இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட வடமராட்சி மீனவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முற்பட்ட வடமராட்சி பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்களை, ஞாயிற்றுக்கிழமை (03) இரவு கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி, திங்கட்கிழமை (04) தெரிவித்தார். தொண்டைமானாறு, அக்கரை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரு மீனவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இவர்கள்...

யாழில் 4 ஆசிரியர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ். நகருக்கு அண்மித்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்ட, நான்கு ஆசிரியர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 18ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சசிதரன் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் குறித்த பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம்...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் பணியாளர்களை தாக்கி இலஞ்சம் பெற பொலிஸார் முயற்சி

யாழ்ப்பாணத்தில் விற்பனை நிலையமொன்றில், பொலிஸார் இலஞ்சம் பெற முற்பட்டதாக தெரிவித்து, யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் நேற்று அதிகாலை 12.30 அளவில் பொலிஸார் பணியாளர்களை தாக்கியதுடன், இலஞ்சம் பெற முற்பட்டுள்ளார். யாழ். நகரப் பகுதியிலுள்ள இரவு நேர விற்பனை நிலையமொன்றிலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. விற்பனை நிலையமொன்றிற்கு...

மிருகங்களை வேட்டையாடியோர் சரணடைந்தனர்

நக்கிள்ஸ் வனப்பகுதியில், பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளை வேட்டையாடியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (03), தமது சட்டத்தரணியுடன் பன்விலை பொலிஸில் சரணடைந்துள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் ஏற்கெனவே இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக வன விலங்குகளை வேட்டையாடிய சிலர் அவற்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக...

பாலியல் துஸ்பிரயோகம்; வரணி ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

வரணிப் பகுதி பாடசாலையொன்றில் மாணவியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் சம்பவத்தை மறைப்பதற்காக செயற்பட்ட பழைய மாணவர்களது பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை...

மல்லாவியிலும் மாணவி துஷ்பிரயோகம்

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்று வருகின்ற மாணவியை, அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததாக குறித்த மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி மாணவியை அச்சுறுத்தி கடந்த 04 மாதங்களாக ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கி வந்துள்ளார். இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (26) மாணவிக்கு துன்புறுத்தல் கொடுத்த நிலையில், மாணவி எழுத்து...

மாணவன் பலி: வானின் கதவைத்திறந்த சாரதி கைது

யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கருகில் வானின் கதவைத் திறந்தமையால் விபத்துக்குள்ளாகிய மாணவன் உயிரிழந்தமை தொடர்பில், வேனின் கதவைத் திறந்த வானின் சாரதியை, நேற்று புதன்கிழமை (29) கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பகுதியைச் சேர்ந்த மேற்படி நபரை, சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன் குறித்த சாரதியை கைது செய்ததாக பொலிஸார் கூறினர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...

பாலியல் வதை புரியும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை – நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!

மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது சட்டரீதியாக பாரதூரமான குற்றமாகும். அதிலும், ஆசிரியர்களே மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது மேலும் மோசமான குற்றமாகும். எனவே, பாடசாலை மாணவிகள் மீது பாலியல் இம்சை புரியும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்.மேல்...

பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்

பொதுவிடத்தில் புகை பிடித்தவர்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அறுவருக்கு நீதிமன்றத்தால் அபராதமும் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பொதுவிடத்தில் புகை பிடித்தவர்கள் மற்றும் சுகாதார அறிவுறுத்தலின்றி சுருட்டு விற்பனை செய்தமை போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அறுவருக்குத் தலா-250 ரூபா வீதம் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட மேலதிக நீதவான் ரி. கருணாகரன் நேற்று தீர்ப்பளித்து...

மாணவனைத் தாக்கியதில் செவிப்பறை பாதிப்பு!!! 3 ஆசிரியர்கள் விளக்கமறியலில்!

சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரைத் தாக்கியதால் மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் உயர்தரத்தில் கல்விகற்கும் குறித்த மாணவனை அப்பாடசாலையின் உடற்பயிற்சி ஆசிரியர் அடித்ததில் மாணவனது செவிப்பறை பாதிப்படைந்து...

மாணவனின் மர்ம உறுப்பை பிடித்து தண்டனை வழங்கிய அதிபர்!!

