Ad Widget

பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் உண்ணாவிரதமாக மாற்றம்!

கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் தங்களின் அனைத்து காணிகளும் விடுவிக்க வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாக ஏழு நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்கள் இன்று எட்டாவது நாள் முதல் உண்ணாவிரத பேராட்டமாக மாற்றியுள்ளனர். தாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலேயே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட தீா்மானித்ததாக அவா்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனா்.

paravi-panjan

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டிருந்த தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பரவிபாஞ்சான் பிரதேச மக்கள் கடந்த மாதம் பல நாட்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இதனையடுத்து கடந்த மாதம் 17 ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக தொடர்புகொண்டதை அடுத்து இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் வாக்குறுதியளித்தவாறு காலக்கெடு நிறைவடைந்து பல நாட்கள் கடந்த நிலையில் பரவிபாஞ்சானில் சுமார் மூன்றரை ஏக்கர் காணி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பரவிபாஞ்சான் மக்கள் தங்களுடைய அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி மீண்டும் தங்களுடைய கவனயீா்ப்பு போராட்டத்தை ஏழு நாட்களாக இரவு பலகலாக மேற்கொண்டிருந்தனா்

ஆனால் கடந்த ஏழு நாட்களில் பாராளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் வருகைதந்து ஜனாபதியின் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். இதனை தவிர மாவட்டத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ, அரசியல் தரப்புகளோ தங்களை எட்டியும் பார்க்கவில்லை எனவே இன்று புதன் கிழமை 7-09-2016 முதல் நாங்கள் தொடா் உண்ணாவிரத போராட்டமாக மேற்கொண்டு வருகின்றோம். எங்களுடைய காணிகள் எங்களுக்கு மீளவும் கிடைக்கும் வரைக்கும் நாங்கள் எங்களுடைய உண்ணாவிரத பேராட்டத்தை கைவிடமாட்டோம் என பரவிபாஞ்சானில் உண்ணாவிரத்தில் ஈடுப்பட்டு வரும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

இன்னும் பதினைந்து பேருக்குச் சொந்தமான பத்து ஏக்கா் காணி விடுவிக்கப்பட வேண்டும் எனவே அந்தக் காணிகளும் விடுவிக்கப்படும் வரை நாம் தொடா்ந்தும் இரவு பகலாக எமது உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் மேலும் தெரிவித்துள்ளனா்.

Related Posts