்மாத்தகம பகுதிக்கு கொண்டு செல்ல இணங்கிய குழுவினரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆடைத்தொழில்துறையை சேர்ந்த...
புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டு சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்ட கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் (வயது 26), இனந்தெரியாத நபர்களினால் கைதுசெய்யப்பட்டு, கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு வருடங்கள் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகியிருந்த தன்னுடைய மகனையே, இனந்தெரியாதோர் இவ்வாறு கைதுசெய்து, கடத்திச் சென்றுவிட்டதாக அவருடைய தாயார், பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். 'வெள்ளைவான்...
தமிழ்க் கைதி ஒருவர் மீது கவனக் குறைவாக துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரை கொன்றார் எனக், குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதித்தது. அத்துடன், 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. விமல் விக்கிரமகே எனும் முன்னாள் ராணுவ லெப்டினனுக்கு எதிராக நீதிமன்றம் இந்த...
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவன் இதற்கு முன்னர் இரண்டு அரச இணையத்தங்கள் உட்பட 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நேற்று (30) மேல் நீதிமன்ற பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொடர்ச்சியாக முன்னெடுத்த...
கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி தற்போது, வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். கிளிநொச்சியில் – ஏ9 வீதி 155 ஆவது கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பின்புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர்...
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவி (hacking) அதிலிருந்த தரவுகளை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது சிறுவன் நன்னடத்தை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், 26 வயது இளைஞர் எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இருவரும் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு...
இரண்டு காலாவதி திகதியிடப்பட்ட ஐஸ்கிறீம்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 4500 ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் திங்கட்கிழமை (29) தீர்ப்பளித்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் இயங்கி வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறு இரண்டு திகதிகள் இடப்பட்டிருந்த ஐஸ்கிறீம்களை, அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர். அதனை விற்பனை செய்த வர்த்தகருக்கு...
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவி (hacking) அதிலிருந்த தரவுகளை மாற்றியதாக கூறப்படும் மற்றுமொரு இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவருக்கு 26 வயதாகும். இதேவேளை, நேற்றையதினம் கடுகன்னாவ பகுதியில் வைத்து இந்த சம்பவம் தொடர்பில் 17 வயதான வாலிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இரு சந்தேகநபர்களையும் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,...
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹக் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடுகண்ணாவையில் வைத்து 17 வயதுடைய பாடசலை மாணவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளான்.
க்கோயா பிரதேசத்தில் 13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை காணொளியாக பதிவு செய்து, கையடக்க தொலைபேசி ஊடாக பார்த்து கொண்டிருந்த 5 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அந்த சிறுமியின் பெற்றோர், ஹெட்டன் காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காணொளியை பதிவு செய்து வைத்திருந்த கெமராவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொட ர்பாக குற்றம் சாட்டப்பட்ட 8 பொலிஸாரை கைது செய்து, வழக்கு தொடர சட்டா மா அதிபர் திணைக்களம் பணித்துள்ளது. யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சார்பாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த பிர தான பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றில் இதனை கூறியுள்ளார். யாழ்....
சங்குவேலியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ். கணேசநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...
மதுபோதையில் வாகனம் செலுத்திய வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சாரதி ஒருவருக்கு 9,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார், 50 மணித்தியாலம் சமூதாய சீர்திருத்த கட்டளைக்கு உட்படுத்துமாறு தீர்ப்பளித்தார். வல்வெட்டித்துறை போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு புதன்கிழமை (24) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, அபராதத்துடன் கூடிய...
நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஆலயத்துக்கு வந்த யுவதி ஒருவருக்கு தனது அலைபேசி இலக்கத்தைக் கொடுத்து உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்ட சம்பவம், புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. இதற்காக ஆலயசூழலில் 750 பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக...
வடக்கில் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து மோசடி சம்பவம் இடம்பெற்று வருகின்றது. குறித்த மோசடி மூலம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, வேலையற்ற இளைஞர் யுவதிகளை...
Loading posts...
All posts loaded
No more posts
