- Tuesday
- May 13th, 2025

இலங்கையில் பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்வதில் அரச துறைக்கும் தனியார் துறைக்கும் அடுத்தபடியாக, மூன்றாவது துறையாகக் கூட்டுறவுத்துறை உள்ளது. 'ஒருவர் அனைவருக்காகவும் அனைவர் ஒருவருக்காகவும்' என்ற உயரிய கோட்பாடோடு இயங்கும் கூட்டுறவுத்துறை சமூகத்தில் சகல மட்டங்களிலும் கட்டியெழுப்பப்படல் வேண்டும். அந்த வகையில், கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் முதற்படிக்கட்டாக, மாணவர் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவற்றைப் பலப்படுத்துவதற்குப் பாடசாலைகள் முன்வர...

சூழலியல் விவசாயத்தை நோக்கி என்னும் தொனிப்பொருளில் சேதன விவசாயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (03.07.2015) யாழ் பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. விவசாய இரசாயனங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் மூலமும் உணவுச்சங்கிலிகள் மூலமும் இரசாயன நஞ்சுகள் உடலைச் சென்றடைவதால் மனித ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக விவசாய இரசாயனங்களைப்...

வன்னிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென முன்மாதிரியாக அவர்களைத் தொழில் முனைவோர்களாகக் கொண்டு பயணிகள் ஓய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதற்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் செலவிட்டுள்ள பணத்தில் ஒரு டொலரேனும் வீண் போகாது. வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர். அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் என்று அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னிவள சுய...

மாணவர்களிடம் எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் அதிகமாக இருக்கிறது. மாணவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்பார்கள். அந்தவகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் நினைத்தால் எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும். சூழல் பாதுகாப்பின் மைய விசையாகச் செயற்பட மாணவர்கள் முன்வர வேண்டும் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். வடமாகாண சுற்றாடல்...

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கான கிரிகைகள்! 2009 ம் ஆண்டு மேமாதம் 18ம் திகதிமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட அனைத்து ஜீவஆண்மாக்களிற்காகவும் சாந்திகிரிகைகள் இன்று கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வடமாகாண ஐக்கியதேசியகட்சியின் அமைப்பாளர் திரு.துவாரகேஸ்வரனின் ஏற்பாட்டில் மிக அமைதியானமுறையிலே நடைபெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சீவி விக்கினேஸ்வரன் அவர்களும் வடமாகாண...

ச(ன்)னத்தின் சுவடுகள் , மற்றும் நாங்களும் மனிதர்களே என்ற இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 10 – 05 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உணர்வுபுர்வமாக நடைபெற்றுள்ளது. தமிழர்களின் வலிசுமந்த காலத்தின் பதிவாக மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 200 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளையசமூக...

தமிழறிஞரும் மூத்த ஆசிரியருமான ம.கங்காதரம் அவர்களின் “தமிழ் எழுத்துக்கள் நேற்று - இன்று – நாளை” நூலின் அறிமுகவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 19.04.2015 அன்று நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் த.சிறீஸ்கந்தராசா வரவேற்பரை நிகழ்த்துகிறார். முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்த யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நா.சண்முகலிங்கன் அவர்கள் நூலாசிரியர் ம.கங்காதரம்...

ஊர்காவற்துறை தம்பாட்டியில் ரூபா இரண்டு கோடி முப்பது இலட்சம் ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை நேற்று முன்தினம் புதன்கிழமை (08.04.2015) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் நோர்வே நாட்டின் நிதிப்பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலை, தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுவையும் போசாக்கு மிக்கதுமான நண்டுக்கு சர்வதேச அளவில்...

கவிஞர் புதுவை இரத்துனதுரை தொடர்பான விபரங்களைத் தெரியப்படுத்துமாறு கோரி அவரது குடும்பத்தினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கையளிக்கக் கோரி என்னிடம் கடிதம் தந்திருந்தனர். மாகாண ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்திருந்தபோது அக்கடிதத்தை அவரிடம் கையளித்திருந்தேன். பொதுமக்கள் சிலர் தந்த முறைப்பாட்டுக் கடிதங்களையும் அவரிடம் கொடுத்திருந்தேன். பொதுமக்களின் முறைப்பாட்டுக் கடிதத்துக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து...

