- Thursday
- September 3rd, 2026
இலங்கையிலிருந்து 269 பேரை கனடாவுக்கு அனுப்புவதாக ஆசைகாட்டி பலகோடி ரூபாவைச் சுருட்டிக் கொண்டு ஆபிரிக்க நாடுகளான டோஹோ மற்றும் மாலி முதலான நாடுகளுக்கு கூட்டிச்சென்று அநாதரவான நிலையில் அவர்களைக் கைவிட்ட பிரதான சந்தேக நபரான அருணகிரிநாதன் ஜெயரூபனைக் கைதுசெய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பலகோணங்களிலும் விசாரணைகளை முடுக்கிவருவதாகவும் கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
யாழ்ப்பாணத்திலிருந்து தொலைக்காட்சி சேவை நடத்திவரும் நிறுவனமொன்று விநியோகித்த டொல்பின் தொலைக்காட்சி சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தொலைகாட்சி சேவைக்கென பெருமளவு பணத்தைச் செலுத்தி இணைப்புக்களை வாங்கிய பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, (more…)
தாயின் தங்கநகைகளைத் திருடிய மற்றும் தங்கநகைகளை திருடுவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவருக்கு தலா 1,500 ரூபா அபராதத்துடன், 4 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ். ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். (more…)
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தங்கத் தாலிக் கொடி ஒன்றை நான்கு துண்டுகளாக வெட்டி அதை தங்க விற்பனை நிலையத்தில் விற்பனை செய்த ஏழு பேரை யாழ்.பொலிஸார் புதன்கிழமை கைது செய்து யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.தங்கத் தாலியை களவு எடுத்து விற்பனை செய்த சந்தேக நபர்கள் ஏழுபேரையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றிரவு அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.பருத்தித்துறை சக்கோட்டையைச் சேர்ந்த இருதயநாதர் மேரி டிலக்சனா (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அல்வாய் வடக்கு...
கச்சேரி நல்லூர் வீதியில் நாலாம் சந்திக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 3 லட்சம் ரூபா பணம் மற்றும் 10 பவுண் தங்க நகைகள் என்பன திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தெடர்பாக மேலும் தெரியவருவதாவது (more…)
இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு எதிராக மின்பாவனையாளர்கள் மூவர் வழக்கு தாக்கல் செய்திருப்பதாக யாழ்.மவட்ட நீதிமன்றப் பதிவாளர் எஸ். ரெட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்டத்தில் சட்ட விரோத மின்பாவனையாளர்கள் அண்மையில் கைது செய்தமை தொடர்பாக பிரபல வர்த்தகர்கள் இந்த வழக்கைத் தொடுத்திருப்பதாகவும் அவர்களுக்கான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக யாழ்.நீதவான்...
நீர்வேலிப்பகுதியில் நேற்று இரவு 8.15 மணியளவில் கணவன் – மனைவி இருவரும் வெட்டிகொலை செய்யப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த மகன் வெட்டுக் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணி பிரச்சனை காரணமாக சகோதரனே தனது சகோதரியையும் மைத்துனரையும் வீதியில் வழிமறித்து வெறியாட்டம் ஆடி வெட்டிப்படுகொலை செய்திருப்பதாக முந்திக்கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. (more…)
