மல்லாவி பொலிஸார் வசமிருந்த காணி உரிமையாளரிடம் ஒப்படைப்பு

முல்லைத்தீவு, மல்லாவிப் பொலிஸாரின் பயன்பாட்டில் இருந்த தனியார் காணி அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள யோகபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இண்டு ஏக்கர் காணியினை கடந்த ஏழு ஆண்டுகளாக பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் குறித்த காணியில் உள்ள வீடு, மல்லாவி பொலிஸ் நிலையமாக இயங்கி வந்தது.

இந்நிலையில், காணி உரிமையாளர் தனது காணியை தருமாறு கடந்த ஏழு வருடங்களாக பொலிஸார் மற்றும் துறைசார் அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்து வந்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், குறித்த காணியையும் அதன் வீட்டையும் கடந்த புதன்கிழமை (14) அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட 2.5 ஏக்கர் காணியில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு தற்போது மல்லாவி பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது.

Related Posts