பாடசாலை மாணவனின் மர்ம உறுப்பினை பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ். பாசையூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 8ல் கல்வி கற்கும் மாணவன் வகுப்பறையில் குழப்படி செய்தமைக்கு, தண்டனை வழங்குவதற்காக இவ்வாறு மர்ம உறுப்பை பிடித்து தண்டனை வழங்கியுள்ளார்....

பொலிஸாரின் தாக்குதலில் இளைஞன் படுகாயம்

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரால், இமையாணன் மேற்கு உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த நற்குணம் லிசாந்தன் (வயது 22) என்ற இளைஞன் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், நேற்று திங்கட்கிழமை (27) அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி இளைஞன் பயன்படுத்திய அலைபேசியிலிருந்து மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு அநாமதேய அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் இது...

யாழில் மாணவன் இறந்த விபத்து முன் திட்டமிடப்பட்டதா ? அதிர்ச்சியளிக்கும் சி.சி.ரி.வி வீடியோ !

காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (23) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் யாழ்.மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் உயிரிழந்த நிலையில் அவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் பட்டா டிமோ சாரதிஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள சி.சி.ரி.வி கமராப் பதிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறித்த...

யாழில் 100 கிலோ கஞ்சா கடத்தல் முறியடிப்பு ; இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு கடத்தி செல்லுவதற்காக கொண்டு வரப்பட்ட 100கிலோ கேரள கஞ்சா விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பாரிய கடத்தல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட வளலாய் - அக்கரை கடற்பகுதியில் வைத்தே இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும்...

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: மேலும் நான்கு ஆசிரியர்கள் கைது

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது பாடசாலை மாணவியொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் இந்தச் சம்பவத்தை மூடிமறைப்பதற்கு முயற்சித்த அந்தப்...

ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை திருடி சவாரி செய்த மாணவர்கள்!!

மட்டுவில் பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சவாரி செய்த பாடசாலை மாணவர்கள் மூவரில் பிரதான சந்தேகநபரான மாணவனை அச்சுவேலியில் அமைந்துள்ள அரச சான்றுபெற்ற பாடசாலையில் அனுமதிக்குமாறு வியாழக்கிழமை (23) உத்தரவிட்ட சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், ஏனைய இரு மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கி பிணையில்...

போலி நாணயத்தாள் மோசடி: பெண் உட்பட மூவர் கைது

நகையை அடகுவைத்து வங்கியில் பெற்றுக்கொள்ளப்பட்ட நான்கு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தில் 2 இலட்சம் ரூபாய், போலி நாணயத்தாளாக வழங்கப்பட்டது என பெண் ஒருவர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பொலிஸார், மூவரைக் வியாழக்கிழமை (24) கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார்,இன்று...

பாரியளவு போதைப் பொருளுடன் இரு இலங்கை இளைஞர்கள் இந்தியாவில் கைது

இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் சுமார் 06 கோடி இந்திய ரூபா மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளுடன் 2 இலங்கை வாலிபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இலங்கைக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தில் போதைப் பொருள்...

மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு 14 நாள் விளக்கமறியல்

மாணவன் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி நகர்ப்புறப் பாடாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை சாவகச்சேரி நீதிமன்றம் 14 நாள் விளக்கமறியலில் வைக்க உத்தவரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தெடர்பில் தெரியவருவதாவது, கடந்த 15 ஆம் திகதி சாவகச்சேரி நகர்ப்புறப் பாடசாலை ஒன்றில் கல்விகற்பிற்கும் ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனைத் தாக்கியபோது குறித்த மாணவன் காயமடைந்த...

யாழில் ஐந்து வருடத்தில் 74 கொலைகள், 184 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்

2016 ஜனவரி முதல் மே 19 வரை யாழ். குடாநாட்டில் 3 கொலைகளும் 14 பாலியல் துஷ்பிரயோகங்களும் 50,000ரூபாவுக்கு அதிகமான 16 வழிப்பறிக் கொள்ளைகளும், 23 வீடுடைப்பு கொள்ளைகளும் இடம்பெற்றதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். 2011ஆம் ஆண்டு முதல் 19.05.2016 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டில் 74 கொலைகளும், 184...
Loading posts...

All posts loaded

No more posts