- Thursday
- November 20th, 2025
கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் விடுமுறையில் வந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான நிலையில் அதே இடத்தைச்சோ்ந்த தந்தையும்,மகனும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பில் மேலும் தொியவருவதாவது கடந்த 20-07-2016 அன்று இரவு எட்டு மணியளவில் முழங்காவில் விஜி வீதியைச்சோ்ந்த செல்லத்துரை துரைசிங்கம் என்பவரும், அவரின் மகன் கௌதமன் வயது 23 என்வருமே தாக்கப்பட்டு...
கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் எமது நிலம் எமக்கு வேண்டும் எனும் கோரிக்கையுடன் ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை 22-07-2016 ஜனநாயகத்திற்கான வடக் இளைஞர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலை வவுனியாவிலும்,ஓமந்தையிலும்,மதியம் கிளிநொச்சி இரனைமடு படை முகாமிலும், பரவிபாஞ்சான் பிரதேசத்திலும் மாலை வலி வடக்கிலும் குறித்த போராட்டம் நடத்தபட்டுள்ளது....
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் நேற்று புதன்கிழமை (20.07.2016) திறந்துவைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் பிறைஸ் கட்செசன், இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன், வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இணைந்து இதனைத் திறந்துவைத்துள்ளனர். போரின் காரணமாகச் செயற்பாடுகள் அற்றிருந்த விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம் கடந்த ஆண்டில் இருந்து மீளவும்...
"தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.சுமார் 80 லட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் ஜேர்மன் அரசின் உதவியில்கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
மெல்போர்ண் டன்டினொங் பகுதியில் ஈழத்தமிழ் அகதி ஒருவர் பொலிஸாரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். வன்னி மாவட்டம் மல்லாவியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய திருநாவுக்கரசு திருவருள்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுச்சாப்பாட்டை முடித்த பின்னரர் நித்திரைக்குச் சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் உறங்கிய கட்டிலில்...
'புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது, அதற்கு எதிரான பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பது, நாட்டைப் பிரிப்பதற்கான நடவடிக்கை அல்ல. எல்லோரையும் ஒன்றாக, ஒரே குடையின் கீழ் வைத்து, சமாதானமாக வாழக்கூடிய நிலைமையினை உருவாக்கவே புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துகின்றோம்' என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்கலைக்கழகங்கள் தேசிய நல்லிணக்கத்தின் கேந்திர...
கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 5 வயதுச் சிறுவனின் சடலம், ஞாயிற்றுக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 15ஆம் திகதி காணாமற்போன காந்தரூபன் தர்சன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிணற்றில் சிறுவனின் சடலம் இருப்பதாக, சனிக்கிழமை (16) இரவு பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்தே, சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்புடைய...
வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பணிமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை (15.07.2016) திறந்துவைத்துள்ளார். போசாக்கான பாரம்பரிய உணவுகளை நுகரும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வடக்கு விவசாய அமைச்சு மாவட்டம் தோறும் அம்மாச்சி என்ற பெயரில் வடக்கின் பாரம்பரிய உணவகங்களை...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்று இராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், தங்களது வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'அண்மைக் காலமாக, புனர்வாழ்வு பெற்றுவந்த போராளிகள், மரணத்தை தழுவி வருகின்றனர். இது...
கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் தனது மகனை கடந்த ஒருவருடமாக பாடசாலைக்கு அனுப்பாத தாயை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் 14 நாள் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மாவட்டச் செயலகம், சிறுவர் நன்நடத்தை அலுவலகம், பிரதேச செயலகம், நீதிமன்றம் என்பன இணைந்து தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் பாடசாலை நாட்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை...
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவனுடன் தவறாக நடந்ததாகவும், தாக்கியதாகவுமான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பபில் மேலும் தெரியவருவதாவது தரம் பத்தில் கல்வி பயிலும்...
வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலாக உள்ள கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இரணைமடு குளத்தின் கரையில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய இராஜ கோபுர அடிக்கல் நாட்டு விழா நேற்று வியாழ்கிழமை 14-07-2016 நடைபெற்றது. காலை விசேட வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் அடிக்கல் நாட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்...
முல்லைத்தீவிலுள்ள இலங்கை இராணுவம், கொழும்பு ரொட்டரி கழகத்துடன் இணைந்து முல்லைத் தீவு பிராந்தியத்தில் கால்களை இழந்த பொதுமக்களுக்கு தலா 15,000.00 ரூபா பெறுமதியான செயற்கை கால்களை வழங்கி வைத்தது. இச் செயற்றிட்டம் கொழும்பு கெபிடல் சிட்டி ரொட்டரி கழகத்தின் அனுசரனையுடன் கொழும்பு அசரன சரண சங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக இராணுவ செய்தி ஊடகம் தெரிவிக்கிறது. நந்திக்கடல்...
வட்டுவாகலில் சரணடைந்தோர் விவரத்துக்குப் பதிலாக புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டவர்களின் விவரங்களைக் கொண்டு வந்த முல்லைத்தீவு 58ஆம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தனவை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் கோபமடைந்து ஏசினார். இறுதி யுத்தத்தில் காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் (சின்னத்துரை சசிதரன்) உள்ளிட்ட 05 பேரின் உறவினர்கள் தாக்கல்...
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் உள்ளிட்ட முன்னாள் போராளிகள், இராணுவத்தினரிடம் சரணடைந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக இராணுவ...
புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் மனைவிக்கு தீ மூட்டி தானும் தீ முட்டிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை (12) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சௌந்தராஜா உதயராஜா (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார். மனைவி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இவர்கள் இருவரும், 3 மாதங்களுக்கு முன்னர்...
இறுதி யுத்தத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டனர் எனக் கூறுவதில் எந்தவித உண்மையுமில்லையெனவும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லையெனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மகிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இராணுவத்தினர் பொதுமக்களை இலக்குவைத்து பயங்கரவாதிகளைக் கொல்லும் நடவடிக்கையில் ஈடுபடவில்லையெனவும் பொதுமக்களைக் காப்பாற்றியே பிரச்சனைக்குத்...
சமீபத்திய காலமாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னால் போராளிகளின் மரணங்கள் மீதமிருக்கும் போராளிகளின் மனதிலும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது இந்த வரிசையில் முன்னால் போராளியும் பொட்டம்மானின் சாரதியாக இருந்த சசிகுமார்(ராகுலன்) என்பவரும் காலமாகியுள்ளார் தொடரும் இந்த மரணங்களில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் என்ன? என்பது விடையில்லா புதிராக உள்ளது போராளிகள் புனர்வாழ்வளிக்கப்படும்போது இராணுவத்தினரால் திட்டமிட்டு ஏதேனும் விஷமருந்துக்கள்...
பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் 15 வயது மாணவி ஒருவர் குடும்பமாக வாழ்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களை இனங்கண்டு மீண்டும் அவர்களைப் பாடசாலைகளில் இணைக்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி நீதவான் பணிப்புக்கமைய செயற்படுத்தப்படுகின்றது. மலையாளபுரம், பாரதிபுரம், பொன்னகர், கிராமங்களில் சில நாட்களாக திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன....
வகுப்பறையில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் போது, வகுப்பறைக்குள் வந்த அதிபரை, ஆசிரியர் தாக்கிய சம்பவம், மாங்குளம் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (12), குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை வகுப்பு ரீதியாக பார்வையிட்டுக் கொண்டுச் சென்ற அதிபர், கற்றல் நடவடிக்கைகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்த வகுப்பறையொன்றுக்குள் சென்றுள்ளார். இதன்போது அங்கு மாணவர்களுக்கு பாடம் கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியரே,...
Loading posts...
All posts loaded
No more posts
