நீர்ப்பாசனக்கால்வாய் துப்பரவு பணியில் 1000 இராணுவத்தினர்!!

வடமாகாணத்தின் இரண்டாவது பெரிய நீர்ப்பாசனகுளமான வவுனிக்குளம் 2350 வருடங்கள் பழமையானது. எல்லாள மன்னனினால் கட்டப்பட்டதுதாக கூறப்படுகிறது. யுத்தம் காரணமாக கால்வாய்கள் உடைபெடுத்தநிலையில் காணப்பட்டதனால் இராணுவத்தின் 65 வது பிரிவின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் 1000 இராணுவம் வீரர்களைக் கொண்டும் பொதுமக்களின் ஒத்துழைப்புக் கொண்டும் 20 கிலோமீற்றர் தூரம் கொண்ட வலதுகரை நீர்ப்பாசனக்கால்வாய் துப்பரவு செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தின் கனரகவாகனங்களின்...

வடக்கு மாகாணசபை உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது!

வடக்கு மாகாண சபையானது நேர்மையான உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது என நேற்று புதன்கிழமை நடைபெற்ற வடமாகாண சபை அமர்வில் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், அன்ரனி ஜெகநாதன் அவர்களின் மரணச்செய்தி அறிவதற்கு முதல் நாள் அவருடன் வெளிநாட்டு பயணங்கள் பற்றியும், முல்லைத்தீவிற்கு இரட்டைவழி ஒருங்கிணைப்பு...
Ad Widget

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி யூனியன்குளம் காட்டுப்பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று குறித்த பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்களால் கிளிநொச்சிப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து, குறித்தக் காட்டுப் பகுதிக்குச் சென்ற கிளிநொச்சிப் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் அறுபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க...

இரணைமடு குளத்தின் நிர்மாணப் பணியில் ஈடுபட்ட பொறியியலாளர் மரணம்

கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளம் பொறியியலாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் 03.10.2016 திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக கிளிநொச்சி காவல் துறையினர் தெரிவித்தனர். அவசரஅவசரமாக இராப்பகலாக புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய கனகராசா கோபிநாத் என்ற பொறியியலாளர்...

கிளி. அரை நிரந்தர கடைத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா

கிளிநொச்சி பொதுச்சந்தையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு புதிய கடைகளை அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (சனிக்கிழமை) முதலமைச்சர் சி.விவிக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. பண்டிகைக் காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும் வகையில் தற்காலிகமான முறையில் அரை நிரந்தர கடை தொகுதியாக இது...

பௌத்த சிலை உடைப்பு வழக்கு விசாரணைகளிலிருந்து பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் விலகல்

பௌத்த சிலை உடைப்பு வழக்கு விசாரணைகளிலிருந்து பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் விலகிக் கொண்டுள்ளார். கனராயன்குளம் மாங்குளம் பிரதேசத்தில் பௌத்த சிலையொன்று உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைகளிலிருந்து பிரதம நீதியரசர் விலகிக்கொண்டுள்ளார். பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதியரசர்களான...

புகையிரதம் மோதி ஆறு பிள்ளைகளின் தந்தை பலி

கிளிநொச்சி 155 ஆம் கட்டை ஆனந்தநகர் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆறு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழப்பாணம் நோக்கி சென்ற தபால் புகையிரதத்தில் சிக்குண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பிலான...

சரணடைந்த விடுதலைப்புலிகளின் பட்டியலை ஒப்படைக்க இராணுவம் தொடர்ந்தும் மறுப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர் பட்டியல் தொடர்பில் ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் முரண்பட்டத் தகவல்களை வெளியிட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி நீதிமன்றில் எடுத்துரைத்துள்ளார். போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் யுத்த வலயத்தில் வைத்து ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் குடும்பத்தினரால் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல்...

துப்பாக்கிகளை வழங்கிவைத்தார் வடக்கு மாகாணசபை உறுப்பினர்!

விவசாயத்திற்கு பாதிப்பு விளைவிக்கும் குரங்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 18 கமக்கார அமைப்புக்களுக்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசன் துப்பாக்கிகளை வழங்கிவைத்தார். 2016ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 5 இலட்சம் பெறுமதியான 18 துப்பாக்கிகளை 18 கமக்கார அமைப்புக்களுக்கு நேற்றையதினம் (புதன்கிழமை) முள்ளியவளை கமநலசேவை திணைக்களத்தில் வைத்து வழங்கினார். அண்மைக்காலமாக குரங்குகளின்...

இறுதிப் போரில் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு விசாரணை இன்று

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. இந்த ஆட்கொணர்வு மனு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு...

கிளிநொச்சியில் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனம்!

ஏ-9 வீதியில் உழவியந்திரத்தை ஓட்டிச்சென்ற இளைஞன் ஒருவருக்கும், இன்னுமொரு வாகனச் சாரதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தினை விலக்குத் தீர்ப்பதற்காக அவிடத்திற்குச் சென்ற காவல்துறையினர் இரும்புச் சங்கிலியால் அந்த இளைஞனை மோசமாகத் தாக்கியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனே தம்மை இரும்புச் சங்கிலியால் தாக்க வந்ததாகவும், அவ்விளைஞன் மதுபோதையில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....

கிளிநொச்சி பொதுச்சந்தை தீ விபத்து; 25 ஆயிரம் ரூபா நட்டஈடு! ரெஜினோல்ட் குரே

கிளிநொச்சி பொதுச்சந்தை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வர்த்தகர்களுக்கு உறுதியளித்துள்ளார். கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களுடனான சந்திப்பு நேற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற போதே அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் ரெஜினோல்ட் குரே இதனைத் தெரிவித்துள்ளார். தீ விபத்தில்...

கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் தேவை ஏற்படின் உடனடியாக அறிவிக்கவும்

கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் தேவை ஏற்படும் மக்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபரிடம் முன்வைக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். மக்கள் தமது குடிநீர் தேவைகளை அறிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான குடிநீரை உரிய திணைக்களங்களினூடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார். நாட்டில் காணப்படும் வறட்சி காலநிலை காரணமாக...

கிளிநொச்சியில் கிபிர் குண்டு மீட்பு

கிளிநொச்சி, தர்மபுரம் காட்டுப் பகுதியிலிருந்து விமானக் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. அப் பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் இதனை கண்டெடுத்துள்ளனர். இந்த குண்டு, 6 அடி நீளமும் சுமார் 300 கிலோ கிராம் எடை கொண்டதும் எனத் தெரியவந்துள்ளது.

10 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய உள்ளீடுகளை வழங்கி வைத்தார் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய உள்ளீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (23.09.2016) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விவசாய உள்ளீடுகளை வழங்கி வைத்துள்ளார். விவசாயத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை...

மூன்று பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த வழக்கில் அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற சந்தேகநபரின் மரணம் தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் 3 பேரினதும் வெளிநாட்டு பயணங்களுக்கும் தடைவிதித்து நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா உத்தரவிட்டுள்ளார்....

முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி ; ஆரம்பித்து வைத்தார் சங்கா

இலங்கையிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நட்புறவை பேணும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்ந்தும் 5 ஆவது முறையாக இன்று (21) ஆரம்பமாகவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில் நேற்று மாலை மூன்று மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான...

பாதிக்கப்பட்ட உங்களைப் பார்க்க ஏன் எதிர்க்கட்சித் தலைவர் வரவில்லை?

கிளிநொச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க இதுவரை ஏன் எதிர்க்கட்சித் தலைவர் வரவில்லையென பத்தரமுல்லையைச் சேர்ந்த சீலரத்தின தேரர் கேள்வி கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று கிளிநொச்சி தீவிபத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுக்கு உலர் உணவு வழங்கிவைத்ததன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நான் இனவாதம் பேச வரவில்லை....

முதல்வருக்கெதிராக மக்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு வருகைதந்த அதிகாரிகள் அமைச்சர்களைத் திசைதிருப்பு முகமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று புதுக்குடியிருப்பு,கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகங்களுக்கு முன்பு நேற்று (19.09.2016) நடத்தப்பட்டுள்ளது. வடக்குமாகாண முதலமைச்சருக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக பின்னர் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. குறிப்பாக மீள் குடியேற்ற அமைச்சரால்...

புதுக்குடியிருப்பில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் செயலகத்திற்கு முன்னாள் அமைதியான முறையிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பரிவிற்குட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்குமாறும், காணி பிணக்குகளிற்கு தீர்வை தருமாறு கோரியும், மற்றும் வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று...
Loading posts...

All posts loaded

No more posts