வடமாகாண முதல்வர் தலைமையிலான குழுவினர் வளலாயில் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (17.03.2015) சென்று,மீள்குடியேறுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடம் கேட்டறிந்து கொண்டனர். இராணுவத்தால் முகாம்களை அமைப்பதற்கு எனவும், உயர்பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதற்கெனவும் கையகப்படுத்தப்பட்ட தமது நிலங்களை விடுவிக்கக் கோரிஇடம்பெயர்ந்த மக்கள் பல தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் விளைவாக வலிகிழக்கு...

கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் காரணமாக, இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் இந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்துள்ளார்கள். யுத்த அகதிகளாகவும் அரசியல் அகதிகளாகவும் இடம்பெயர்ந்த நாம் வருங்காலத்தில் சூழலியல் அகதிகளாகவும் இடம் பெயர வேண்டிய அவலம் நேர்ந்துவிடக் கூடாது என்று வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு...

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 'சென்றல் நைட்' வருடாந்த ஒன்றுகூடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலானது நேற்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின்...

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.01.2015) வவுனியா நகரசபை மண்டபத்தில் கோலாகலமாக நிகழ்ந்தேறியது. வடக்கின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தையொட்டி உழவர் பெருவிழாவை நடாத்தி வருகிறது. கடந்தவருடம் இவ்விழா கிளிநொச்சியில் இடம்பெற்றதையடுத்து இம்முறை வவுனியாவில்...

இரணைமடுக்குளத் திட்டத்தின் நோக்கம், கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மாத்திரம் அல்ல. யாழ்ப்பாணத்துக்கான உணவுப்பாதுகாப்பும் இரணைமடுக் குளத்திலேயே தங்கியுள்ளது. இதனால்தான், இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் எடுத்து வரும் மத்திய அரசின் திட்டத்துக்குப் பதிலாக நாம் மாற்றுத் திட்டத்தை முன்வைக்க நேர்ந்தது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இரணைமடுக்குளத்தின் 95ஆவது...

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றய தினம் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் வெகுவிமர்ச்சியாக கொண்டாடபட்டது. நேற்று காலை பல்கலைக்கழக பிரதான வாயிலில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, மாணவர்கள் பாரம்பரிய முறைப்படி வெடிகள் கொழுத்தி கொண்டாடினர். கலைப்பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கடந்த வருடத்தினைப் போன்று இந்த...

தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்திருக்கும் இயக்குநர் பாரதிராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை (21.12.2014) மரியாதை நிமித்தமாக வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் அவர்களை அவரது வாசஸ்தலத்துக்குச் சென்று சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பில் வடக்கு முதல்வருடன் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் கலந்து கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ், புத்தாண்டு தின நிகழ்வுகள் யாழ். கோட்டைக்கு அருகாமையில் விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் வெள்ளிக்கிழமை (19) இரவு இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை ஆகியோர் கலந்து கொண்டு...

2015 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசிர்வாதம் பெற்றார். முதலில் பேலியகொடை வித்தியலங்கார பிரிவினாவுக்கு சென்ற ஜனாதிபதி பிரிவினாவின் அதிபர் களனி பல்கலைக்கழக வேந்தர் வண.வெலிமிட்டியாவே குசலதம்ம நாயக்க தேரரைச்சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். பிரிவினாவுக்கு வருகை தந்திருந்த பொதுமக்களும் ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்....

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஸவினை ஆதரித்து இன்று காலை யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியினால் மோட்டார் வாகன ஊர்வலம் நடாத்தப்பட்டது. இதன் போது யாழ் மாவட்ட சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் வட மாகாண சபை உறுப்பினருமான இராமநாதன் அங்கஜன் கலந்து கொண்டார். இந்நிகழ்வு அக்கட்சி காரியாலயத்தில் இருந்து ஊர்வலமாக வைத்தியசாலை வீதி,வேம்படி...

All posts loaded
No more posts