சமூக வலைத்தளங்ளை கட்டுப்படுத்த புதிய சட்டம்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பாக புதிய சட்டங்களை தயாரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் சமூக வலைத்தளங்ளை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சைபர் குற்றத்தின் கீழ் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான சட்டங்கள் நாட்டில் காணப்படாத நிலையில் புதிய சட்டங்களை உருவாக்கி அதனூடாக நடவடிக்கை...

யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை: பொலிஸாரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி...
Ad Widget

எமில் காந்தனுக்கு திறந்த பிடியாணை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நிதியளிப்பாளராக இருந்த எமில் காந்தனை கைது செய்யுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. ராடா, வழக்கு தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய கிளிநொச்சியில் இருவர் கைது

கிளிநொச்சி ஆனந்தபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்த இருவர், ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய இன்று (வியாழக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் மதுபான விற்பனை இடம்பெறுவதால் மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திப்பதாக தெரிவித்து, கிராம மக்களால் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, ஒவ்வொன்றும்...

முல்லைத்தீவில் குதிரையோடியவர் கைது

முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலய பரீட்சை நிலையத்தில் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வருடம் கணிதபாட பரீட்சையில் தோல்வியுற்ற ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுதியவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து உரிய பரீட்சாத்தியையும் கைது...

அம்பிட்டிய சுமணரத்தின தேரர் பிணையில் விடுதலை

மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் 50,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில், இன்று(14) புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில்; நடந்து கொண்டார், இன ரீதியான பேச்சுக்களை பேசியதாக கூறி, அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கு எதிராக, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர். இதையடுத்து தேரரை,...

கஞ்சா வைத்திருந்த சிறுவனுக்கு விளக்கமறியல்!

நேற்று முன்தினம் இரவு தமது வழமையான ரோந்து பணியை பொலிஸார் மேற்கொண்டிருந்த வேளை 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் கொட்டடி மீனாட்சி அம்மன் வீதியை சேர்ந்த சிறுவனே கஞ்சாவை நுகர்விற்காக வைத்திருந்ததன் பேரில் கைது செய்யப்ப ட்டார். கைது செய்யப்பட்ட சிறுவன் நேற்று யாழ். நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் சந்தேக நபரை...

140 கிலோ கிராம் கஞ்சா சிக்கியது: 3பேர் கைது

முல்லைத்தீவில் இருந்து கடல்மார்க்கமாக படகொன்றில் கடத்தி திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட 140 கிலோ கிராம் கஞ்சா, நிலாவெளி பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை 2 மணியளவில் கைப்பட்டப்பட்டது. சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர். திருகோணமலை பிராந்திய துர்நடத்தை ஒழிப்பு பிரிவின் பொலிஸ் குழு ஒன்று குறித்த பிரதேசத்தில் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது குறித்தளவு கஞ்சா...

கோப்பாயில் கஞ்சா, வாளுடன் அறுவர் கைது

யாழ். கோப்பாய் பகுதியில் வாள் மற்றும் கஞ்சாவுடன் ஆறு இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரி சுபாஷ் மஞ்சுள காந்தோல தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், கோப்பாய் பகுதியில் கஞ்சா புகைத்து விட்டு குழப்பத்தை தோற்றுவிக்கும் கும்பல் ஒன்று தொடர்பாக மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்றய தினம் அதிகாலை பொலிஸார்...

நடு வீதியில் அமர்ந்த பெண் பொலிஸாரால் கைது

வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் பிரதான கண்டி வீதியில் நடுவே அமர்ந்து பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பழகிவந்த குறித்த பெண் பணம் கொடுக்கல் வாங்கல்கள் காரணமாகவும் இருவருக்கிடையே இடம்பெற்ற முரண்பாடுகளை அடுத்து பணம்கொடுத்த பெண் பணம் வாங்கிய பெண்ணிற்கும் இடையே...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களை எதிர்வரும்26ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் இ.சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனை அடுத்து குறித்த 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்...

குதிரையோடிய ஆசிரியர் கைது!

வவுனியா - உலுக்குளம் மகாவித்தியாலயத்தில் பிறிதொரு நபருக்காக க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதிய அரச பாடசாலை ஆசிரியர் ஒருவர் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா மின்சார சபையில் பணியாற்றும் நபரொருவர் சாதாரண தரப்பரீட்சையில் தோற்றுவதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கான அனுமதி அட்டையும் கிடைத்திருந்தது. இந்நிலையில் மின்சாரசபையில் பணியாற்றும் குறித்த நபர், கைதுசெய்யப்பட்டுள்ள சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கடமைபுரியும்...

காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்தியமை, விற்பனை செய்தமை தொடர்பான வழக்கில் 5கோடி தண்டம்!

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்தியமை, அவற்றை விற்பனை செய்தமை தொடர்பாக 815 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று தொடரப்பட்ட வழக்கில் 5,305,500 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக பாவனையாளர் அதிகார சபையின் யாழ் மாவட்ட அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் பாவனையாளர் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில்...

நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்கு இரட்டை மரண தண்டனை

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது 2001 ஆம் ஆண்டு தாக்குதல் நடாத்தியமை தொடர்பான வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நெப்போலியன் எனும் நபர் பிரபல ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் ஆவார். கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில் நிமலராஜன் வீட்டில்...

சுன்னாகம் இளைஞர் கொலை : பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட வழக்குத் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவரை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் அன்டன்...

7 குற்றங்களுக்கு 25000 ரூபா தண்டப்பணம் உறுதி!

7 குற்ற செயல்களுக்கு தீர்மானிக்கப்பட்ட 25,000 ரூபாய் தண்டப்பணத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த 7 குற்றச்சாட்டுகளுக்கும் சட்டத்தை செற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், சாரதி...

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்களை மாலை 5 மணியளவில் பனிக்கன்குளம் பகுதியில் வீதிகடமையில் ஈடுபட்டிருந்த மாங்குளம் பொலிஸ்நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி...

த.தே.கூ மீது தாக்குதல்: மூவருக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி, இருவரை படுகொலை செய்ததுடன் 20 பேர் வரை காயமடைந்தனர். குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று எதிரிகளுக்கும் இரட்டை மரண தண்டனையும் பத்து வருட சிறைத் தண்டனையும் விதிக்க வேண்டும் என்று சட்ட மாஅதிபர் சார்பில் பிரதி அரச...

கருணாவுக்கு பிணை கிடைத்தது!

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரச வாகனத்தை துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, கடந்த 29ம் திகதி நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட கருணா, பின்னர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மேலும், கடந்த ஐந்தாம் திகதி அவரது...

குழந்தைக்குத் தான் தந்தையில்லையென பெண்ணை ஏமாற்றிய இளைஞனுக்கு சிறை

சட்டரீதியாகத் திருமணம் செய்வதாகக் கூறி நம்பிக்கை மோசடி செய்து குழந்தை ஒன்று பிறப்பதற்குக் காரணமான இளைஞனுக்கு, 5 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்சம் ரூபாய் பணத்தினை நட்டஈடாக வழங்குமாறு உத்தரவிட்டார். சந்தேகநபரின் மரபணு, குழந்தையின் மரபணுவுடன் ஒத்துபோனநிலையில்;...
Loading posts...

All posts loaded

No more posts