Ad Widget

பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் உதவித்தொகை வழங்கி வைப்பு

கிளிநொச்சி தீ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி உடனடி கொடுப்பனவாக 135 வர்த்தகர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டள்ளது.

கிளிநொச்சி சந்தை கட்டத்தொகுதியில் வைத்து இக்கொடுப்பனவுகளை வடக்கு மாகாண முதலமைச்சர் வழங்கி வைத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடைவை மற்றும் பழக்கடைகள் என்பன முற்றாக எரிந்து தீக்கிரையாகின.

நேற்றுமுன்தினம் இரவு ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து பழக்கடைகளும், 60க்கு மேற்பட்ட புடைவை கடைகளும், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையங்களுமென 90 கடைகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின. இதில் 250 மில்லியன் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

Related Posts