- Thursday
- November 20th, 2025
கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று ஆறாவது நாளாகவும் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமது காணிகளை விடுவிக்க கோரி பிரதேச மக்கள் முன்னெடுத்த தொடர் போராட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில், கடந்த 17 ஆம் திகதி...
இலங்கை சிறைச்சாலைகளில் உரிய விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி கிளிநொச்சியில் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சிறை கைதிகளின் உறவினர்கள், காணாமல் போனோரின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டு கைதிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தனர். நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும், அதன்...
முல்லைத்தீவு ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த பரீத் முகம்மது இல்ஹாம் (வயது 16) என்ற மாணவன் புத்தளத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக மாணவனின் பெற்றோரால் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு தண்ணீரூற்று முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தர சாதாரண தரம் கற்கும் குறித்த மாணவன் 4 அடி 8 அங்குல் உயரமுடையவர்...
கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் பெண்ணொருவரின் சடலம மீட்கப்பட்டுள்ளதாக வட்டக்கச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதியில் வீடொன்றில் இருந்து 2 பிள்ளைகளின் தாயான 47 வயதுடைய சிறிஸ்கந்தராசா சந்திரபாரதி என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன் வட்டக்கச்சி மற்றும் கிளிநொச்சி பொலீஸார் பொலிஸார்...
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முள்ளிவாய்க்காய் பகுதியில் கோட்டாபய கடற்படைத்தளம் அமைந்துள்ள காணியை சுவீகரிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களின் காணிப்பிரச்சினைகள் தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கூட்டம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர் சிவனேசன், வடமாகாண பிரதி அவைத்...
கிளிநொச்சியை அண்மித்த பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவ முகாமிற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாகவும் மக்கள் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த மக்கள் இராணுவ முகாமிற்கு முன்னாள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் கடந்த 17 ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்த...
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலையொன்று சிங்கள தேசிய அமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் அறம்பொல ரத்தனசார தேரரின் தலைமையில் புதன்கிழமை மாலை வைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், அனுராதபுரத்தில் புதிய புத்தர் சிலையொன்றைப் பெற்று அதனை எடுத்துச் சென்று அங்கு பிரதிஸ்டை செய்ததாக...
விச ஊசி விவகாரத்திற்கு தீர்வு காணும் முகமாக முன்னாள் போராளிகளுக்கு இவ்வாரம் முதல் மருத்துவப் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல்...
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்கள் நேற்று மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மூன்றரை ஏக்கர் வரையான பொதுமக்களின் காணியை இன்று விடுவிப்பதற்கான நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவி த்தி ருந்தார். எனினும்...
புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டு சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்ட கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் (வயது 26), இனந்தெரியாத நபர்களினால் கைதுசெய்யப்பட்டு, கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு வருடங்கள் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகியிருந்த தன்னுடைய மகனையே, இனந்தெரியாதோர் இவ்வாறு கைதுசெய்து, கடத்திச் சென்றுவிட்டதாக அவருடைய தாயார், பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். 'வெள்ளைவான்...
யுத்தம் காரணமாக துப்பாக்கி, மோட்டார், குண்டுகள் மற்றும் துப்பாக்கி சன்னங்கள் ஆகியவற்றை உடலில் தாங்கியவாறு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் 410 பேர் வாழ்கின்றமை இனங்காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்து தெரிவிக்கையில், 'தற்போது இனங்காணப்பட்டுள்ளவர்களில் 113 பேர் பாடசாலை...
கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி தற்போது, வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். கிளிநொச்சியில் – ஏ9 வீதி 155 ஆவது கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பின்புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர்...
வன்னியின் கனகராயன் குளத்தில் சைவ ஆலயம் ஒன்றின் அருகே அமைக்கப்பட்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தின் குறிசுட்ட குளத்தின் அருகே உள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் இலங்கை இராணுவத்தால் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இனந்தெரியாத நபர்களினால் குறித்த புத்தர் சிலை உடைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதேவேளை, கனகராயன்குளத்தில் உள்ள தமிழ் மக்களின் குடியிருப்பு...
கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் கிழக்கில் இனந்தெரியாத ஐவர் கொண்ட குழுவொன்றினால் கடந்த 22ஆம் திகதி தாக்குதலுக்குட்பட்ட குடும்பஸ்தர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி 5பேர் அடங்கிய குழுவினர் கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த 42 வயதான அருணாசலம் கதிரமலை என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குட்பட்டவர்...
கிளிநொச்சியில் வெள்ளை வானில் வந்தோரால் ஏ9 வீதி 155ஆம் கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் வயது 26 என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் மூன்று மணியளவில்...
கனகராயன் காவல்துறை நிலையத்துக்கருகிலிருந்து புத்தர் சிலையை இன்று அதிகாலை இனந்தெரியாதோர் அடித்து நொருக்கியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கனகராயன் குளப் பகுதியில் அமைந்துள்ள விசேட காவல்துறை நிலையத்துக்கருகிலிருந்த 210ஆவது கிலோமீற்றர் கல்லுக்கு முன்னால் 3அடி உயரத்தில் புத்தர் சிலை ஒன்றும் ஒன்றரை அடி புத்தர் சிலையும் இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலையே...
முல்லைத்தீவு, மல்லாவியைச் சேர்ந்த சாரதியொருவர் சமயோசிதமாகச் செயற்பட்டதால் சுற்றுலாச் சென்ற மாணவர்கள் 25 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவது, மல்லாவியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு அரச சார்பற்ற பொது அமைப்பு ஒன்றினால் இசைக்கருவிகளை மீட்டும் பயிற்சி நடைபெறுகிறது. இம்மாணவர்களில் 25 பேர் கொண்ட அணியொன்று, கடந்த...
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக தொடரந்து ஈடுபட்டிருந்தனா். தமக்கு 7 வருடங்களாக காணி விடயம் தொடா்பில் அதிகாரிகளினால் அநீதி இளைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக உண்ணாவிரத்தில் எடுப்பட்டவா்கள் தெரிவித்தனர். குறித்த பகுதியில் 1983ஆம்...
கிளிநொச்சியின் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் அமைக்கப்படும் புத்த விகாரை திட்டமிட்ட குடியேற்றத்தை நோக்கமாக கொண்டது என்று கூறும் பெயர் குறிப்பிட விரும்பாத கிளிநொச்சி இராணுவ அதிகாரி ஒருவர், இதுவே தமிழ் - சிங்கள மக்களிடையே பாரிய பிரச்சினைகளை உண்டு பண்ணும் விளைவை கொண்டது என்று தாம் கருதுவதாகவும் குறிப்பிடுகிறார். கிளிநொச்சியின் இரணைமடு மற்றும் முறிகண்டியை...
முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுயதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இக்கடன் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நாடாளுமன்ற மேற்பார்வை குழு இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளது. இதன்படி, புனர்வாழ்வின் பின் சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான...
Loading posts...
All posts loaded
No more posts
