- Tuesday
- May 13th, 2025

தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் பண்பாட்டுப் பெருவிழா நடைபெற்றது. வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு, யாழ்.கலாச்சார பேரவை, யாழ்.மாவட்டச் செயலகம் இணைந்து நடத்திய யாழ்.பண்பாட்டு பெருவிழா நேற்றுகாலை 9 மணிக்கு ஆரம்பமானது. யாழ். மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தலமையில் நடைபெற்ற இப்பண்பாட்டு பெருவிழாவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம...

யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் தேசிய கடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் கடற்கரையோராங்களை பாதுகாத்தல் சம்பந்தமான விழப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்புறமாக இந்த விழப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர்...

இன்று செவ்வாய்க்கிழமை 15ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தில் சர்வதேச விசாரணையை வலியூறுத்தியூம் உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்தும் கையழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் பெருமளவான மாணவர்கள் ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு கையொப்பங்களை இட்டனர். மேலும் படங்களுக்கு..

வடமாகாண விவசாய அமைச்சால் 23 விவசாயப் போதனாசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை (14.09.2015) விவசாய அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு நியமனக்கடிதங்களை வழங்கி வைத்துள்ளார். வடமாகாண விவசாயத் திணைக்களத்தில் விவசாயப் போதனாசிரியர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 161. எனினும் 85 பேரே...

சர்வதேச விசாரணை பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தும் நடை பயணம் கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சியில் பழைய மாவட்ட செயலகம் முன்பு ஏ9 வீதியில் ஆரம்பமாகியது தொடர்ந்து இன்று 4 ஆம் நாள் யாழ்பாணத்தினை வந்தடைந்துள்ளது. சற்றுமுன்னர் செம்மணியினை வந்தடைந்து மக்கள் படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் தொடர்கிறது. இன்று பிற்பகல்...

கைதிகள் தினமான கடந்த சனிக்கிழமை சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனக்கோரி முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. மேற்படி போராட்டம் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தரப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு முல்லைத்தீவூ தனியார் பஸ் நிலையத்தில் ஒன்று...

யாழ் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் போரா முஸ்ஸிம் இனத்தவர்களின் பழைமைவாய்ந்த பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. முதற்தடவையாக போரா முஸ்ஸிம் இன உலகத்தலைவர் செரன முகியதீன் சையூதீன் நேற்று யாழ் மாவட்டத்திற்கு விஐயம் செய்தார். அவர் இன்று யாழ் ஆஸ்பத்திரி வீதியில் புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட போரா முஸ்ஸிம் பள்ளிவாசலை திறந்து வைத்தார். இப்பள்ளிவாசல்...

யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாணவர்களின் நூற்றாண்டு விழாப் பேரணி இடம்பெற்றது. இன்று 09.09.2015 புதன்கிழமை காலை 7 மணியளவில் ஆரம்பமான குறித்த பேரணி 9.30 மணியளவில் நிறைவடைந்தது. 1915 – 2015 நூற்றாண்டு விழாவை பொதுமக்களுக்கு அறியத் தரும் முகமாக அலங்கரிக்கப்பட்ட ஊர்தி முன்னே செல்ல மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள'சூழலியல் விவசாயத்தை நோக்கி' என்னும் விவசாயக் கண்காட்சி நேற்று புதன்கிழமை (02.09.2015) ஆரம்பமாகியுள்ளது.நல்லூர் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இக்கண்காட்சியை வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தொடக்கி வைத்துள்ளார். உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்ற விவசாயச்...

ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரே ஒரு புகைப்படம் சொல்லிவிடும். விட்நாமில் அமெரிக்கா நடத்திய கொடூராத்தை உலகுக்கு காட்டியது ஒரு புகைப்படம் தான், ஆப்ரிக்காவில் நிலவிய கொடிய வறுமையை சரியாக உணர்த்தியது ஒரே ஒரு புகைப்படம் தான். தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது கூட அறியாத நிலையில் போரில் ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பலியாகிவருகிறார்கள்....

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப்பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் அமைந்திருக்கும் வைரவர் ஆலயத்தில் 33 வருடங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் சனிக்கிழமை (29.08.2015) வழிபாடு இடம்பெற்றுள்ளது. ஊரவர்களால் 'ஜயன்' என்று அழைக்கப்படும் இந்த வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற இவ்விசேட மடைப்பொங்கல் நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் க. சிவநேசன் ஆகியோரும்...

சிறுவயது முதலே பொதுப்பணிகளில் ஈடுபட்டு, இலட்சிய தாகத்தை வளர்த்துக்கொள்பவர்கள் பின்னாளில் அனைவராலும் போற்றப்படும் தலைவர்களாக உருவாகிறார்கள். இவர்கள் அரசியல் தலைவர்களாகவும் பரிணாமிப்பது உண்டு. இதற்கு அமரர்,மாமனிதர் சிவமகாராசா ஓர் உதாரணம். ஆனால், இன்று அரசியல்வாதிகள் பெரும்பாலும் உருவாக்கப்படுகிறார்கள் என்று வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். அமரர் சி.சிவமகாராசா கூட்டுறவுத்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதோடு, இரண்டு...

இலங்கை அரசால் வடமாகாணத்தில் நியமனம் செய்யப்பட இருக்கும் 361 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களில் 332 பேர் சிங்களவர்கள் எனத் தெரியவந்ததையடுத்து, தமிழ் மக்களுக்கு உரிய நியாயம் விரைவில் கிடைக்காவிடில் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வடக்கில் நியமனங்களில் 90 விழுக்காடு சிங்களவர்கள் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று புதன்கிழமை (12.08.2015) யாழ்...

ஈழத்தின் முதல் தமிழ்ப் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரிய பிரபாலினி பிரபாகரனின் ‘குயின் கோப்ரா' இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கங்கை அமரன், பாடகர் மாணிக்க விநாயகம், ஸ்ரீகாந்த் தேவா, பரமேஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குயின் கோப்ரா இசை ஆல்பத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன....

யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணிகளின் உற்பத்தியை வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று வியாழக்கிழமை (30.07.2015) ஆரம்பித்து வைத்துள்ளார். வட்டு கிழக்கு சித்தங்கேணியில் இயங்கும் அந்திரான் ஜனசக்தி தோற்பொருள் உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பெண்களுக்கான ஒரு தொழில் முயற்சியாகவே இந்த இறப்பர் பாதணிகள் உற்பத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கூட்டுறவு...

வடமாகாண கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் பனை அபிவிருத்தி தொடர்பான ஆய்வரங்கு செவ்வாய்க்கிழமை (28.07.2015) யாழ் நகரில் உள்ள கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றுள்ளது. வடமாகாண கூட்டுறவு அமைச்சு கடந்த 22 ஆம் திகதி தொடங்கி 28 ஆம் திகதி வரையான பனை அபிவிருத்தி வாரத்தில் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே,...

வடமாகாண பனை அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. ஒரு வாரம் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடமாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான த.குருகுலராசா நேற்று புதன்கிழமை (22.07.2015) ஆரம்பித்து வைத்துள்ளார். பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களும் பனை அபிவிருத்திச் சபையும் பதிநான்கு காட்சி அறைகளில் பனை...

புனித நோன்புப் பெருநாள் நாடெங்கும் முஸ்லிம் பெருமக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 7 மணியளவில் சிறப்பு தொழுகை நிகழ்வில் பங்கேற்ற முகமதியா ஜும்மா பள்ளிவாசல் பிரதான இமாம் எம்.ஐ மஹமூட் பலாஹி விசேட சொற்பொழிவை ஆற்றினார். இதன்போது பெருந்திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

வடமாகாணத்தின் முதலாவது பிளாஸ்ரிக் மீள்சுழற்சி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா யாழ் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட காக்கைதீவில் இன்று வெள்ளிக்கிழமை (10.07.2015) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். மனித ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை...

All posts loaded
No more posts