- Thursday
- November 20th, 2025
தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பிருந்த தியாகி லெப்.கேணல் திலீபனின் திருவுருவப் படத்துக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக்...
கிளிநொச்சி தீ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி உடனடி கொடுப்பனவாக 135 வர்த்தகர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டள்ளது. கிளிநொச்சி சந்தை கட்டத்தொகுதியில் வைத்து இக்கொடுப்பனவுகளை வடக்கு மாகாண முதலமைச்சர் வழங்கி வைத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடக்கு...
போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளுக்கே நாட்டில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகின்றதெனவும், நாங்கள் சர்வதேச விசாரணையாளர்களையே கொண்டுவரவுள்ளோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களை நேற்று (சனிக்கிழமை) முல்லைத்தீவில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெரிவிக்கையில், நாங்கள் சர்வதேச நீதிபதிகள் தொடர்பாகக் கதைப்பதற்கு...
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக சாத்வீக வழியில் போராடி மரணத்தைத் தழுவிக் கொண்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறைப்பொறுப்பாளர் திலீபனின் 29ஆவது நினைவு தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து நடத்தவுள்ள குறித்த நினைவேந்தல் நிகழ்வானது, தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் நாளை...
கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனின் 29 ஆவது ஆண்டு நினைவு தொடர்பிலான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தபட்டுள்ளது. தியாகதீபம் திலீபனின் இருபத்தொன்பதாவது நினைவுதினம் என தலைப்பிடப்பட்டு, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகள் நேற்று இரவு ஒட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, மல்லாவிப் பொலிஸாரின் பயன்பாட்டில் இருந்த தனியார் காணி அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள யோகபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இண்டு ஏக்கர் காணியினை கடந்த ஏழு ஆண்டுகளாக பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் குறித்த காணியில் உள்ள வீடு, மல்லாவி பொலிஸ் நிலையமாக இயங்கி வந்தது....
கிளிநொச்சி பொதுச் சந்தையில்,வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளன. தீயை கட்டுப்படுத்த முயன்றவர்களில் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது நேற்றிரவு , 8.30 க்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து...
கிளிநொச்சி - இரணைதீவில் 24 வருடங்களின் பின்னர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரணைதீவு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, நேற்று மாலை முதல் மீனவர்கள் அங்கு தங்கியிருந்து தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக 1992 ஆம் ஆண்டின் பின்னர் இரணைத்தீவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி - திருநகர் பகுதியில் தனியார் காணியில் செவன் வில்லா (SevenVilla) இராணுவ ஓய்வு விடுதியில் இருந்த இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியை இராணுவம் தன்னுடைய பயன்பாட்டில் வைத்திருந்தது. எனினும் குறித்த காணி உத்தியோகபூர்வமாக காணி உரிமையாளரிடம் கையளிக்கப்பட வில்லை என குறிப்பிடப்படுகின்றது. மேலும், இந்த முகாமில் இருந்த இராணுவத்தினர்...
கிளிநொச்சி விநாயகபுரத்தில் வசித்து வரும் வடபோர்முனையின் கட்டளைத்தளபதியாக இருந்து மரணமடைந்த லெப்டினன்ட் கேணல் கலையழகனின் மனைவிக்கு, கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பானை விடுத்துள்ளனர். வட போர்முனையின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்து மரணமடைந்த கெங்காதரன் எனும் லெப்டினன்ட் கேணல் கலையழகனின் மனைவி விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏழு வருடங்கள் இருந்ததாகவும், கலையழகன் பயன்படுத்திய கைத்துபாக்கியை தற்போதும்...
முல்லைத்தீவு, மாந்தைகிழக்கு வன்னிவிளாங்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (13) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன், மோட்டார் சைக்களில் மோதி விபத்துக்குள்ளானதில், குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் ஒருவர் பலியானதுடன் அவருடைய 14 வயது மகன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாள்புரம் வன்னிவிளாங்குளத்தைச் சேர்ந்த இரவிக்குமார் இன்பமலர் (வயது 38) என்ற...
முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் ஊடாக 500க்கு மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர், கோத்தாபாய கடற்படைமுகாமுக்கு இன்று சனிக்கிழமை (10) சென்றுள்ளனர். காலை 10 மணியளவில் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள மக்களும் 500க்கு மேற்பட்ட கடற்படையினரும் அணி அணியாக குறிப்பிட்ட முகாமுக்குள் சென்றுள்ளனர். குறித்த கடற்படையினருக்குச் சிறப்புக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் கடற்படையினர் உறவினர்களுடன்...
யுத்தத்தால் தங்களுடைய கால்களை இழந்த முன்னாள் போராளிகள் மற்றும் சில பொது மக்களுக்கு இராணுவத்தினரால் செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஒத்துழைப்பு மையத்தில் இடம்பெற்றது. அமெரிக்காவின் யு.எஸ் எய்ட் உதவியுடன் கண்டி குண்டகசாலை மாற்று வலுவுள்ளோர் நிலையத்தின் அனுசரணையில் கிளிநொச்சி இராணுவத்தினரால் 28 பேருக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருடன் நேரடி யுத்தம்,...
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வாக்குறுதியையடுத்து பரவிபாஞ்சான் மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று மாலை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மக்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட விஜயகலா மகேஸ்வரன் பாதுகாப்புச் செயலர் வழங்கிய வாக்குறுதியை மக்களுக்குத் தெரிவித்ததையடுத்து போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தன்னிடம் இன்னும் 15 நாட்களுக்குள் பரவிபாஞ்சான் மக்களின் ஒருதொகுதி காணி...
இராணுவத்தினரால் நடத்தப்படும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப் பணம் வடமாகாணக் கல்வி அமைச்சின் நிதியிலிருந்து சென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றபோது, அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'கிளிநொச்சி இராணுவப் படைத் தலைமையகத்துக்குக் கடந்த 2013ஆம்...
கிளிநொச்சி - பரவிப்பாய்ஞ்சான் கிராமத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி கடந்த ஒரு வாரமாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்டவர்கள், தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று, இரண்டாவது நாளாக இந்தப் போராட்டம் தொடர்கின்றது. பரவிப்பாய்ஞ்சான் கிராமத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், அவைகள் முழுமையாக...
வன்னியில் போரை முன்னின்று நடாத்திய இராணுவத் தளபதிகளில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவும் ஒருவர். அவர் இப்போது, 'பிரபாகரன் அவர்கள் உயர்ந்த பட்ச ஒழுக்கம் கொண்டவர். சேகரிக்கப்பட்ட அவர் தொடர்பான பத்தாயிரம் புகைப்படங்களில் எந்த ஒரு படத்திலேனும் மதுபானக் குவளையுடன் அவர் காணப்படவில்லை. பெண் போராளிகளை அவர் தவறாகப் பயன்படுத்தியமைக்கான எந்தவித சான்றாதாரங்களும் இல்லை' என்று...
கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் தங்களின் அனைத்து காணிகளும் விடுவிக்க வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாக ஏழு நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்கள் இன்று எட்டாவது நாள் முதல் உண்ணாவிரத பேராட்டமாக மாற்றியுள்ளனர். தாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலேயே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட தீா்மானித்ததாக அவா்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனா். இது தொடர்பில் மேலும்...
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் சுமார் 142 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்படி கரைச்சி பிரதேசத்தில் கனகாம்பிகைகுளம், திருவையாறு, ஆனந்தபுரம், செல்வாநகர், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதியில் 108 ஏக்கரும், கண்டாவளை பிரதேசத்தில் கல்மடுநகர், புளியம்பொக்கனை ஆகிய கிராமங்களைில் 24 ஏக்கர்களும் பூநகரி பிரதேசத்தில் முழங்காவில் பொன்னாவெளி ஆகிய பிரதேசங்களை...
Loading posts...
All posts loaded
No more posts
