- Monday
- July 14th, 2025

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தெரிவித்துள்ளார். கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பொங்கல் விழா நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘யுத்தத்திற்கு பின்னரான...

ஒட்டுசுட்டானில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால் புனரமைக்கப்பட்ட இரண்டு நீர்ப்பாசனக் குளங்களை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை (16.01.2017) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு விவசாய அமைப்புகளின் தலைவர்களிடம் துருசுக் கதவுகளின் சாவிகளைச் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைத்துள்ளார். ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள வெளிவயல் குளம் மற்றும் துவரமோட்டைக் குளம் ஆகிய இரண்டு...

மர்மமான முறையில் கணவன், மனைவி ஆகிய இருவர் காணாமல் போகச் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் கணவர் மட்டும் கை, கால்ககள் கட்டப்பட்டு, வாயில் பிளஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் ஓமந் தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை, 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, ஓமந்தை பொலிஸாருக்கு வீதியால் சென்ற...

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோகத்தில் செய்கைபண்ணப்பட்ட 60 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையில் அழிவை எதிர்கொள்ளும் 40 ஆயிரம் நெல்லை பாதுகாக்க நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் உடனடியாக 25 குழாய் கிணறுகளை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள 60 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையில் சுமார் 20 ஆயிரம் நெல்லுக்கு ஓரளவு நீர்ப்பாசன வசதியினை ஏற்படுத்தக்கூடிய வாய்புக்கள்...

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் முன்னாள் போராளியொருவர் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருவையாற்றை சேர்ந்த முருகையா தவவேந்தன் என்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியொருவரே இவ்வாறு நேற்று இரவு 11 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைதுசெய்தவர்கள் தாம் காவல்துறையினர் எனத் தெரிவித்ததுடன் வவுனியாவில் இருந்து வருவதாகவும்...

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் கிராமத்திலுள்ள வீடொன்றின் சுவாமியறையிலிருந்து, 16 வயது சிறுவனின் சடலத்தை பொலிஸார மீட்டுள்ளனர். அதேபகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் கஜேந்திரன் என்ற சிறுவனே, கடந்த வௌ்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர், க.பொ.சா/த பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுக்காக காத்திருந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த சிறுவனது நண்பன், அண்மையில் உயிரிழந்து விட்டதன் பின்னர், இந்தச் சிறுவன் வெகுநாட்களாக...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இன்மையால், உரிய நேரத்துக்கு முறைப்பாடுகளை செய்வதில், சிரமம் ஏற்பட்டுள்ளதாக, பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் பொலிஸ் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும்...

கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அஜீத் காரியகரவன்ன, நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக இதுவரை செயற்பட்டு வந்த மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, பட்டலந்த பயிற்சி முகாமின் புதிய கட்டளைத் தளபதியாக மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்....

பரந்தன் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் இன்மையால், தருமபுரம் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். ஏ-9 வீதியில் பரந்தன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம், பூநகரி வாவியடி பகுதியில் இருந்து, பரந்தன் பகுதி வரையான 23 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒரே எரிபொருள் நிரப்பு நிலையமாகும். தருமபுரம் விவசாயிகள்,...

வவுனியா கந்தசுவாமி ஆலய வளாகத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (புதன்கிழமை) வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காணாமல் போனோரின் உறவினர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டமோன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் போது, தமிழ் தேசிய...

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாய நிலை அவதானிக்கப்பட்டுள்ளது எனவே பொது மக்களை அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர். இது தொடாபில் அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித்துள்ளது. 2017ம் வருடத்தின் முதல்...

துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும் தாம் சில நேர்த்திக் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைப்பதாகவும் நபரொருவர், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்று தெரிவித்தார். கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வைத்து 275கிராம் கஞ்சாவுடன் நீர்கொழும்பைச் சேர்ந்த முப்பது வயதான சந்தேகநபர், கிளிநொச்சிப் பொலிஸாரால் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். அவரை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில்...

ஒல்லாந்தரினால் முல்லைத்தீவினை ஆட்சி செய்த காலத்தில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் ஏற்பட்ட நேரடி மோதலின் போது 1803 ஆம் ஆண்டு பண்டாரவன்னியன் முல்லைத்தீவு நகரத்தையும் ஒல்லாந்தர் கோட்டையையும் கைப்பற்றி தனது இராட்சியத்தினை முல்லை நகரில் (தற்போதைய மாவட்ட செயலக வளாகம்) ஒல்லாந்தர் கோட்டையை தனது கோட்டையாக ஆட்சி செய்து வந்துள்ளார். போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் காலத்தில்...

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைத்தமை தொடர்பாக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு முரணான வகையில் கல்லறை அமைக்க முற்பட்டர்கள் என்ற குற்றச்சாட்டில் மாவீரர்களது உறவினர்கள், முன்னாள் போராளிகள் ஆகியோருடன் கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டது. இவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட...

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிய முன்னாள் போராளிகள் கிளிநொச்சி பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பபட்டுள்ளனர். மாவீரர்களுக்கான பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்பில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.சம்சநாதன் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே குறித்த பேராளிகளை கிளிநொச்சி பொலிஸார் இன்று விசாரணைக்கு அழைத்திருந்தனர். கிளிநொச்சி...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூர்வீக நிலங்களைத் துண்டாடுவதற்கு துணைபோகக்கூடாது எனவும், அவ்வாறு துணைபோனால் மீண்டும் போர்ச்சூழல் உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தலைப்பிடப்பட்ட குறித்த துண்டுப்பிரசுரங்கள் நேற்றைய தினம் கிளிநொச்சியின் பல பிரதேசங்களில் வீசப்பட்டுள்ளதால் அங்கு ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. இதேவேளை, கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான...

“பொருத்து வீடு வேண்டாம் என்று கூட்டமைப்பு சொன்னால், வேறு வீட்டுத்திட்டத்தை கொண்டு வரவேண்டும்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், தெரிவித்தார். வவுனியா ரம்பவெட்டி கிராமத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, புதன்கிழமை அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அங்கு...

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி நேற்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டிருந்தது. முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் பிற்பகல் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலலாளர்...

முல்லைத்தீவு மாவட்டம் செல்வபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவு 11.15 மணியளவில் வர்த்தகர் ஒருவரின் வீட்டினுள் சென்று நான்குபேர் கொண்ட குழுவினர் 60,000 பணத்தினை அபகரித்துச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, நேற்று நள்ளிரவு வீட்டு உரிமையாளரின் பெயரைச் சொல்லி அழைத்த நான்குபேர், தாம் சிஐடியினர் எனவும், விடுதலைப்புலிகளின் பணம் தொடர்பாக உங்களிடம் விசாரணை நடாத்தவேண்டுமெனவும்...

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை, மாவீரர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். யுத்த நிறைவிற்கு பின்னர் சிதைக்கப்பட்ட குறித்த துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக் கல்லறை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. படையினர் வசமிருந்த கனகபுரம்...

All posts loaded
No more posts