Ad Widget

கிளி. அரை நிரந்தர கடைத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா

கிளிநொச்சி பொதுச்சந்தையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு புதிய கடைகளை அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (சனிக்கிழமை) முதலமைச்சர் சி.விவிக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

shop-kili

பண்டிகைக் காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும் வகையில் தற்காலிகமான முறையில் அரை நிரந்தர கடை தொகுதியாக இது அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், குறித்த அரை நிரந்தர கடை தொகுதியை விரைவாக நிர்மாணித்து வர்த்தகர்களிடம் கையளிக்கவுள்ளதாக கரைச்சி பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

அடிக்கல் நாட்டு விழாவில் வட மாகாண கல்வி அமைச்சர், பிரதம செயலாளர், முதலமைச்சரின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts