- Thursday
- November 20th, 2025
மரங்களை நடுகை செய்வது சூழலியல் நோக்கில் ஓர் அறிவார்ந்த செயற்பாடு. அதேசமயம் தழிழ்ப் பண்பாட்டில் மரங்களை நடுகை செய்வது ஒரு உணர்வுபூர்வமான செயற்பாடாகவும் உள்ளது. அந்தவகையில், மண்ணுக்காக மரணித்த எமது உறவுகள் அத்தனைபேரையும் நாம் கூட்டாக நினைவு கொள்ளும் இந்தக் கார்த்திகை மாதத்தில் அவர்களின் நினைவாக மரங்களை நடுகை செய்வது எமது பண்பாட்டு உரிமை என்று...
ஆவா குழு தொடர்பில் எவ்வித அச்சம் கொள்ளத் தேவையில்லை என வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். வன்னி கட்டளைத் தலைமையகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஆவா குழு தொடர்பில் வடக்கிற்கு வரும் சிங்களவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆவா குழு...
கிளிநொச்சி பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்டார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்து கடந்த 25 ஆம் திகதி வட மாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை முன்பாக பொலிஸாருக்கும் பிரதேச இளைஞாகளுக்குமிடையே முறுகல்...
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைப் கிராமத்தில் தர்மபுரம்பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று விசேட பொலிஸ் நடமாடும் சேவை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாகவும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்ன அவர்களின் வழி நடத்தலின் கீழ் தர்மபுரம் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி சத்துரங்க...
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் 16 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உருத்திரபுரம், கோணாவில், ஊற்றுப்புலம், மற்றும் விநாயகர்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கும் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக...
வடமாகாணத்தில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்தில் மனிதவலு, தொழிற்துறை அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தில் இவ் அமைச்சின் கீழ் பணிபுரியும் உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் மனதவலு, தொழில்துறை இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர,...
முல்லைத்தீவு - கைவேலிப்பகுதியில் தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு கொழுத்தப்பட்ட பட்டாசு வெடித்தில் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது எனினும் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. முல்லைத்தீவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கொழுத்தி மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில் முல்லைத்தீவு –கைவேலிப்பகுதியில் இன்று காலை 10.45 அளவில் வீடொன்றில் விழுந்த பட்டாசால் அந்த வீடு முற்றாக எரிந்துள்ளது. தீயை...
இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் கிளிநொச்சியில் பசுமாடுகள் வளர்ப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட 28 பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை (28.10.2016) வடக்கு விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலப்பினப் பசுமாடுகளை வழங்கி வைத்து இத்திட்டத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதி நிறுவனத்தின் இலகு...
கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள போக்குவரத்து பொலிஸார் பயன்படுத்தும் கொண்டகைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த கொட்டகையில் நின்று பொலிஸார் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றமை வழமையான ஒன்றாகும். ஆயினும் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது பொலிஸார் எவரும் அங்கு இருந்திருக்கவில்லை எனக்குறிப்பிடப்படுகிறது. இதனால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இனம் தெரியாத நபர்கள் நெருப்பு பந்தம் ஒன்றை...
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரான கிளிநொச்சி, 155ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான நடராஜா கஜன் என்ற மாணவனது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவனது இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று முற்பகல் கிளிநொச்சி – பாரதிபுரத்தில் அமைந்துள்ள மாணவனது இல்லத்தில் இடம்பெற்றது. மாணவனது...
பொலிசாரின் துப்பாக்கி சூட்டின் போது, கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் யாழ்.பல்கலைகழக 3ஆம் வருட மாணவன் நடராசா கஜனின் உடலம் தற்போது கிளிநொச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன்போது மக்கள், அரசியல்வாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர் குறித்த இளைஞனின் கொலையால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
யுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் விசேட செயற்திட்டமொன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற்திட்டம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த...
கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களின் காலணிகளை பாடசாலைக்கு வெளியே பிரதான வீதியின் நடுவில் குவித்த அதிபரின் செயற்பாட்டினால் பாடசாலையில் நேற்று திங்கள் கிழமை அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலையின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து அதிபரின் செயற்பாட்டுக்கு தங்களின் கடும் எதிர்ப்பினை வெளியிட்ட போது வலயக் கல்வித் திணைக்களம் தலையிட்டமையினால் நிலைமை சுமூகமாகியது. நேற்று...
கிளிநொச்சியில் வைத்து சில நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட வர்த்தகர் ரதீசன் உடலில் பலத்த அடிகாயங்களுடன் கடத்தப்பட்டுள்ளவர்களால் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கிளிநொச்சி காவல்துறையில் சரணடைந்துள்ளார். சாவகச்சேரி, இடைக்குறிச்சி – வரணியைச் சொந்த இடமாகக் கொண்ட குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சியில் அவரது அச்சகத்துக்குச் சென்றுகொண்டிருந்தவேளையில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என...
கிளிநொச்சி – முழங்காவில் - பல்லவராயன் - கட்டுசோலை பகுதியிலுள்ள வீட்டுக்குள் இன்று அதிகாலை சென்ற கொள்ளைக் கும்பல் ஒன்று, கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த கணவன், மனைவி ஆகியோரை அச்சுறுத்தி பணம் மற்றும் நகை என்பவற்றை கொள்ளைக்குழு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் முப்பத்தாறு பவுண்...
கிளிநொச்சி நகரில் நேற்று முன்தினம் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ள இளம் வர்த்தகர் ரதீஸின் மனைவி சர்மிளா ரதீஸ் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டம், இடைக்குறிச்சி, வரணியைச் சொந்த இடமாகக் கொண்ட வர்த்தகரான ரதீஸ்(35) நேற்று முன்தினம் நண்பகல் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் தனது வீட்டிலிருந்து அச்சகத்துக்குச் சென்றுகொண்டிருக்கும்போதே இடையில்...
யாழ்ப்பாண மாவட்டம் வரணியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சியில் நேற்று மதியம்(புதன்கிழமை) கடத்தப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் தனது வீட்டில் இருந்து கிளிநொச்சியில் உள்ள தனது பதிப்பகத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிக் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதற்கிணங்க காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் கடத்தப்பட்ட வர்த்தகர்...
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய அறுவடைகளை களஞ்சியப்படுத்துவதற்காக உயர் தரத்திலான களஞ்சியசாலை ஒன்றை அமைக்கும் நோக்கில் ஆய்வு நிலையத்துடனான அலுவலகக்கட்டிக தொகுதி ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த கட்டடதொகுதியில் தங்குமிட வசதி நீர்த் தாங்கி ரானஸ்போமர் கூடம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளன . 33சதுர சுற்றளவைக் கொண்ட களஞ்சியசாலைக் கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்காக ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட...
ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் முல்லைத்தீவு - செம்மலை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் வசம் இருந்து ஒரு கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்ட பெண் முல்லைத்தீவைச் சேர்ந்த...
ரெலோ அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கவிஞர் பொன்காந்தன் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். அயல் வீட்டாருடன் நீண்டகாலமாக காணிப் பிணக்கு எற்பட்டுவந்துள்ளதோடு நேற்றய தினம் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த கைகலப்பின்போது உடைக்கப்பட்ட கண்ணாடி போத்தலினால் கவிஞர்...
Loading posts...
All posts loaded
No more posts
