- Tuesday
- September 15th, 2026
கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் வாளுடன் வெள்ளிக்கிழமை (02) கைதான சந்தேகநபர்கள் ஐவரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டதாக, கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.மஞ்சுல கஹந்தவெல தெரிவித்தார். குறித்த நபர்களும் சுன்னாகம், மானிப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்ற பாரதூரமான...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 5 இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 வாள்கள், வாள்வெட்டுக்கு தயாராகும் புகைப்படங்கள், வீடியோக்கள் அடங்கிய கையடக்க தொலைபேசி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் முயற்சியில்...
யாழ்ப்பாணம் கைலாசப்பிள்ளையர் கோயில் பகுதியில் வெள்ளிக்கிழமை (02) இரவு ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். பொம்மைவெளி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வைத்திருந்த 3 கிராம் 146 மில்லிகிராம் அளவுடைய ஹெரோயினை கைப்பற்றியுள்ள பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை...
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ம் திகதி பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்து இருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான்...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் வாகனம்...
நீதிமன்றில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற போது தப்பிச் சென்ற குடு பேபி என அழைக்கப்படும் கரிகாலன் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேடுதல் நடத்திய வேளையில் யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். 180 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் குடு பேபி என அழைக்கப்படும் கரிகாலன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக...
யாழில் இயங்கும் ஆவா எனும் குழு தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 11 பேரையும் சரீரப் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். அண்மைக் காலங்களில் யாழில் இடம்பெற்ற சில வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா எனும் குழு தொடர்புபட்டுள்ளதாக, தகவல் வௌியானது. இதற்கமைய, பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த குழுவுடன்...
ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் யாழ்ப்பாணக் காவல்துறையினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நான்கு இளைஞர்களைக் கைதுசெய்தனர். ஆவாக் குழுவுடன் தொடர்புகளைப் பேணினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே குறித்த நான்குபேரும் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், குறித்த நபரால் முகநூலில் பதிவேற்றப்பட்ட புகைப்படம் ஒன்றில் காணப்படும் மோட்டார் சைக்கிள் குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர்...
கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காணாமற்போவதற்கு காரணமாகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இராணுவத்தினரின் பிணை மனு தொடர்பான விசாரணை, எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி நடைபெறும்” என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்றுத் திங்கட்கிழமை (28) உத்தரவிட்டார். யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள்,...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கணவருக்கு, பிஸ்கட் பையினுள் வைத்து கஞ்சா கடத்த முற்பட்ட பெண்ணைக் குழந்தையுடன் கையும் மெய்யுமாகப் பிடித்த சிறைச்சாலை அதிகாரிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புபட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்ப்பதற்கு மேற்படி பெண், நேற்றுத் திங்கட்கிழமை (28) மதியம் உணவு தயார் செய்துகொண்டு சென்றுள்ளார். இதன்போது, 38...
முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இன்று வாக்குமூலம் அளிக்கச் சென்ற இவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கருணா அம்மான், பின்னர் அந்த இயக்கத்தில்...
பருத்தித்துறை பகுதியில் 87 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து, கஞ்சாவை கடத்துவந்ததாக சந்தேகிக்கப்படும் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாசிங்க தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து...
கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்துச் செய்து வழக்கு நிறைவடையும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்றயதினம் (28) உத்தரவிட்டுள்ளார். யாழ் நகரப் பகுதியில் வசித்து வந்த தேவராஜா என்ற குடும்பஸ்தர் தனது வீட்டில் அப் பகுதியை சேர்ந்த ரவி என்பவரை குடியேற்றியிருந்தார். இந்தநிலையில் கடந்த...
மணல் கடத்தல்காரர்களுடன் தொடர்பினை பேணி, அவர்களின் நடவடிக்கைக்கு ஆதாரவாக செயற்பட்டு வந்த, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நிர்வாகப்பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடந்த நான்கு வருடங்களாக நிர்வாக பிரிவில் கடமையாற்றி...
புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 09ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சறோஜினி இளங்கோவன் உத்தரவிட்டார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்று திங்கட்கிழமை (28) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 12 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில்...
வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின் தங்கச்சங்கிலியை கொள்ளையடிக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பிரதேச இளைஞர்களால் மடக்கிப்பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பாடசாலை மாணவனை, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்வதற்கு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் சனிக்கிழமை (26) அனுமதி வழங்கினார். மேலும் குறித்த சம்பவம் தொடர்புடைய வழக்கை, எதிர்வரும் 02ஆமி திகதிக்கு...
180 மில்லிகிராம் குடு வைத்திருந்த குற்றச்சாட்டில் குடு பேபி என அழைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் வைத்தியசாலை வீதியில் வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் சனிக்கிழமை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். யாழ். ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் கொள்ளையிடப்பட்ட துவிச்சக்கரவண்டியில் குடு விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். இதன்போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், அவர்...
யாழ்.மாவட்டத்தில் பகல் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 4 பேரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 21 பவுண் நகைகள், ஒரு மடிகணனி, டிஜிட்டல் கமரா ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ். நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகயன் தலைமையில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் மீது, 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டபோது, செனவிரத்ன என்ற சந்தேகநபர், கறுப்புநிறப் பையினுள் ரி-56 ரகத் துப்பாக்கியை வைத்து எவ்வாறு சுட்டார் என்பதை, முதலாவது சாட்சியாளரான மனம்பேரிகே பிருதிவிராஜ் சம்பத், கொழும்பு மேல்நீதிமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை செய்துகாட்டினார்....
Loading posts...
All posts loaded
No more posts
