Ad Widget

வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி சமய வழிபாடுகளில்!

2015 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசிர்வாதம் பெற்றார்.

முதலில் பேலியகொடை வித்தியலங்கார பிரிவினாவுக்கு சென்ற ஜனாதிபதி பிரிவினாவின் அதிபர் களனி பல்கலைக்கழக வேந்தர் வண.வெலிமிட்டியாவே குசலதம்ம நாயக்க தேரரைச்சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். பிரிவினாவுக்கு வருகை தந்திருந்த பொதுமக்களும் ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

அதனையடுத்து களனி ரஜமகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அங்கு விசேட பூஜைகளில் கலந்துக்கொண்டார். களனி ரஜமகா விஹாரையின் அதிபர் கலாநிதி கொள்ளுபிட்டியே மஹிந்த சங்கரக்கித்த தேரர் தலைமையிலான மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.

அடுத்து களனி ஸ்ரீ உத்பலவர்ண விஷ்ணு தேவாலயத்துக்குச் சென்ற ஜனாதிபதி அங்கும் விசேட ஆசிர்வாத பூஜைகளில் கலந்துக்கொண்டார்.தேவாலயத்தின் இருமருங்கிலும் கூடியிருந்த பொது மக்கள் ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, மேர்வின் சில்வா, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ,பிரதி அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, சரண குணவர்த்தன, துலீப் குணவர்த்தன, ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட ஆகியோரும் ஜனாதிபதியுடன் சென்றிருந்தனர்.

raja-baksha-1

raja-baksha-2

raja-baksha-3

raja-baksha-4

Related Posts