- Thursday
- September 17th, 2026
பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று (07-12-2012) 5பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்தார். (more…)
யாழ். மல்லாகம் சந்தியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயொருவரும் அவரின் 4 வயதுடைய மகனும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழிலிருந்து மல்லாகம் நோக்கி சென்ற வான் ஒன்று அங்கு கடமையில் நின்ற பொலிஸாரை கண்டதும் மிக வேகமாக செல்ல முற்பட்டுள்ளது. (more…)
கொக்குவில் பகுதியில் நடுத்தர வயது ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் யார் என நேற்றிரவு வரை அடையாளம் காணப்படவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். (more…)
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து நேற்றுக்காலை வவுனியா நீதவான் எலக்ஸ் ராஜாவின் பணப்பையினை பிக்பொக்கட் அடித்ததாக கூறப்படும் இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்தவர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . (more…)
21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை மற்றும் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்த 24 வர்த்தகர்களுக்கு 47,500 ரூபா தண்டப்பணம், யாழ். மற்றும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றங்களினால் அறவிடப்பட்டுள்ளதாக யாழ். மதுவரி நிலைய பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்தார். (more…)
முச்சக்கரவண்டியில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு யாழ். பொலிஸ் நிலைய பிரதிப் பொலிஸ் அத்தியட்சசகர் குணசேகர வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். (more…)
பாடசாலை அனுமதிக்கான கட்டணத்தை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக நன்கொடையாக வழங்குமாறு வற்புறுத்தினால், இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)
வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரைக் கடத்த முயற்சித்த இனந்தெரியாதோரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், பல்கலைக்கழக பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (more…)
கார்த்திகை விளக்கீட்டுக்காக சுட்டி விளக்குகள் விற்பனை செய்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)
கோழி இறைச்சியை வாங்கிவிட்டு காசோலையைக் கொடுத்து ஏமாற்றியுள்ளார் என்று வியாபாரி ஒருவருக்கு எதிராகத் தென்னிலங்கை வியாபாரி ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)
தங்கம் எனக் கூறி போலி நகைகளை வங்கிகளில் அடகு வைத்தார் என்ற குற்றச்சாட்டில் நெல்லியடியில் ஒருவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த காலங்களில் நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் தங்கம் எனக் கூறி போலி நகைகளை 4 வங்கிகளில் 4 தடவைகள் அடகு வைத்து பணத்தைப் பெற்றிருந்தார். (more…)
மின்னஞ்சல் (ஈமெயில்) மூலமாகவும், குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவும் பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் பா.சிவதீபன் முன்னெச்சரிக்கை செய்துள்ளார். (more…)
யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் சிறுகுற்றம் புரிந்த 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.இ.எரிக்பெரேரா தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளுக்கு எதிராக தலா 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)
வல்வெட்டித்துறையில் புலிக்கொடி பறந்தமை தொடர்பில் எவரும் கைது செய்ய்படவில்லை புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார். (more…)
டெங்குநுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்தததாகக் கூறப்படும் 12 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)
வல்வெட்டித்துறைக் கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள சிறுதொழில் புரிவோருக்கும் பெரும் தொழிலில் ஈடுபடுவோருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. (more…)
கனடா மொன்றியலில் யாழ். அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடைய யாழ். அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன் யோகராணி என்பவர் வாகனத்துடன் சேர்த்து எரிக்கபட்டுள்ளதாக மொன்றியல் போலிசார் தெரிவிக்கின்றனர். (more…)
யாழ், வேலணை பகுதியைச் சேர்ந்த சதாசிவம் லோகேஸ்வரன் (வயது 35) என்பவர் புதன்கிழமை அதிகாலை முதல் காணாமல் போயுள்ளார் என யாழ் மனித உரிமை ஆணைக்குழுவிலும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் குறித்த நபரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை அழைத்துச் சென்றதாகவும் அதன்பின்னர் அவர்...
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் போலிச் சாமியார் ஒருவரை நம்பி குடும்பமொன்று தங்க நகைகளைப் பறிகொடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் நகரத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கியிருந்த சாமியார் ஒருவர் மக்களின் கஷ்டங்களை நீக்குவதாகக் கூறி சுய விளம்பரம் செய்து வந்துள்ளார். இவ்விளம்பரத்தைப் பார்த்து, இவரை நம்பிய ஒரு குடும்பத்தினர் தமது கஷ்டங்கள் குறித்து சாமியாரிடம் தெரிவித்துள்ளனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
