- Tuesday
- September 15th, 2026
வவுனியாவினில் போலி விஞ்ஞானியாக அடையாளப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய நபரான என்.என்.ஜக்சன் என்பவர் மீண்டும் யாழில் வைத்து கைதாகியுள்ளார். முன்னதாக நிதி மோசடி தொடர்பில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர் தற்போது யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்டதாகக் கைதாகியுள்ளார். விசாரணை தவணையொன்றிற்காக வந்திருந்த அவர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து...
கொடிகாமம் பகுதியில் கேரள கஞ்சா கொண்டு செல்ல முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொஸிசார் தெரிவிக்கின்றனர் குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 8 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேகநபர்கள் இருவரும் மோட்டார் வாகனத்தில் பயணித்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும், பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒரு இலட்சம்...
யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் செவ்வாய்க்கிழமை (22) மாலை ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர் சண்டிலிப்பாய் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய நபர் என பொலிஸார் கூறினார். சந்தேகநபரிடம் இருந்து 53 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்கும் மீட்கப்பட்டது. கிடைக்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்...
இந்தியா சென்ற நிலையில், திருப்பி அழைக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரன் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி விவேதனி சபேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் என்று...
அனுமதி பத்திரமின்றி பஸ் செலுத்தினால் 2 இலட்சம் ரூபாய் தண்டத்தை அறவிடுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
வடக்கில் கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட நால்வரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வவுனியா பொலிஸார் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். அண்மையில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடம் கைக்குண்டு 2, கத்திகள் 4, 28 பவுண் தங்க நகைகள், முகத்தை மூடி மறைத்துக் கட்டும்...
'வட மாகாணத்தில் வாள்வெட்டுக்களில் ஈடுபடுகின்றவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள், அவர்கள் கைது செய்யப்பட்ட பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் நீதிமன்றங்களில் முற்படுத்தப்படாது, வெளியிடங்களில் இருக்கும் நீதிமன்றங்களில் முற்படுத்துகின்ற செயற்பாடானது அரசியலமைப்பு சட்டத்தினையும் சர்வதேச மனிதவுரிமை சட்டத்துக்கும் அரசியல் சிவில் சட்டத்தினையும் மீறிய செயற்பாடு' என, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்றுச் செவ்வாய்க்கிழமை...
வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, போதையில் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், பாதுகாப்பற்ற வகையில் ரயில் பாதைகளில் பயணித்தல், காப்புறுதி...
நவக்கிரி, ஈவினை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை வீதியால் சென்ற பெண்னின் 2 பவுண் தங்கச்சங்கிலி அறுத்தெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக அச்சுவேலிபொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் நெல்லியடி கரவெட்டி பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினார். வீதியால் சென்ற குறித்த பெண்னை இடைநடுவில் மறுத்து, கைப்பையினை...
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடியினை பயிரிட்ட ஒருவரை யாழ்.பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மணியம் தோட்டம் பகுதியில் ஒருவர் கஞ்சா வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த நபரின் வீட்டின் பின்புறத்தில் றப்பர் சாடியினுள் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் மூன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை கைப்பற்றப்பட்டிருந்த கஞ்சா செடிகளின் பெறுமதியானது ஐயாயிரம்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை சுட்டு படுகொலைச் செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸார் ஐவரின் விளக்கமறியலும் யாழ் நீதவான் நீதிமன்றத்தினால் டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி வரையிலும் இன்று வெள்ளிக்கிழமை நீடிக்கப்பட்டது.
‘ஆவா’ குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் நிரபராதிகளாவே உள்ள நிலையில், உண்மைகள் நிரூபிக்கப்படும்வரை அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ‘ஆவா’ குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவிலலை எனவும் குறித்த...
மாதகல் கடற்கரை பகுதிக்கு அருகாமையில், ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வூர் மக்களால் பொலிஸாருக்கு கொடுக்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்கு மாறு வேடத்தில் சென்ற பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர். இதன்போது அந்தப் பெண்ணிடமிருந்து 09 கிலோவும் 305 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் மாதகல்...
திருட்டு குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் திட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரும், 19 வயதுடைய இளைஞர் ஒருவருமே நேற்று புதன்கிழமை இரவு இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் அவர்களது வீட்டில் வைத்தே கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்படும் போது, அவர்களது உடமையில் இருந்து...
உண்மையில் இந்த ஆவா குழு என்பது யார்? இதில் எத்தனை பேர் உள்ளனர்? இவர்கள் எங்கு ஒன்று கூடுவார்கள்? இவர்களின் தலைவன் யார்? இவர்களின் பின்புலம் என்ன? இவ்வாறான பல கேள்விகள் எமது மனதில் உள்ளன. இவை அனைத்திற்கும் இந்த ஆவா குழு என்று பெயர் யாரால் சூட்டப்பட்டது? எதனால் சூட்டப்பட்டது என்று பார்த்தாலே இவை...
“ஆவா“ குழுவின் உறுப்பினர்கள் 11 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்றயதினம் 12 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆயர் செய்யப்பட்டனர். இவர்களுக்கான விளக்கமறியலை எதிர்வரும் 28ம்திகதி வரை நீடிப்பதாக ஊர்காவற்துறை நீதவான் ஏ.எல்.எம். றியால் உத்தரவிட்டார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக்கணக்கு விபரங்களை பெற்றுக்கொள்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். இந்த சந்தேக...
ஆவா குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் மற்றுமொருவர் முல்லைத்தீவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் முன்னதாக யாழ்ப்பாணம் - சுண்ணாகம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய வேளை, ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணியதாக தகவல் வௌியாகியுள்ளது. இதன்படி தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் இவரைக் கைதுசெய்துள்ளனர். மேலும் சந்தேகநபர் முல்லைத்தீவு - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 20...
ஆவா குழு உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நான்குபேரை எதிர்வரும் 16 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல உத்தரவிட்டுள்ளார். ரவிந்திரன் நிதர்ஷன், லோகநாதன் தர்ஷிகன், மகாதேவன் கந்தகன் மற்றும் ரவிந்திரன் நிலூஷன் ஆகியோரே விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஆவா குழு தொடர்பில் 11 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த செவ்வாய்க்கிழமை மூவரும்,...
அரச வங்கியொன்றில் ஏ.ரி.எம். இயத்திரத்தில் ரகசிய கமராவை பொறுத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை பெற்று பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் 4 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வவுனியா பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ரகசிய கமரா மூலம் வாடிக்கையாளர்களின் ரகசிய இலக்கங்களை பெற்றுக் கொண்டு அதற்கமைய போலியான ஏ.ரி.எம் அட்டைகளை...
Loading posts...
All posts loaded
No more posts
