Ad Widget

கிளிநொச்சி பொதுச்சந்தை தீ விபத்து; 25 ஆயிரம் ரூபா நட்டஈடு! ரெஜினோல்ட் குரே

கிளிநொச்சி பொதுச்சந்தை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வர்த்தகர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

index

கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களுடனான சந்திப்பு நேற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற போதே அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் ரெஜினோல்ட் குரே இதனைத் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களின் குறைகளை கேட்டறிந்த ஆளுநர் அவர்களிற்கு ஆறுதல் தெரிவித்ததுடன், வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்ட ஆளுநர், அவருடன் கலந்துரையாடியதன் பின்னர் முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 25 ஆயிரம் ரூபா பெறுமதியான நட்டஈடு வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, அரச வங்கியில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை ஒரு வருட காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்குறிய செயற்பாடுகள் தான் முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகர்களுடனான சந்திப்பின் பின்னர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சந்தையையும் சென்று பார்வையிட்டார்.

இந்தச் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் வட மாகாண ஆளுநரின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts