- Saturday
- November 7th, 2026
பெற்றோர்கள் பிள்ளையைக் காணவில்லை என பொலிஸாரிடம் முறையிட்ட உடனேயே அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், மாணவி வித்தியாவின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 29வது அமர்வு நேற்று கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவிக்கு அஞ்சலி உரை நிகழ்த்தப்பட்டது. அந்த...
பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்குவதற்கு நான் ஒருபோதும் இடமளியேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். போருக்கு பின்னரான காலத்தில் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பௌதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மாத்தறையில் நடைபெற்ற 6ஆவது வெற்றிவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதற்காக முன்னின்று உழைத்த...
முள்ளிவாய்க்காலில் நாம் தோற்றுப் போகவில்லை. அது தற்காலிகப் பின்னடைவு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் பெற்ரோர், உறவினரை இழந்த பிள்ளைகளை சந்தித்து அவர்களுடன், இறுதிப் போரில் உயிர் நீத்த அனைவருக்கும் சுடரேற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்விலேயே...
போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கான நீதியைத் தமிழ்த்தரப்பு வேண்டி நிற்பதன் நோக்கம் வெறுமனே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல. இது தொடர்பில் வெளிக்கொணரப்படுகின்ற உண்மைகள், தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்த உதவும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவுதினம், திங்கட்கிழமை (18)...
விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும் வராதா என்று மக்கள் இப்போது ஏங்க ஆரம்பித்துள்ளனர் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை ( 15.05.2015 ) புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில்...
"எனது மீள்வருகை அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக என்னைக் கைதுசெய்ய அரசு முயற்சிக்கின்றது." - இவ்வாறு கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. "பழிவாங்கலின் பின்னணியில் பிரதமர் ரணிலே உள்ளார். என்னையும் குற்றவாளியாக்கி பழிவாங்கவே ரணில் முயற்சிக்கின்றார். ஆனால், சவால்களுக்கு முகம்கொடுக்க நான் தயார்" - என்றும் அவர் கூறியுள்ளார். போரால் பாதிக்கப்பட்ட...
இப்பவும் மத்தியே எம்மை வழிநடத்திவருகிறது. நாங்கள் சேர்ந்தே செய்வோம் வாருங்கள் என்று கூறிவிட்டு கடிவாளத்தை சட்டப்படி தம்வசம் வைத்திருக்கின்றனர் எனவே வெகுவிரைவில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். மாந்தை கிழக்கு பாலிநகரில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கடைத்தொகுதி திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்....
கூட்டுறவு அமைப்புகள் பல சாதனைகளை நிகழ்த்திய காலம் ஒன்றிருந்தது. ஆனால், இன்று கூட்டுறவுத்துறை நலிவடைந்திருப்தோடு, கூட்டுறவு அமைப்புகளுக்கும் சமூகத்துக்கும் இடையிலான இடைவெளியும் அதிகரித்து வருகிறது. கூட்டுறவுத்துறையின் இந்தச் சரிவுக்குப் பல காரணங்கள் உண்டு. அதில் இளையோர் பற்றாக்குறைவும் ஒன்று. இளையோரை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டால் கூட்டுறவுத்துறைக்குப் புதுவேகம் பிறக்கும் என்று வடக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...
கௌரவ சபாநாயகர் அவர்களே!.... 19 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்கான இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகின்றமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். 1978 இல் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான காலஞ்சென்ற ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சி முறையை அறிமுகமாக்கியிருந்தார். அது நடைமுறைக்கு வந்தபோது தென்னிலங்கையிலிருந்து நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையை...
ஸ்ரீ லங்காவின் சுதந்திர ஜனநாயகத்தை மீண்டும் பாதுகாத்து அந்த வரலாற்று கௌரவம், கட்சி பேதங்கள் இன்றி சகல கட்சிகளுக்கும் கிடைப்பதற்கு இன்றிலிருந்து இன்னும் ஒன்றைநாட்கள் இருகின்றன. அந்த அதிர்ஷ்டத்தை உதயமாக்கி கொள்ளுமாறு நான் சகலரிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு கையுயர்த்துவதை விட வெறொரு கௌரவம் இல்லை என்றும்...
