Ad Widget

தன்னம்பிக்கையுடனும், முயற்சிடனும் செயற்பட்டால் வாழ்வில் வெற்றி பெறுவது இலகு

வடமாகாணம் போரினால் பாதிக்கப்பட்டதால் பல தொழிற்சாலைகளை மீளவும் அரம்பிக்க முடியாமல் உள்ளது.இதனால் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருப்பதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

vetha-nayagan

நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கிராமப் புற பெண்களை தொழில் முனைவோராக மேம்படுத்தும் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

கடந்த 30 வருடங்களுக்கு மேலான இடம்பெயர்வுகளால் பலர் தன்னம்பிக்கையை மற்றும் ஆற்றலை இழந்தவர்களாக இருக்கின்றோம் இதுவொரு பாரிய பின்னடைவு ஆகும்.

போர் காரணமாக முகாம்களுக்குள் அடக்கப்பட்டதாலே சிலர் முயற்சியற்றவர்களாக இருந்திருக்கின்றனர்.குறிப்பாக சில விவசாயிகள் அதிகளவில் நெல்லைத்தான் விரும்புகின்றார்கள்.ஏனென்றால் சோம்பறிகளுக்குரிய உற்பத்திதான்.தொழிற்பாடுடைய விவசாயிகளுக்கான உற்பத்தி அல்ல.

எனவே நம்முடைய முயற்சியால் சிறப்பாக மீண்டெழுந்து தன்னம்பிக்கையுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.

அதாவது முல்லைத்தீவில் பார்த்திருக்கிறேன் கணவன்மார் இல்லாத பெண்கள் பல முயற்சியாளர்களாக இருக்கிறார்கள்.

தன்னம்பிக்கையுடனும், முயற்சிடனும் செயற்பட்டால் வாழ்வில் வெற்றி பெறுவது இலகு எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts