- Thursday
- November 20th, 2025
இலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதி காணிகளை பார்வையிட இராணுவத்தளபதி கிருஷாந்த டி சில்வா நேற்றைய தினம் அப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இதனால் முல்லைத்தீவில் அரச படைகளின் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அரச கடற்படை ஆக்கிரமித்துள்ளது. அக் காணிகளை நிரந்தரமாக...
கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவிலுள்ள கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் பௌத்த ஆலயம் அமைக்கப்படுதல் உட்பட வடக்கில் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவரும் சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்பாகவும், இடம்பெயர்ந்தோர், காணாமல் போனோர், அரசியல் கைதிகள் தொடர்பாகவும் கலந்து பேசவும், ஏதுவான நடவடிக்கைகளை எடுக்கவுமென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் திட்டமிட்டவாறு இடம்பெறும். திகதி: 13-08-2016 (சனிக்கிழமை) நேரம்: பி.ப 4.00...
கிளிநொச்சி பூநகரி மக்களிற்கான மழைநீர் சேமிப்பு திட்டத்தினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. விசேட வானூர்தியில் வந்திறங்கிய முன்னாள் ஜனாதிபதி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட, இரவு நேர தபால் ரயில்மீது கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு சமீபமாக கடுமையான கல்வீச்சு நடத்தப்பட்டதில் மூன்று பெட்டிகள் சேதமடைந்துள்ளதுடன் சில பயணிகள் காயமடைந்துமுள்ளனர். கிளிநொச்சி ரயில் நிலையத்தில் தரித்துவிட்டு, ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், ரயில் பாதைக்கு சற்றுத் தள்ளி நிகழ்வொன்று இடம்பெற்ற இடத்திலிருந்தே இந்த...
கிளிநொச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் இராணுவத்தினரால் சிகையலங்கார நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகில், முறுகண்டி, இரணைமடுச்சந்தி, இயக்கச்சி ஆகிய இடங்களில் இந்த சிகையலங்கார நிலையங்கள் இயங்கி வருகின்றன. மாவட்ட சிகையலங்கார சங்கத்தின் கீழுள்ள சிகையலங்கார நிலையங்களில் 200 தொடக்கம் 250 ரூபாய் வரையில் சிகையலங்காரத்துக்கு கட்டணம் அறிவிடப்படும் நிலையில், இராணுவத்தினரின் சிகையலங்கார...
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பூநகரியைச் சேர்ந்த நடராஜா கலியுகராஜா (வயது 54) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த மாதம் 24ஆம் திகதி திடீர் காய்ச்சல் காரணமாக பூநகரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இவர் மேலதிக...
கிளிநொச்சி இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் மூன்றாவது வீதி காணப்படுகின்ற ஆலயத்திற்குச் சொந்தமான காணிக்குள் மிகப்பெரும் விகாரைக்கான சுற்றுமதில் அமைக்கும் பணியில் இராணுவத்தினர் மிக தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 1957 ஆம் ஆண்டு இரனைமடு குளத்தினை தீர்த்த தளமாக கொண்டு யோகர் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு...
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நேற்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு விஜயம் செய்து, மகளிர் அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உட்பட பலரை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது...
வவுனியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட கணவரின் சடலத்தினை கையளிப்பதானால் விடுதலை புலிகளுடன் தொடர்புபட்டவர் என தெரிவிக்க வேண்டும் என இராணுவம் தெரிவித்தது என்று கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் பெண்ணொருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வு நேற்று கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது....
முல்லைத்தீவு முள்ளிவாய்கால் கிழக்கில் நில அளவை மேற்கொள்ளவதற்கு சென்ற நில அளவையாளர்கள் மக்களின் எதிர்ப்பை அடுத்து திரும்பிச்சென்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் கிழக்கில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை கடற்படையினருக்கு வழங்குமாறு தெரிவித்து நில அளவை மேற்கொள்ள இன்று காலை குறித்த பகுதிக்கு நில அளவையாளர்கள் சென்றிருந்தனர். இதனை தொடர்ந்து வட்டுவாகல் பாலத்தை அண்மித்த இரண்டு பகுதிகளிலும்...
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிணை அளவீடு செய்து நிரந்தரமாக கடற்படைக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. மேற்படி காணி அபகரிப்பு நடவடிக்கையை எதிர்த்து காணி உரிமையாளர்களால் புதன்கிழமை (03-08-2016) காலை 9.00 மணியளவில் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு எமது கட்சி...
தமிழ் மக்களை அநியாயமாக படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறைகள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணி இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்தில் யாழ். மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின்...
முன்னாள் போராளிகளை சர்வதேச ரீதியிலான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவை திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் உரையாற்றியபோதே வடக்கு முதலமைச்சரிடம் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்....
வட்டுவாகலில் கடற்படைக்காக 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளது. நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இந்த சுவீகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்த மக்களை போராட வருமாறு பாதிக்கப்படும் விவசாயிகள், மீனவர்களின் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன. இது தொடர்பில் தெரிய வருவதாவது முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும்...
தடுப்பில் இருக்கும் போது எமக்கு இரசாயன உணவு தந்தார்கள். ஊசி போட்டார்கள். ஊசி போட்டவுடன் ஒரு போராளி உயிரிழந்தார். தடுப்பில் வைத்து எமக்கு ஏதோ செய்துள்ளார்கள். இவ்வாறாக விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார். நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை ஒட்டுசுட்டானில் நடைபெற்றது. அந்த அமர்வில் கலந்து...
முகமாலை பகுதியில் காணப்படும் வெடிபொருட்களை அகற்றி சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்றுமாறு முகமாலைப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநாச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவின் கீழுள்ள முகமாலை தெற்கு, அம்பளாவளை, இந்திராபுரம், மடத்தடி, நவனிவெளி, இத்தாவில் மேற்கின் ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முழுமை பெறாத காரணத்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீள்குடியேற...
தென்னிலங்கை நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்களை அறவீடு செய்வதற்கு இரவு 12 மணி வரையும் வீடுகளில் காத்திருப்பதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது, மல்லாவியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றும், சாவகச்சேரி பகுதியிலிருந்து கடன் வழங்கிய...
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்காலில் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டுமென முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யவுள்ள உள்ளக நீதிப்பொறிமுறை உட்பட ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்றும் சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான...
கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற மினிபஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் - மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். ஏ-9 வீதியில் கொக்காவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தில் வவுனியாவைச் சேர்ந்த அல்பேட் ஜெயக்குமார் (வயது 24) அவரது மனைவியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரஷாந்தினி (வயது 23) ஆகியோர் உயிரிழந்தனர்....
சங்கானையை சிறுவன் ஒருவர் முல்லைத்தீவு இளைஞர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சங்கானை சுழிபுரத்தை சேர்ந்த 11 வயதுடைய கரிகாலன் சுதர்சன் இந்த சிறுவனே இவ்வாறு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளான். முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் தனியாக இருந்ததை அவதானித்த இளைஞர்கள் அந்த சிறுவனிடம் வினவியபோது, தந்தையுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறி வந்ததாக தெரிவித்துள்ளார் இதனையடுத்து சிறுவனை முல்லைத்தீவு பொலிஸ்...
Loading posts...
All posts loaded
No more posts