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்வானது முதல் சர்ச்சைகளுக்குக் குறைவில்லாதவர் நீதியரசர் ச.வி.விக்னேஸ்வரன். அண்மைக் காலமாக அவரது கருத்துக்கள் தென்னிலங்கையையும் இந்தியாவையும்கூட ஆட்டம் காண வைத்திருக்கின்றன. கூட்டமைப்பிலிருந்து ஒரு சில கட்சிகள் பிரிந்து சென்று வேறு கட்சிகள் மற்றும் உதிரிகளுடன் சேர்ந்து மாற்று அணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளின் பக்கம் சாய்கிறார் என்பது அவரைச் சுற்றி...
100 நாள் திட்டம் தமிழ் மக்களுக்கு எந்தவித நலனையும் செயற்படுத்தவில்லை என்ற ஏக்கம் எல்லோர் மனதிலும் உள்ளது. எனவே இந்த புதிய அரசின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையினை ஒன்றுபடுத்தி தமிழினத்திற்கு உரிய விடிவினை மிகவிரைவாக பெற்றுத்தருவதே தந்தைக்கு செய்யும் அஞ்சலி என நல்லை ஆதீன குரு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தந்தை செல்வாவின் 38...
நாங்கள் கொழும்பிலும், வடக்கிலும் எவ்வாறானதொரு காத்திரமான நல்லாட்சியை எதிர்பார்க்கின்றோமோ அதேபோல யாழ்ப்பாணத்திலும் சிறந்த நிர்வாகம் அமைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். பொருளாதார அமைச்சின் கீழ் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி யாழ். கோப்பாய் பிரதேச செயலகர் பிரிவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.அதில் கலந்து கொண்டு...
நாட்டு மக்கள் தொடர்ந்தும் அடிமை நிலையில் வைத்திருக்க விரும்பும் சிலரே நாட்டில் குழப்பத்தை தோற்றுவித்து வருவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு நேரடியாக உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். சிறுபான்மை சமூகங்களுக்கு சிறப்புச் சலுகை வழங்குவதாகவும் வடக்கில் இராணுவம்...
"ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான தேசிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஆக்கபூர்வமான சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன'' - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடைகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின்...
போர் முடிவுக்கு வந்த பின்னரும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றங்கள் இதுவரை பூரணப்படுத்தப்படவில்லை. போரால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான அபிவிருத்திகளும் முழு அளவில் மக்களைச் சென்றடையவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டில் இயங்கும் புலம்பெயர் மக்களின் அமைப்பான அன்னை திரேசா நற்பணி மன்றம், யாழ்ப்பாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை...
மாகாண சபையினை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள முடியும் எனவும் மாகாண சபையினை செயற்பட வைக்க முடியாவிட்டால், அந்த மாகாண சபை தேவையில்லை என கூறமுடியும் எனவும், முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். ஜனநாயக சக்திகள் மற்றும் சிங்கள மற்றும் ஏனைய சமூகத்தினரும் இணைந்து பேச்சு நடத்தி மாகாண சபைகளை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும்...
வடமாகாணம் போரினால் பாதிக்கப்பட்டதால் பல தொழிற்சாலைகளை மீளவும் அரம்பிக்க முடியாமல் உள்ளது.இதனால் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருப்பதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கிராமப் புற பெண்களை தொழில் முனைவோராக மேம்படுத்தும் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், கடந்த 30 வருடங்களுக்கு...
சர்வதேசமும் உள்நாட்டு அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையில் அந்தச் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் நாம் பூச்சிய நிலைக்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். நேற்று வியாழக்கிழமை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்...
இந்திய அரசால் வருடா வருடம் வடமாகாண மாணவர்களுக்கு என இந்திய அரசால் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் குறித்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பித்து பயில்வோர் வடமாகாணத்தில் குறைவாகவே உள்ளதாக இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மலரட்டும் புதுவசந்தம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இந்திய அரசால்...
Loading posts...
All posts loaded
No more posts
