- Tuesday
- September 15th, 2026
வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று முன்தினம் ( 01) காலை 10.30மணியளவில் முச்சக்கர வண்டி சாரதி மீது மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்ட இரண்டு இராணுவ வீரர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் காலை மூன்று முறிப்பு பகுதியிலுள்ள இராணுவ வீரர்கள் இருவர் மதுபோதையில் அப்பகுதியிலிருந்து முச்சக்கரவண்டி...
பொலிஸாரை தகாத வார்த்தையால் பேசிய இளைஞரை யாழ். பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கைதுசெய்யப்பட்ட இளைஞர் நேற்று (திங்கட்கிழமை) யாழ். பஸ்தியன் சந்திப்பகுதியில் இளைஞர்களுடன் நின்றுள்ளார். அப்போது, சிங்கள மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்த...
போக்குவர்த்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படவுள்ளதாக உத்தேசி்க்கப்பட்ட 25,000 ரூபா அபராதம் விரைவில் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வௌியிட்டார். மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட...
பொதுச்சொத்துக்கள் பொது இடங்களில் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் வீதிகளின் ஓரங்களில் நிழல்தரும் மரங்களில் விளம்பரத் தகடுகளை ஆணிகளைப் பாவித்துப் பொருத்துதல் என்பன யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (01.01.2017) முதல் தடைசெய்யப்படவுள்ளதாக ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார். சுவரொட்டிகளை விளம்பர நோக்கத்துக்காகவும் அறிவுறுத்தல் நோக்கத்துக்காகவும் காட்சிப்படுத்தவிரும்புவோர் இரண்டுக்கு மேற்படாத சுவடிரொட்டிகளை யாழ்.மாநகரப் பகுதிகளில் நிறுவியுள்ள விளம்பரப்...
வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக, கடந்த வருடம் 26 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறைப்பாடுகள், யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி கந்தையா தியாகராஜா, சனிக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்ககையில், நெல்லியடி,...
1 கிலோ 800 கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த மணல்காடு பிரதேசத்தினை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனை, உப்புவல்லை பகுதியில் வைத்து சனிக்கிழமை (31) கைதுசெய்துள்ளதாக, காங்கேசன்துறை குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். சிவில் உடையில் சென்ற பொலிஸார், சந்தேகிக்கப்பட்ட இளைஞன் ஒருவரிடம் தாமும் கஞ்சா வாங்குவது போல் பாசாங்கு செய்து அவரைக் கைதுசெய்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கம் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையினை குற்றப்புலனாய்வு பிரிவினர்...
போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த இலங்கை பிரஜைகள் இருவர், கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த நிலையில், விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆவண சோதனையின் போது, போல கடவுச்சீட்டு...
யாழ்.நகர மக்கள் தமது வீடுகளில் நாளாந்தம் சேரும் கழிவுகளை உக்கக்கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள் என தரம் பிரித்து வைப்பதன்மூலமே அவற்றை அகற்றுவது இலகுவாக இருக்குமென யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்தார். யாழ் மாநகர சபையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,...
யாழ்ப்பாணத்தின் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சிக்கியா என அழைக்கப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளை கைப்பற்றியுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சிக்கியா என்றழைக்கப்படும் யோகேஸ்வரன் என்பவர் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர். இவர் ஏற்கனவே திருட்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டிருந்த நிலையில் அதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இவ்வாறான நிலையில் சிறைக்காலம் முடிந்து...
யாழில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் திரைப்படம் பார்க்க சென்றவரை திரையரங்க ஊழியர்கள் தகாத வார்த்தை பிரயோகம் பிரயோகித்து அநாகரிகமாக அவருடன் நடந்து கொண்டதாகவும், அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டதாகவும் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர் தெரிவிக்கையில், யாழில் உள்ள குறித்த திரையரங்கில் சனிக்கிழமை (24) திரைப்படம் பார்க்கச்...
அனுமதிச் சீட்டு (டிக்கட்) இன்றி இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 1000 ரூபா வரை உயர்த்துவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, போக்குவரத்து அமைச்சிடம் குறித்த யோசனை வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர், ரமால் சிறிவர்த்தன குறிப்பிட்டுள்ளார். தற்போது அரச பஸ்களில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 250 ரூபா மற்றும்...
வர்த்தகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து பரிசுகளையோ, பரிசு உறுதிச்சீட்டுக்களையோ பெறுவதானது, இலஞ்ச சட்டத்தின் கீழ் தண்டணைக்குரிய குற்றமாகும் என்பதை அரசாங்க ஊழியர்கள் மத்தியில் அறிவுறுத்துவதற்கு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்புடைய தீர்மானம், தேசிய ஊழல் ஒழிப்பு மாநாட்டின் போது எடுக்கப்பட்டதாகவும் வர்த்தகர்கள் மற்றும்...
வவுனியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெரும்பான்மையினரத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பேரூந்து ஒன்றும் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா நகர பேரூந்து நிலையத்தில் த. சுபராஜ் என்ற குறித்த இளைஞன் உணவகம் நடத்தி வருகின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை வவுனியா கொழும்பு பகுதியில் பயணிக்கும் தனியார்...
50 கிராம் கஞ்சா பொதியினை 500 கிராம் மிக்சர் பக்கெற்றுக்குள் மறைத்து, சிறைச்சாலைக்குள் கொண்டு சென்ற அல்லைப்பிட்டி வெண்புரவி மீள்குடியேற்றப்பகுதியினை சேர்ந்த பெண்ணை, புதன்கிழமை (21) மாலை கைதுசெய்த சிறைச்சாலை அதிகாரிகள், யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வெண்புரவி மீள்குடியேற்றப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள தனது மகளைப் பார்ப்பதற்கு வந்த போது, தெரிந்த ஒருவர், இந்த உணவுப் பொதியினை...
காரைநகர் கடல்பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேரை, 3 விசைப்படகுடன் காங்கேசன்துறைக் கடற்படையினர் புதன்கிழமை (21) இரவு கைதுசெய்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். கைதான மீனவர்கள் அனைவரும் புதுக்கோட்டை மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். கைதான மீனவர்கள் விசாரணையின் பின் கடற்றொழில்...
வடமராட்சி பொற்பதி பகுதியில் நேற்று முன்தினம் குடும்பப்பெண்னை வெட்டிக்கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே குறித்த பெண்ணைக் கொலை செய்தவர் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பெண் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கிலே பெண்ணைக் கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது....
சங்கத்தானை பகுதியில், கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இ.போ.ச பஸ் சாரதியை, 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிபிள்ளை, நேற்று அனுமதி வழங்கினார். மேலும், இந்த விபத்துடன் தொடர்புடைய வழக்கை, எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி வரை, நீதவான்...
வடமராட்சி தும்பளைப் பகுதியில், சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து, அண்ணனின் கத்திக்குத்துக்கு இலக்காகி, தம்பி பலியாகியுள்ளார். திங்கட்கிழமை (19) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்தக் சம்பவத்தில், அதே பகுதியினைச் சேர்ந்த சிவகுமார் சுவர்ணன் (வயது 20) என்பவரே பலியானதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நெடுந்தீவின் வடமேற்கு பகுதியில், இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள், இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 2 டோலர் படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள், மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் கூறியுள்ளனர்.
Loading posts...
All posts loaded
No more posts
